
CPU VS GPU VS APU என்றல் என்ன?
முதலில் இந்த CPU, GPU மற்றும் APU ன் விரிவாக்கத்தை பார்க்கலாம்.
- CPU ( சென்றல் புரோசெசிங் யூனிட் )
- GPU ( கிராபிக் புரோசெசிங் யூனிட் )
- APU ( ஆக்ஸிலரேட்டேட் புரோசெசிங் யூனிட் )
Central Processing Unit (CPU)
Graphics Processing Unit (GPU)
Accelerated Processing Unit (APU)
APU = CPU + GPU
உங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுப்பது எப்படி
சரியான சிபியு வாங்குவது எப்படி
இந்த சிபியு இன்டெல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் பல வகைகள் உள்ளது. அதில் உங்களுக்குத் தேவையானதை வாங்குவது எப்படி என்று பார்க்கலாம்.
இந்த காலகட்டத்தில் நீங்கள் ஒரு சிபியு வாங்க வேண்டுமென்றால் அது குறைந்தபட்சம் நான்கு கோர் மற்றும் நான்கு திரட்ஃடு ( 4 core and 4 threads ) இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும். ஏனெனில் இதைவிட குறைவான கோர் மற்றும் திரட்ஃடு ப்ராசசர் கடைகளில் உள்ளது. எனவே உங்களுக்கு குறைவான விலையில் கிடைக்கிறது என்று தவறான பிராசஸர் வாங்கி விட வேண்டாம்.
உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம், ஏன் 4 கோர் மற்றும் 4 திரட்ஃடு இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும் என்று. ஏனெனில் இதைவிட குறைந்த அளவுள்ள கோர் பிராசஸர் வாங்கினால் அதன் வேகம் மிகவும் குறைவாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இன்றைய கால மென்பொருள்கள் எதுவும் அதற்கு பயன்படாது. ஆனால் இதன் விலை மிகவும் குறைவாகத்தான் இருக்கும். எனவே நீங்கள் இதை பார்த்து வாங்க வேண்டும்.
சிபியு-ல் எத்தனை வகைகள் உள்ளது
இன்டல் சிபியூ ல் பல வகைகள் உள்ளது. இந்த இன்டெல் நிறுவனம் பல வருடங்களுக்கு முன்னால் இருந்து இந்த பிராசஸர் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தில் பிராசசர் வாங்க வேண்டும் என்றால் இன்றைய நிலவரப்படி நீங்கள் குறைந்தபட்சம் நான்கு கோர் உடைய பிராசஸர் வாங்க வேண்டும். 4 கோர் உடைய பிராசஸர் மற்றும் அதைவிட அதிகமான கோர் உள்ள ப்ராசசர் வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- இன்டல் i3 ப்ராசசர் வகைகள்
- இன்டல் i5 ப்ராசசர் வகைகள்
- இன்டல் i7 ப்ராசசர் வகைகள்
- இன்டல் i9 ப்ராசசர் வகைகள்
மேலே உள்ள பிராசஸர் களில் ஏதாவது ஒரு பிராசஸர் மற்றும் அதில் உள்ள ஏதாவது ஒரு வகையை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
தேவையான ஜிபியு வாங்குவது எப்படி?
உங்கள் ஜிபியூ கணினியிலுள்ள ஒரு சில வேகத்தை அதிகமாக செய்து தரக்கூடிய ஒரு பகுதியாகும். இந்த ஜிபியூ ஏஎம்டி நிறுவனத்தின் படைப்புகளில் அதன் உள்ளேயே வரும். அந்த மெமரி போதுமானதாக இருக்கும். ஆனால் இன்டல் நிறுவனத்தில் வரும் மெமரி மிகவும் குறைவாக இருக்கும். எனவே நீங்கள் பெரிய விளையாட்டுக்கள் அல்லது படங்கள் தயாரிக்க உள்ளீர்கள் என்றால் நீங்கள் தனியாகத்தான் ஒரு கிராபிக்ஸ் மெமரி வாங்க வேண்டும்.
இந்த கிராபிக்ஸ் மெமரி நீங்கள் தனியாக வாங்க போகிறீர்கள் என்றால் உங்களுடைய வேலைக்கு அல்லது நீங்கள் உங்கள் கணினியில் எந்த வேலை செய்ய போகிறீர்களோ அந்த வேலைக்கு ஏற்றவாறு ஒரு கிராபிக்ஸ் கார்டு வாங்க வேண்டும். உதாரணமாக நீங்கள் உங்கள் கணினியில் படங்கள் மட்டும் தான் பார்க்கப் போகிறீர்கள் என்றால் உங்களுக்கு இந்த கிராபிக்ஸ் மெமரி தேவைப்படாது. பிராசஸர் உடன் வரும் கிராபிக்ஸ் மெமரி போதுமானதாக இருக்கும். நீங்கள் ஒரு சில விளையாட்டுகள் விளையாட போகிறீர்கள் என்றால் அந்த விளையாட்டில் குறிப்பிட்டுள்ளபடி கிராபிக்ஸ் மெமரி வாங்க வேண்டும். நீங்கள் ஒரு மிகப்பெரிய மென்பொருள் நிறுவ போகிறீர்கள் என்றால் அந்த மென்பொருளில் அது இயங்க எவ்வளவு மெமரி தேவைப்படும் என்று குறிப்பிட்டிருப்பார்கள். அதற்கு ஏற்றவாறு நீங்கள் கிராபிக்ஸ் கார்டு வாங்கிக் கொள்ளலாம்.
இந்த கிராபிக்ஸ் கார்டு பல முன்னணி நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் பலவகையான ரகங்கள் உள்ளது. அதில் உங்களுக்கு எது சரியானதாக இருக்கும் என்று நீங்கள் பார்த்து வாங்கிக் கொள்ளவேண்டும். ஏனெனில் குறைந்த அளவு மெமரி வாங்கினால் உங்கள் மென்பொருள் இயங்காது அதிக அளவு மெமரி வாங்கினால் உங்களுக்கு செலவு அதிகமாக இருக்கும்.
இந்த கிராபிக்ஸ் கார்டு விலை தோராயமாக 3 ஆயிரம் முதல் தொடங்கி பல ஆயிரங்கள் வரை இருக்கும்.
படிக்க : சிறந்த மடிக்கணினி வாங்குவது எப்படி? வாங்குவதற்கு முன் பார்க்க வேண்டியவை?
சிறந்த ஏ பி யு வாங்குவது எப்படி?
ஏ பி யூ என்ன என்று மேலே பார்த்து இருப்பீர்கள். இந்த ஏ பி யூ வில் கிராபிக்ஸ் கார்டு மற்றும் பிராசசர் மெமரி அடங்கியுள்ளது. இந்த ஏ பி யு , ஏஎம்டி நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. நீங்கள் மிகவும் குறைந்த விலையில் கிராபிக்ஸ் கார்டு உடன் கணினி வாங்க வேண்டுமென்றால், இந்த நிறுவனத்தின் பிராசஸர் வாங்கிக்கொள்ளலாம். இந்த நிறுவனத்தின் பிராசஸர் களில் உள்ள கோர் அளவு மிகவும் அதிகமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் திரட்ஃடு அளவும் அதிகமாக இருக்கும். எனவே இந்த ப்ராசசர் மிகவும் வேகமாகவும் குறைந்த விலையிலும் கிடைக்கும்.
இந்த நிறுவனத்தின் படைப்புகள் ஒரு சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் நீங்கள் ஏதாவது ஒரு பிராசஸர் வாங்கிக் கொள்ளலாம்.
ஏபியூ வில் உள்ள வகைகள்
- ரைசன் 3
- ரைசன் 5
- ரைசன் 7
- ரைசன் 9
மேலே உள்ள வகைகளில் நீங்கள் ஏதாவது ஒரு பிராசஸர் வாங்கிக் கொள்ளலாம்.
இந்த நிறுவனத்தின் படைப்புகளில் குறைந்த விலையுள்ள பிராசஸர் மிகப்பெரிய அளவு விளையாட்டுகள் மற்றும் மென்பொருள்களுக்கு ஒத்துழைக்காது. எனவே நீங்கள் தனியாக ஒரு கிராபிக்ஸ் கார்டு வாங்க வேண்டும். அந்த கிராபிக்ஸ் கார்டு நீங்கள் பயன்படுத்தும் மென்பொருள் மற்றும் விளையாட்டுகளுக்கு போதுமானதாக உள்ளதா என்று சரிபார்த்து வாங்க வேண்டும்.
படிக்க : கணினி மதர்போர்டு வாங்குவது எப்படி? தேவையான மதர்போர்டு தேர்வு செய்வது எப்படி?
கணினியின் விலை எவ்வளவு இருக்கும்?
நீங்கள் குறைந்த பணத்தில் ஒரு நல்ல அல்லது போதுமான திறனுடைய கணினி வாங்க விரும்பினால் இன்டெல் நிறுவனத்தின் சிபியூ தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இந்த சிபியு வின் விலை 5,000 முதல் 10,000 வரை வைத்துக்கொள்ளலாம். இதில் உருவாக்கப்படும் கணினியின் மொத்த விலை 25,000 முதல் 30 ஆயிரம் வரை இருக்கும்.
குறைந்த விலையில் உங்களுக்கு கிராபிக்ஸ் மெமரியுடன் ஒரு கணினி வாங்க வேண்டும் என நினைத்தால், அல்லது ஒருசில விளையாட்டுகளை இயக்கவேண்டும் என நினைத்தால் நீங்கள் ஏ எம் டி நிறுவனத்தின் பிராசசர் வாங்கிக்கொள்ளலாம். இதன் விலை 27 ஆயிரம் முதல் 32 ஆயிரம் வரை இருக்கும்.
நீங்கள் ஒரு சில பெரிய அளவு விளையாட்டுகளை விளையாட போகிறீர்கள் அல்லது பெரிய அளவு மென்பொருள்கள் இயக்கப் போகிறீர்கள் என்றால் இன்டெல் அல்லது ஏ எம் டி நிறுவனத்தின் ப்ராசசர் வாங்கிக்கொண்டு கூடுதலாக கிராபிக்ஸ் மெமரி வாங்க வேண்டும். இப்பொழுது உங்கள் கணினியின் மொத்த விலை 35 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை இருக்கும்.
இதில் விலை உயரக் காரணமாக இருக்கும் பொருள்கள் கிராபிக்ஸ் கார்டு மற்றும் பிராசஸர் ஆகும். எனவே உங்களுக்கு எது தேவைப்படுகிறது அந்த வகையான பிராசஸர் மற்றும் கிராபிக்ஸ் கார்டு வாங்கிக் கொண்டால் நீங்கள் உங்களுக்கு குறைந்த விலையில் கணினி உருவாக்க முடியும்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும், மேலும் இது போன்ற பதிவுகளுக்கு எங்கள் வலைதளத்தை பார்வையிடவும்.
நன்றி.