best-tablet-under-100000-in-india-2021-AtoZPC

Best Laptop Under 50,000 in 2021

ADVERTISEMENT

அனைவரும் மடிக்கணினி வாங்க வேண்டும் என்று ஆசை இருக்கும். அல்லது இந்த லாக்டௌன் காரணமாக குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்க மடிக்கணினி தேவைப்படும். அல்லது ஆன்லைனில் வேலை செய்ய உங்களுக்கு மடிக்கணினி தேவைப்படும்.

இது போன்று உங்களுக்கு ஒரு மடிக்கணினி தேவைப்பட்டால் நீங்கள் குறைந்த அளவு 35 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை மடிக்கணினி வாங்கலாம். நாம் இன்று பார்க்கப்போவது நாற்பதாயிரம் ரூபாயிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை உள்ள சிறந்த மடிக்கணினிகளை பற்றி. இந்த மடிக்கணினிகள் உங்களுடைய அனைத்து விதமான வேலைகளுக்கும் சரியாக இருக்கும்.

சரி இந்த மடிக்கணினிகள் மற்றும் அதன் விலை அதில் உள்ள சிறப்பு அம்சங்களைப் பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம். இந்தப் பதிவில் இப்போது உள்ள சிறந்த மடிக்கணினிகளை பற்றி குறிப்பிட்டுள்ளது. உங்களுக்கு வேறு ஏதேனும் மடிக்கணினி பிடித்திருந்தாலும் வாங்கிக் கொள்ளலாம்.

 

HP 15

₹50,000
11th gen i3, 15.6″, 8/1TB, win 10 Home, Ms Office, Fingerprint, 50k

ADVERTISEMENT

முதலில் பார்க்கப்போவது ஹெச்பி 15 என்ற மடிக்கணினி. எஸ்பி வகை மடிக்கணினிகள் மிகவும் நன்றாக இருக்கும். இந்த மடிக்கணினி இன்டெல் ப்ராசசர் கொண்டு இயங்குகிறது. இன்டல் இன் புதிய படைப்பான பத்தாவது தலைமுறை ஐ5 பிராசஸர் கொண்டு இயங்குகிறது. இதில் இந்த கிரேடட் கிராஃபிக்ஸ் உள்ளது. தனியாக இயங்கக்கூடிய கிராபிக்ஸ் கிடையாது. இந்த மடிக்கணினியில் 8gp ddr4 மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 1000 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் இதன் திரை 15.6 அங்குலம் அளவு இருக்கும். இது ஒரு நல்ல திரை ஆகும்.

இந்த மடிக்கணினி விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இயங்குகிறது.மற்றும் இதனுடன் மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் இலவசமாக கிடைக்கும். இதிலுள்ள ஒரு முக்கியமான சிறப்பம்சம் பிங்கர் பிரிண்ட் செக்யூரிட்டி ஆகும்.

இவ்வளவு குறைந்த விலையில் பிங்கர் பிரிண்ட் செக்யூரிட்டி வருவது நல்லது. உங்களுக்கு இந்த மடிக்கணினி பிடித்திருந்தால் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இது சற்று நன்றாகவே இருக்கும்.

இதன் எடை இரண்டு கிலோக்கு குறைவாக இருக்கும். இந்த மடிக்கணினியின் விலை 50,000 ரூபாயாக இருக்கிறது.

 

MI Notebook 14

₹43,999/-
I5 10th, 2gb nvidia MX 250, 512gb,8gb, 1.5kg, 14″

ADVERTISEMENT

உங்களுக்கு ஒரு சிறந்த மடிக்கணினி குறைந்த விலையில் வேண்டுமெனில் புதிதாக வந்த ரெட்மி படைப்பான ரெட்மி நோட் புக் 14 என்ற மடிக்கணினியை வாங்கலாம். இந்த மடிக்கணினியில் பத்தாவது தலைமுறை இன்டெல் ப்ராசசர் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் இதில் கிராபிக்ஸ் இயங்க என் விடியா எம்எக்ஸ் 250 என்ற கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கிராபிக்ஸ் கார்டு 2gp கிராபிக்ஸ் மெமரி உடன் இயங்குகிறது. இது ஒரு மிகவும் நல்ல விஷயம் ஆகும்.

இந்த கணினியில் 8 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டுள்ளது . மற்றும் 512 ஜிபி எஸ் எஸ் டி சேமிப்பகம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மடிக்கணினி திரை அளவு 14 அங்குலம் ஆகும். இந்த திரை பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும். இதில் பலவிதமான விளையாட்டுகளை விளையாட முடியும். இந்த மடிக்கணினியில் விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்குகிறது. எனவே நாம் அணைத்து பயன்பாட்டிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த மடிக்கணினியின் மொத்த எடை ஒன்றரை கிலோ ஆகும். எனவே இது மிகவும் சிறிதாகவும் எடை கம்மியாக இருக்கும். இதன் விலை சந்தையில் 44 ஆயிரம் ரூபாயில் கிடைக்கிறது.

 

DELL VOSTRO 15

₹49,989/-
10th i5, win 10 Home, 8/1, Intel uhd, no Office, 15.6 1080p

மூன்றாம் இடத்தில் உள்ள மடிக்கணினி டெல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆஸ்ட்ரோ 15 எனப்படும் மாடல் ஆகும். இந்த மடிக்கணினி இன்டெல் ப்ராசசர் கொண்டு இயங்குகிறது. இது கோர் ஐ5 வகையின் பத்தாவது தலைமுறை பிராசஸர் கொண்டு இயங்குகிறது. இந்த பிராசஸர் இப்போதுதான் வெளியிடப்பட்டுள்ளது. எனவே இது மிகவும் புதிய பிராசஸர் ஆகும். இன்டெல் நிறுவனத்தின் பத்தாவது தலைமுறையில் உள்ள அனைத்து ப்ராசசர் 2020 கடைசியில் வெளியிடப்பட்டதாகும்.

ADVERTISEMENT

இந்த மடிக்கணினியில் விண்டோஸ் 10 கொண்டு இயங்குகிறது. இந்த கணினி இயங்க இன்டெலின் உள்ளடங்கிய அல்ட்ரா ஹெச்டி எனப்படும் கிராபிக்ஸ் உள்ளது. இது சாதாரணமாக இன்டல் இல் வரக்கூடிய கிராபிக்ஸ் . ஆனால் இதில் தனியாக கிராபிக்ஸ் அமைப்பு கிடையாது.

இதில் 8 ஜிபி மெமரி மற்றும் 1000 ஜிபி சேமிப்பகம் இடத்தை கொண்டுள்ளது. இது சாதாரண ஹாட்டஸ்ட் முறையில் உருவாக்கப்பட்டது எஸ் எஸ் டீ கிடையாது. இந்த மடி கணினியுடன் உங்களுக்கு மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் கிடைக்காது. உங்களுக்கு தேவைப்பட்டால் தனியாக இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.

இந்த மடிக்கணினி 15.6 அங்குலம் உள்ள டிஸ்ப்ளே மூலம் இயங்குகிறது. இந்த டிஸ்ப்ளே ஒரு 1080பி டிஸ்பிளே ஆகும். இந்த ஹெச்டி டிஸ்ப்ளே மூலம் உங்களுக்கு படம் தெளிவாக தெரியும். இந்த மடிக்கணினியின் விலை கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபாயில் உள்ளது. உங்களுக்கு மடிக்கணினி பிடித்த நீங்கள் அதை வாங்கிக் கொள்ளலாம்.

 

Asus vivoBook Flip 14

₹49,985/-
I3 10th, 14″, 2in1, 4gb, 512 nvme, 10home, uhd, 1.5kg,

நான்காவதாக பார்க்கக்கூடிய மடிக்கணினி ஏஸ் எஸ் கம்பெனி உருவாக்கப்பட்ட படைப்பாகும். இந்த மடிக்கணினி விவோபுக் பிலிப் 14 ஆகும்.

ADVERTISEMENT

இந்த மடிக்கணினியில் உள்ள ஒரு முக்கியமான வசதி இதை நீங்கள் இரண்டு பக்கமாகவும் மடித்துக் கொள்ள முடியும். இந்த வசதி மூலம் நீங்கள் பல திசைகளில் கணினியை திருப்பிக்கொள்ள எளிமையாக இருக்கும். ஒரு சிலருக்கு இதை பயன்படுத்தவும் எளிமையாக இருக்கும்.

இந்த மடிக்கணினி இன்டெல் ப்ராசசர் மூலம் உருவாக்கப்பட்ட கோர் ஐ3 பத்தாவது தலைமுறை பிராசசர் மூலம் இயங்குகிறது. இந்த மடிக்கணினி தனியாக கிராபிக்ஸ் கார்டு அமைப்பு கிடையாது. பிராசஸர் உடன் வரும் கிராபிக்ஸ் அமைப்பு மட்டும் இருக்கும்.

இது ஒரு 14 இன்ச் திரை என்பதனால் இதன் அளவு சிறிதாக இருக்கும். மற்றும் இதன் எடை குறைவாக இருக்கும். இதன் எடை 1.5 கிலோகிராம் ஆகும்.

இந்த கணினியில் 4ஜிபி மெமரி மற்றும் 512 ஜிபி எம்பி எம்பி எஸ் எஸ் டி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த என் வி எம் எஸ் எஸ் டி மிகவும் வேகமாக இயங்கும். இதன் வேகம் சாதாரண ஹார்ட் டிஸ்க் விட பத்து மடங்கு அதிகமாக இருக்கும். எனவே உங்களுக்கு கணினி மிகவும் வேகமாக இயங்கும்.

இந்த கணினியில் உங்களுக்கு விண்டோஸ் 10 இயங்குதளம் உள்ளது. எனவே உங்களுக்கு தேவையான மென்பொருள்களை இதன் மூலமாக இயக்கி கொள்ள முடியும். இதன் விலை கிட்டத்தட்ட 50,000 ரூபாயாக உள்ளது.

இந்தக் கணினி என் பிஎம்மி சேமிப்பகம் மற்றும் இரண்டு பக்கமும் மடிக்கும் அமைப்பு உள்ளதன் காரணமாக இதன் விலை எவ்வளவு இருக்கிறது. உங்களுக்கு இந்த இரண்டு வசதிகளும் தேவைப்பட்டால் மட்டுமே இதை வாங்கிக் கொள்ளலாம். இல்லையெனில் நீங்கள் மேலே உள்ள மூன்று கணினிகளில் ஏதேனும் ஒன்றை வாங்கிக் கொள்ளலாம். ஏனெனில் இதன் ப்ராசசர் ஐ3 ஆகும். ஆனால் மேலே உள்ள கணினிகளில் ஐ5 கொடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

Acer Aspire 3

₹41,990
AMD Ryzen 5-3500U , 8/512, win 10 Home, redeon vega 8 , 1.9kg

நம் அடுத்த பார்க்க போகிற மடிக்கணினி ஏசர் நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட எஸ்பிஐஆர் 3 எனப்படும் வகையைச் சேர்ந்தது ஆகும். இந்த மடிக்கணினியில் ஏஎம்டி நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஏஎம்டி ப்ராசசர் ஒரு ஏபியூ ஆகும். அதாவது ப்ராசசர் உடனே ஒரு நல்ல கிராபிக்ஸ் கார்டு வரும். எனவே இதன் விலையும் குறைவாக இருக்கும் வேகமும் சீராக இருக்கும்.

இந்த மடிக்கணினியில் ஏஎம்டி பிரைசன் 5 3500யூ எனப்படும் ப்ராசசர் உள்ளது. மற்றும் இதில் 8 ஜிபி மெமரி 512 ஜிபி சேமிப்பகம் உள்ளது. இது ஒரு எஸ் எஸ் டி சேமிப்பகம் ஆகும். மற்றும் இந்த கணினி விண்டோஸ் 10 ஹோம் இயங்கு தளத்தில் இயங்குகிறது. இந்த மடிக்கணினியின் எடை கிட்டத்தட்ட இரண்டு கிலோ இருக்கும்.

இந்த ஏஎம்டி ரைசன் 8 ஜிபி மெமரி 512 ஜிபி நினைவகம் விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்ட கணினியின் விலை 42 ஆயிரம் ரூபாய் ஆகும். இது மேலே உள்ள இன்டர்புரோசெஸ் அவர்களின் வேகத்துக்கு இணையாக இருக்கும்.

உங்களுக்கு மேலே உள்ள ஐந்து மடிக்கணினிகளில் ஏதேனும் ஒன்று பிடித்தால் வாங்கிக் கொள்ளலாம். நீங்கள் வாங்கும் முன் இதே விலையில் வேறு ஏதேனும் மடிக்கணினிகள் வந்துள்ளதா என்பதை சோதித்துப் பார்த்து வாங்கவும்.

ADVERTISEMENT

உங்களுக்கு மேலே உள்ள கணினிகளை விட வேகமான மற்றும் வெறும் ஏழாயிரம் ரூபாய் மட்டும் அதிகமான மடிக்கணினி ஒன்று உள்ளது. உங்களிடம் 7000 ரூபாய் அதிகமாக இருந்தால் நீங்கள் அதை வாங்கிக் கொள்ளலாம். அந்த மடிக்கணினி கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை பார்க்கலாம்.

 

Asus TUF Gaming Laptop

₹55,999/-
8gb,i5 8th,512,GTX 1050 gddr5 , win 10, fhd, 15.6″,RGB keyboard,

இந்த மடிக்கணினி ஏசோஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கேமிங் லேப்டாப் ஆகும். இதன் பெயர் ஏசோஸ் டஃப் கேமிங் லேப்டாப் ஆகும்.

இதில் இன்டெல் ப்ராசசர் எட்டாம் தலைமுறை உள்ள ஐ5 பொருத்தப்பட்டுள்ளது. மற்றும் இதில் அதி வேகமாக இயங்கக்கூடிய சோடேக் 1050 ஜிddr5 கிராபிக்ஸ் கார்டு உள்ளது. எனவே இதில் நீங்கள் மிக பெரிய விளையாட்டுகளை விளையாட முடியும் மற்றும் உங்களுக்கு எந்த ஒரு வேலை செய்தாலும் அதிகமாக இருக்கும். இந்த மடிக்கணினி விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இயங்குகிறது.

இந்த மடிக்கணினி 15.6 அங்குலம் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. உங்களுக்கு இதை இயக்க ஒரு நல்ல கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மடிக்கணினியில் உள்ள ஒரு முக்கியமான வசதி நீங்கள் விசைப்பலகை பயன்படுத்தும்போது அதில் வண்ண வண்ண விளக்குகள் எரியும். அந்த விலங்குகள் அனைத்தையும் நீங்கள் கட்டுப்படுத்த முடியும்.

ADVERTISEMENT

இந்த மடிக்கணினியில் 8 ஜிபி மெமரி மற்றும் 512 ஜிபி எஸ் எஸ் டி கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு தேவைப்பட்டால் இதை நீங்கள் 32gp அளவுக்கு அப்கிரேடு செய்து கொள்ளலாம். மற்றும் நினைவக அதையும் நீங்கள் உங்கள் தேவைக்கேற்ப அப்கிரேட் செய்து கொள்ளலாம்.

8 ஜிபி மெமரி ஐ5 ப்ராசசர் தனியாக கிராபிக்ஸ் பிராசஸர் 512 ஜிபி நினைவகம் மற்றும் வண்ண விளக்குகளை கொண்ட விசைப்பலகை உடைய இந்த மடிக்கணினியின் விலை 57 ஆயிரம் ரூபாய் ஆகும். உங்களுக்கு இந்த மடிக்கணினி தேவைப்பட்டால் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் இது அதி வேகமாக இயங்கக் கூடிய ஒன்றாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *