best-tablet-under-100000-in-india-2021-AtoZPC

Best Tablet Under Rs.10,000 in India (January 2021)

ADVERTISEMENT

Best Tablet

ஒருசில ஆன்லைன் வேலைகள் ஒரு பெரிய திரை தேவைப்படும். அப்படி பெரியதிரை வேண்டுமெனில் உங்களுடைய கணினி அல்லது மடிக் கணினியை பயன்படுத்த வேண்டும். ஆனால் கணினிகளில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை பயன்படுத்த முடியாது. ஆண்ட்ராய்டு பயன்படுத்தினால் வேலை சற்று குறைவாக இருக்கும். ஆனால் விண்டோசில் திறம்பட ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்த முடியாது.

உங்களுக்கு ஆண்ட்ராய்டு இணையதளம் பயன்படுத்த வேண்டும் மற்றும் ஒரு பெரிய திரையில் பயன்படுத்த வேண்டுமெனில் நீங்கள் டேப்லட் எனப்படும் ஆண்ட்ராய்டு சாதனங்களை வாங்கி பயன்படுத்தலாம். இந்த டேப்லட் சாதனங்கள் சாதாரண ஆண்ட்ராய்டு மொபைல் போல தான் இருக்கும். ஆனால் இதில் திரை மொபைல் திரையை விட பெரிதாக இருக்கும். உதாரணமாக உங்கள் தொலைபேசியில் திரை அளவு 6 இன்ச் இருக்கும் எனில் இந்த டேப்லட்டில் திரை அளவு 10 இன்ச் இருக்கும். இந்த டேப்லட் பலவகையான திரை அமைப்புகளில் கிடைக்கிறது. உங்களுக்கு எந்த திரை சரியாக இருக்குமோ அதை பயன்படுத்த முடியும்.

குறிப்பாக இந்த டேப்லெட் விலை சாதாரண தொலைபேசியின் விலையை விட குறைவாக இருக்கும். இதற்கு காரணம் ஒரு சில டேப்லெட் சாதனங்களில் சிம் கார்டு போட முடியாது. எனவே உங்களால் தொலைபேசியைப் பயன்படுத்த முடியாது. ஆனால் இதில் வைபை மற்றும் விபிஎன் போன்றவை இருக்கும். உங்களுடைய wi-fi நெட்வொர்க்கில் கனெக்ட் செய்து இணையதளம் மற்றும் டவுன்லோட் செய்வது போன்றவற்றை நீங்கள் பயன்படுத்த முடியும்.

இந்த டேப்லெட் சாதனங்கள் பலவகையான வெரைட்டிகளில் கிடைக்கிறது. சாதனங்களில் திரை சிறிதாகவும் பெரிதாகவும் கிடைக்கும். வைபை ப்ளூடூத் போன்றவை இருக்கும். உங்களுக்கு சிம்கார்டு போடக்கூடிய டேப்லெட் வேண்டுமெனில் அப்படிப்பட்ட டேப்லெட் சாதனங்களும் இருக்கிறது. இதில் ரம் மற்றும் ரோம் அமைப்பு ஒரு ஜிபி முதல் தொடங்கி பல ஜிபி வரை கிடைக்கிறது மற்றும் ப்ராசசர் மீடியா டெக் முதல் ஸ்னாப்ட்ராகன் பயோனிக் போன்ற ப்ராசசர் களாக கிடைக்கிறது. உங்களுக்கு இதில் எது சரியாக இருக்கும் என்பதை நீங்களே தேர்வு செய்து வாங்கிக் கொள்ள முடியும்.

நாம் இந்த பதிவில் பார்க்க இருப்பது டேப்லட் சாதனங்கள் பத்தாயிரம் ரூபாய்க்கு உள்ள இருக்கக்கூடிய நல்ல மற்றும் குறைந்த வேலைக்கு பயன்படுத்தக்கூடிய சாதனங்களாக பார்க்கப் போகிறோம். இந்த சாதனங்களில் விலை திரை வடிவம் சாஃப்ட்வேர் அமைப்பு போன்றவை வேறுபட்டு இருக்கும். உங்களுக்கு எது சரியாக இருக்கிறதோ அதை தேர்வு செய்யவும்.

ADVERTISEMENT

குறிப்பு : இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள விலை இப்போது குறைந்து இருக்கலாம். ஆன்லைனில் சரிபார்த்துக் கொள்ளவும்

 

I Kall N11

₹6,499/-

நாம் முதலாவதாக பார்க்க இருக்கும் டேப்லட் ஐ கால் நிறுவனத்தின் எண் 11 என்ற மாடல் ஆகும். இந்த டேப்லெட் ஏழு இன்ச் எல்சிடி திரை கொண்டுள்ளது. இதில் வைபை மற்றும் போர் ஜி சப்போர்ட் உள்ளது. இந்த டேப்லட்டை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

இந்த டேப்லட்டில் ஏழு இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது ‌. இதில் 4 ஜிபி ரேம் மற்றும் 32gp சேமிப்பகம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 5 எம்பி கேமரா பின் பக்கத்திலும் முன்பக்கத்தில் இரண்டு எம்பி கேமரா ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டேப்லட் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்குகிறது. இந்த இயங்குதளம் ஆறாவது படைப்பான மார்ஷ்மல்லோ எனப்படும் தளத்தில் இயங்குகிறது.

ஐ கால் டேப்லெட் சாதனத்தில் நீங்கள் இரண்டு சிம் கார்டுகள் போட்டு பயன்படுத்திக் கொள்ள முடியும். இதில் வைபை வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் போன் கால் செய்வதற்கு கூட பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சாதனத்தில் நீங்கள் ஓடிஜி மூலம் பென்டிரைவ் போன்றவற்றை பொருத்திக்கொள்ள முடியும். இதை இரண்டு விதமான வண்ணங்களில் கிடைக்கிறது ‌. இந்த தொலைபேசியில் 3000 பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசியுடன் உங்களுக்கு சார்ஜ் அடாப்டர் ஓட்டி ஜி கேபிள் போன்றவை கிடைக்கும்.

இந்த ஏழு இன்ச் திரை மற்றும் இரண்டு சிம் போடும் வசதி கொண்ட இந்த டேப்லட் விலை ரூபாய் 7200 விக்கப்படுகிறது.

ADVERTISEMENT

 

Lenovo Tab E8

₹6,999/-

லெனோவோ நிறுவனத்தைப் பற்றி நீங்கள் அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு சிலர் லெனோவோ ஸ்மார்ட் போன்களை உபயோகப்படுத்திக் கொண்டு இருப்பீர்கள் . இந்த நிறுவனம் டேப்லெட் சாதனங்களை பல காலங்களாக வெளியிட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் படைப்பான டேப்லெட் இ8 பற்றி பார்க்கலாம்.

இந்த டேப்லெட் 8 இன்ச் டிஸ்ப்ளே அமைப்பை கொண்டு உள்ளது. இதில் சாதாரண டிஸ்ப்ளே அமைப்புதான் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பகம் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டேப்லட்டில் ஒரு மெமரி கார்டு போடும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 128 ஜிபி வரை மெமரி கார்டு பயன்படுத்த முடியும். கேமரா அமைப்பைப் பொருத்தவரை இதில் 5 எம்பி பின்பக்க கேமரா மற்றும் 2 எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மீடியா டெக் நான்கு பேர் கொண்ட பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

லெனோவோ டேப்லட் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் இயங்குகிறது. இந்த இயங்குதளம் ஆண்ட்ராய்டு படைப்பில் ஏழாவது படைப்பான நகெட் எனப்படும் தளத்தில் இயங்குகிறது. இந்த டேப்லட்டில் 4900 பேட்டரி அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்ய சார்ஜர் மற்றும் கேபிள் இதனுடன் கிடைக்கும். இந்த டேப்லட்டில் சிம் கார்டு போட்டு பயன்படுத்த முடியாது. அதனால் தொலைபேசியும் வேலை செய்யாது. ஆனால் இதில் வைபை வசதி கொடுக்கப்பட்டுள்ளது உங்களால் இன்டர்நெட் டவுன்லோடிங் போன்றவற்றை செய்ய முடியும்.

வைபை ப்ளூடூத் 8 இன்ச் டிஸ்ப்ளே 4900 பேட்டரி அமைப்பு 2 ஜிபி ராம் கொண்ட இந்த டேப்லெட் விலை ரூபாய் 8000 விலைக்கு விற்கப்படுகிறது.

ADVERTISEMENT

 

Lenovo Phap 2

₹9,999/-

மற்றுமொரு லெனோவோ நிறுவனத்தின் டேப்லட் பேப் 2 ஆகும். இந்த டேப்லெட் மூலமாக நீங்கள் ஆடியோ மற்றும் வீடியோ கால்களை செய்து கொள்ள முடியும். இதில் சிம் கார்டு போடும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் டிஸ்ப்ளே ராம் ரோம் கேமரா பேட்டரி மற்றும் ப்ராசசர் பற்றிய விவரங்களை கீழே பார்க்கலாம்.

இந்த டேப்லட் 6.4 இன்ச் டிஸ்ப்ளே உடைய எச்டி டிஸ்பிளே ஆகும். இந்த டேப்லெட் உங்களுக்கு தொலைபேசி ஆகவும் வேலை செய்யும். தொலைபேசியில் பெரியதிரை வேண்டுமெனில் நீங்கள் இதை வாங்கிக் கொள்ளலாம். இதில் 3 ஜிபி ராம் மற்றும் 32 ஜிபி ரோம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் 128 ஜிபி வரை மெமரி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது ‌. இதில் 13 எம்பி முன்பக்க கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா என இரண்டு கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மீடியாடெக் பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆரம்ப கால பிராசஸர் தான் இருப்பினும் சிறிது வேலைக்கு நன்றாக செயல்படும் .

இதில்இரண்டு விதமான ஸ்பீக்கர் கொடுக்கப்பட்டுள்ளதால் உங்களுக்கு இந்த டேப்லெட் சுற்றியும் சத்தம் நன்றாக கேட்கும். இதில் டால்பி அட்மாஸ் டெக்னாலஜி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு சிம் நீங்கள் போட்டுக்கொள்ளலாம் அல்லது ஒரு சிம் ஒரு மெமரி கார்டு என போட்டுக்கொள்ளலாம். இதில் 2ஜி 3ஜி 4ஜி மற்றும் 4ஜி போலட் டெக்னாலஜியில் கொடுக்கப்பட்டுள்ளது ‌. இந்த டேப்லட்டில் உங்களுக்கு ஜிபியு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நீங்கள் ஒரு சில விளையாட்டுகளை நன்றாக விளையாட முடியும்.இதைப் பயன்படுத்தி இன்டர்நெட் சிம் மூலமாகவோ அல்லது wi-fi மூலமாகவோ கனெக்ட் செய்து பயன்படுத்த முடியும்.

இந்த தொலைபேசியில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு லாலிபாப் வெர்சன் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் பலவிதமான சென்சார்கள் கொடுக்கப் பட்டுள்ளதால் உங்களுடைய வேலை சற்று எளிமையாக முடியும். 4500 பேட்டரி உள்ளதால் உங்களுக்கு ஒரு நாள் நன்றாக சார்ஜ் நிற்கும். இதன் எடை 225 கிராம் இருக்கும்.

ADVERTISEMENT

இந்த 6.4 இன்ச் டிஸ்ப்ளே இரண்டு சிம் அல்லது மெமரி கார்டு 3ஜிபி ராம் 32 ஜிபி ஸ்டோரேஜ் 4ஜி வசதி வைபை வசதி இந்த ஆன்ட்ராய்டு டேப்லெட் விலை பத்தாயிரம் ரூபாய்.

 

Samsung Galaxy Tab A8

₹9,999/-

சாம்சங் நிறுவனத்தின் டேப்லெட் இதில் வாங்க வேண்டுமெனில் இந்த டேப்லட் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். இது சாம்சங் கேலக்ஸி டாப் எ 8 ஆகும். இந்த டேப்லட்டில் உள்ள வசதிகள் மற்றும் பயன்களை பற்றி பார்க்கலாம்.

இது ஒரு 8 இன்ச் டிஸ்ப்ளே உடைய டேப்லெட் ஆகும். இந்த டேப்லட்டில் 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ரோம் ஸ்டோரிஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மெமரி கார்டு போடும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக 512 ஜிபி வரை ஸ்டோரேஜ் மெமரி கார்டு போட முடியும். இது இரண்டு வகையான கலர்களில் கிடைக்கிறது.

கேமராவை பொருத்த வரை 8 எம்பி கேமரா ஒன்று உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் இன்ஸ்டால் செய்யப்பட்டு ஆன்ட்ராய்டு வெர்ஷன் 9 போடப்பட்டுள்ளது. இந்த டேப்லட்டில் எச்டி டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு படம் சிறப்பாக தெரியும்.

ADVERTISEMENT

இதில் உள்ள வசதிகள் வைபை மட்டுமே. இதில் எந்த ஒரு சிம் கார்டும் போட்டு பயன்படுத்த இயலாது. ஆனால் இன்டர்நெட்டில் கனெக்ட் செய்து வீடியோ கால் மற்றும் வாய்ஸ் கால் போன்றவற்றை வாட்ஸ் அப்பில் செய்ய முடியும். இந்த டேப்லட் சாம்சங் நிறுவனம் உருவாக்கப்பட்டதன் காரணமாக இதன் வேகம் சற்று அதிகமாகவே இருக்கும். இதில் 5 ஆயிரத்து 500 பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்ய டிராவல் அடாப்டர் யுஎஸ்பி கேபிள் போன்றவை உங்களுக்கு கிடைக்கும்.

இந்த எட்டு இன்ச் டிஸ்ப்ளே 2 ஜிபி ராம் 32 ஜிபி மெமரி மற்றும் 5 ஆயிரம் பேட்டரி அமைப்பைக் கொண்ட இந்த டேப்லட் விலை 10,000 ரூபாயாக உள்ளது.

 

Huawei MatePad T8

₹9,999/-

ஹவாய் நிறுவனம் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இந்த நிறுவனம் ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லட் போன்ற பல சாதனங்களை உருவாக்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் படைப்பான ஹவாய் மேட் டி8 டேப்லெட் உள்ளது. இந்த டேப்லட் வசதி மற்றும் விலை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

இது ஒரு 8 இன்ச் டிஸ்ப்ளே உடைய ஐபிஎஸ் எல்சிடி கலர் திரையாகும். இதில் 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ரோம் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் இதில் 512 ஜிபி வரை மெமரி கார்டு போட்டுக்கொள்ள முடியும். இதன் கேமரா பொருத்த வரை 5 எம்பி முன்பக்க கேமரா மற்றும் 2 எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 5 ஆயிரத்து 500 மில்லி பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்ய மைக்ரோ யுஎஸ்பி மற்றும் சார்ஜர் இதனுடன் கிடைக்கும்.

ADVERTISEMENT

இந்த டேப்லட்டில் ஓடிசி சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பென்டிரைவில் உள்ள தரவுகளை நேரடியாக பார்க்க முடியும். இதில் மீடியாடெக் பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இரண்டு சிம் போடும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நீங்கள் வாய்ஸ் கால்கள் போன்றவற்றை செய்ய முடியும்.

இரண்டு சிம் மெமரி கார்டு 2ஜிபி ரேம் 32 ஜிபி மெமரி 8 இன்ச் மற்றும் 5 ஆயிரம் பேட்டரி அமைப்பைக் கொண்ட இந்த டேப்லட் விலை 10,000 ரூபாய் ஆகும்.

 

Samsung Galaxy Tab A10.1

₹13,999/-

இந்தப் பதிவில் பத்தாயிரம் ரூபாய் மற்றும் அதற்கு குறைவாக உள்ள டேப்லெட் மட்டுமே பார்ப்பதாக இருந்தோம். இருப்பினும் உங்களுக்கு விலை சற்று அதிகமாக இருந்தாலும் ஒரு நல்ல டேப்லெட் வாங்க வேண்டும் எனில் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் இ 10 வாங்கலாம். இதில் பலவகையான அம்சங்கள் உள்ளது. இதில் 6.2 இன்ச் எச்டி டிஸ்ப்ளே உடையது. இதில் சாம்சங் உடைய எக்ஸிநோஸ் ப்ராசசர் கொடுக்கப்பட்டுள்ளது ‌. இந்த டேப்லட்டில் 2ஜிபி ராம் மற்றும் 32gp சேமிப்பகம் உள்ளது. இதில் ஒரு மெமரி கார்டு போடும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது அதன்மூலமாக 512 ஜிபி வரை மெமரி கார்டு போட்டுக்கொள்ளலாம்.

இதன் கேமரா பொருத்த வரை 13 எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இது இரண்டு வகையான வகைகளில் கிடைக்கிறது. 2ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் என இரண்டு வகைகளாக இருக்கிறது. இதில் 3400 பேட்டரி அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் இதனுடன் ஒரு சில சாதனங்கள் வரும். இது ஆண்ட்ராய்டு 9 இயங்குதளத்தில் இயங்கும் .

ADVERTISEMENT

13 ஆயிரம் ரூபாய்க்கு இது ஒரு நல்ல டேப்லெட் ஆகும். சற்று வேகமும் அதிகமாக இருக்கும் அதிக காலமும் உழைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *