pc-computer-laptop-no-power-on-how-to-fix-atozpc

PC No Power ON

ADVERTISEMENT
pc-computer-laptop-no-power-on-how-to-fix-atozpc

கணினித் துவங்கவில்லையா?

உங்களுடைய கணினியில் ஒரு சில நேரங்களில் அது துவங்காமலும் அல்லது மீண்டும் மீண்டும் மறு தொடக்கம் செய்து கொண்டிருந்தால் நீங்கள் ஒரு சில வழிகளை பின்பற்றி உங்கள் கணினியை இயக்க முடியும்.

உங்களுடைய கணினி துவங்கவில்லை என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளை பயன்படுத்தி உங்களுடைய கணினியை இயக்க முடியும் அல்லது உங்கள் கணினியில் என்ன கோளாறு உள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியும். உங்களுடைய கணினிக்கு வாரண்டி இருந்தால் அதை நீங்கள் வாங்கிய கடைக்காரரிடம் கொடுத்து சரி செய்ய செய்யலாம். இது முற்றிலும் இலவசமாக செய்து கொடுப்பார்கள். உங்கள் கணினி ஆன் ஆகவில்லை ஆகவில்லை என்றால் நீங்கள் உங்களுடைய முயற்சியில் சிலவற்றை செய்து பார்க்கலாம்.

கரணங்கள்

  • மின்சாரக் கோளாறு ( Power )
  • மானிட்டர் பிராப்ளம் ( Monitor )
  • புதிய கருவிகள் இணைப்பு கோளாறு ( New Device )
  • தொடர்புகள் கோளாறு ( Connections )
  • பொத்தான் கோளாறு ( Button )
  • பொருந்தாத பவர் சப்ளை ( SMPS )
  • குப்பை மூலம் கோளாறு ( Dust )
  • இலகுவான தொடர்பு
  • யுபிஎஸ் கோளாறு ( USB )
  • வேறு கோளாறு ( Others )
  • கோளாறு கண்டுபிடிக்கும் விளக்கு
  • வன்பொருள்கள் கோளாறு ( Hardware )

மின்சாரக் கோளாறு

முதலில் உங்களுடைய அலுவலகம் அல்லது வீட்டில் மின்சார இணைப்பு உள்ளதா என்பதை சரி பார்த்து கொள்ளவும் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கும்போது கணினியை இயக்க முயன்றால் அது இயங்காது எனவே இதை சரி பார்த்துக்கொள்ளவும்.

படிக்க : 20 ஆயிரம் ரூபாய் கணினி , யாருக்கு பயன்படும்.

மானிட்டர் பிராப்ளம்

உங்களுடைய சிபியு ஆன் செய்த பிறகு ஃபேன் ஓடும் சத்தம் கேட்கிறது ஆனால் உங்களுடைய மானிட்டரில் எந்த ஒரு திரையும் வரவில்லை என்றால் உங்களுடைய மானிட்டர் கோளாறு இருக்கலாம். அது ஒரு முறை சரியாக பொருத்தப்பட்டு இருக்கிறதா மற்றும் அந்த மானிட்டர் லோகோ வருகிறதா என்று சோதனை செய்து பார்க்கவும்.

புதிய கருவிகள் இணைப்பு கோளாறு

உங்களுடைய கணினியில் நீங்கள் ஏதாவது ஒரு புதிய வன் பொருள் ( Hardware ) பொருத்தப்பட்டு இருந்தால் அதுகூட கோளாறாக இருக்கலாம். அந்த வன்பொருள் உங்களுடைய கணினிக்கு ஒத்திசைவு செய்யாமல் கூட இருக்கலாம். எனவே அதை ஒரு முறை நீக்கிவிட்டு கணினியை ஆன் செய்து பார்த்து ஆன் ஆகிவிட்டால் அந்த வன்பொருள் கோளாறாக இருக்கலாம்.

ADVERTISEMENT

தொடர்புகள் கோளாறு

உங்களுடைய கணினி மற்றும் அதனுடன் தொடர்புள்ள தொடர்புகள் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்று சோதனை செய்து பார்க்கவும். சிபியு மற்றும் மானிடர்க்கு மின்சாரம் பொருத்தப்பட்டுள்ளதா என்று பார்க்கவும். கணினி மற்றும் மானிட்டர் விஜிஏ அல்லது எச்டிஎம்ஐ தொடர்பு மூலம் பொருத்தப்பட்டுள்ளதா என்று பார்க்கவும். உங்கள் சிபியு யுபிஎஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளதா என்று பார்க்கவும். யுபிஎஸ் உங்கள் வீட்டு மின்சாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா என்று சரி பார்க்கவும். இதில் ஏதாவது ஒரு தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்தால் உங்கள் கணினி இயங்காது. எனவே இதை சரி பார்த்துக்கொள்ளவும்.

படிக்க : அழிந்த தரவுகளை மீட்பது எப்படி? கணினியில்,மொபைல் போனில், மற்ற சேமிப்பகங்களில்.

பொத்தான் கோளாறு

உங்கள் சிபியு விலுள்ள பவர் ஆன் செய்யும் பொத்தான் ஒருவேளை பழுதடைந்து இருந்தால் அது வேலை செய்யாது. எனவே அது உடைந்து இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொள்ளவும். அப்படி உடைந்திருந்தால் உங்கள் கணினியை ரீஸ்டார்ட் பொத்தான் மூலம் இயக்குமாறு பொருத்திக் கொள்ளவும். ரீஸ்டார்ட் இல் உள்ள இரண்டு வயர்களை எடுத்து பவர் ஆண் செய்யும் வயர்கள் இணைக்கப்பட்டிருந்த இணைப்புடன் மாற்றவும். இப்பொழுது உங்களுடைய ரீஸ்டார்ட் பட்டனை அழுத்தினால் உங்கள் கணினி இயங்கும்.

பொருந்தாத பவர் சப்ளை

உங்கள் கணினியில் அனைத்துமே சரியாக உள்ளது ஆனாலும் உங்கள் கணினி இயங்கவில்லை என்றால் அது எஸ் எம் பி எஸ் கோளாறாக இருக்கலாம். ஒருமுறை துவங்கி திடீரென நின்று விட்டாலோ ஃபேன் சவுண்ட் கேட்ட பிறகு நின்று விட்டாலோ அது எஸ் எம் பி எஸ் கோளாறாக இருக்கலாம். உங்களுடைய கணினி ஒரு அதிக அளவு மின்சாரத்தை உபயோகிக்கும்போது அதற்குத் தேவையான சரியான அளவு மின்சாரத்தை கொடுக்க எஸ் எம் பி எஸ் உதவி செய்யும். எஸ் எம் பி எஸ் பல வருடங்கள் ஆகியிருந்தாலும் அல்லது பொருந்தாத ஒரு எஸ் எம் பி எஸ் போட்டு இருந்தாலும் இந்த கோளாறுகள் ஏற்படும். உடனே ஒரு எஸ் எம் பி எஸ் மாற்றி சோதனை செய்து பார்க்கவும்.

குப்பை மூலம் கோளாறு

குப்பைகள் மூலமாகக் கூட உங்கள் கணினிக்கு கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உங்கள் கணினியில் குப்பைகள் தேக்கப்பட்டு இருந்தால் அதை உடனடியாக அகற்றிவிட்டு வேலை செய்வது நன்று. குப்பைகள் உடனே வேலை செய்தாள் அது சில கோளாறுகளை ஏற்படுத்தும். இதன் மூலமாக மின்சாரக் கோளாறு ஏற்படும். அதுமட்டுமில்லாமல் உங்களுடைய ரேம் மற்றும் ஹார்ட் டிஸ்க் கோளாறுகளும் ஏற்படும். எனவே உடனடியாக இந்த குப்பைகளை அகற்றி விட்டு வேலை செய்யவும்.

படிக்க : கணினியில் குப்பைகளை நீக்குவது எப்படி?

இலகுவான தொடர்பு

உங்கள் கணினியின் தொடர்புகள் சரியாக இருந்தாலும் ஒரு சில தொடர்புகள் இலகுவாக இருக்கும். முக்கியமாக கணினிக்கு வரும் மின்சார வயர் சரியாகப் பொருத்தப் பட்டிருக்கிறதா என்று சரி பார்க்கவும். ஒருவேளை அந்தத் தொடர்பு இலகுவாக இருந்தாலும் உடனடியாக சரி செய்து கொள்ளவும். அப்படியே நீங்கள் உபயோகப்படுத்திக் கொண்டிருந்தால் உங்களுடைய கணினிக்கு வேறு ஏதேனும் கோளாறுகள் ஏற்படலாம். இலகுவான தொடர்பு மூலம் உங்களுடைய கணினி மின்சாரம் அடிக்கும் நிலைக்கும் கூட தள்ளப்படும். எனவே ஒரு நல்ல வயர் உள்ள பவர் கேபிள்களை உபயோகப்படுத்தவும்.

யுபிஎஸ் கோளாறு

உங்களுடைய கணினி யுபிஎஸ் மூலம் பொருத்தப்பட்டு இருந்தால் அந்த யுபிஎஸ் நல்ல நிலையில் உள்ளதா என்று சோதனை செய்து பார்க்கவும். இந்த யுபிஎஸ் பவர் ஆன் செய்யப்பட்டுள்ளதா என்று சரி பார்க்கவும். அந்த யுபிஎஸ்ல் உள்ள பேட்டரி சரியாக வேலை செய்கிறதா மற்றும் குறைந்தது அரை மணி நேரம் நிற்கிறதா என்று சரி பார்க்கவும். இந்த பேட்டரி கோளாறு இருந்தால் கூட யுபிஎஸ் வேலை செய்யாது. யுபிஎஸ் ல் உள்ள போர்டுகள் சரியாக வேலை செய்யவில்லை என்றாலும் இந்த கோளாறு ஏற்படலாம்.

ADVERTISEMENT

வேறு கோளாறுகள்

உங்கள் கணினி ஆன் ஆகும் பொழுது பீப் சவுண்ட் வந்தால் அது ஒரு பெரிய கோளாறாக இருக்கலாம். அது ஒருவேளை உங்களுடைய மதர்போர்டு பழுதடைந்து இருக்கலாம். உங்களுடைய மெமரி பழுதடைந்து இருக்கலாம். உங்களுடைய ஹார்டு டிஸ்க் பழுதடைந்து கூட இருக்கலாம்.
உங்களுடைய மதர்போர்டில் உள்ள தொடர்புகள் சரியாக உள்ளதா என்று பார்க்கவும். மதர்போர்டு பவர் வருகிறதா மற்றும் அனைத்து தொடர்புகளும் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதா என்று பார்க்கவும். மதர்போர்டு மற்றும் ரேம் ஹார்ட் டிஸ்க் இதுபோன்ற பொருள்கள் பொருத்தப்பட்டு இருக்கிறதா என்று பார்க்கவும். உங்களுடைய கணினி மதர் போர்டில் சீமாஸ் எனப்படும் ஒரு ரூபாய் நாணயம் போலிருக்கும் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.

கோளாறுகளை கண்டுபிடிக்கும் விளக்கு

உங்களுடைய கணினி ஒரு மதர்போர்டு மூலம் இயங்குகிறது. அந்த மதர்போர்டு ஒரு நல்ல விலைக்கு வாங்கியிருந்தால் அதில் கோளாறுகளை கண்டுபிடிக்கும் விளக்கு பொருத்தப்பட்டிருக்கும். அந்த விளக்கை பயன்படுத்தி உங்கள் கணினியில் எந்த கோளாறு உள்ளது என்பதை சரியாக தெரிந்துகொள்ளலாம். உங்கள் கணினியின் மதர்போர்டு வலது புறம் அல்லது இடது புறம் ஓரத்தில் பார்க்கவும்.

அங்கு நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட விளக்குகள் கொடுக்கப்பட்டிருந்தால் அதில் சில வாக்கியங்கள் எழுதப்பட்டிருக்கும். உதாரணமாக ரேம், பவர் போன்றவை. உங்கள் கணினி தொடங்கும்போது அனைத்து விளக்குகளும் எரியும். உங்கள் கணினியில் கோளாறு இருந்தால் அதிலுள்ள விளக்குகள் ஏதேனும் ஒன்று எரியாது. அப்படி இயங்காவிட்டால் அந்த விளக்கின் அருகில் உள்ள பெயரை படிக்கவும். அதில் உங்கள் கணினியில் கோளாறை காட்டிக் கொடுத்துவிடும்.

உதாரணமாக ரேம் என்ற வார்த்தைக்கு அருகிலுள்ள விளக்கை எரிய விட்டாள் உங்கள் கணினியில் ரேம் கோளாறு இருக்கலாம் அல்லது ரேம் போடாமல் இருக்கும். இந்த விளக்கின் மூலம் நமது வேலை எளிமையாக முடியும்.

 படிக்க : கணினி மதர்போர்டு வாங்குவது எப்படி? தேவையான மதர்போர்டு தேர்வு செய்வது எப்படி?

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் நீங்கள் செய்து பார்த்த பிறகு உங்கள் கணினி இயங்க வில்லை என்றால், உங்கள் கணினியில் வேறு ஏதாவது பெரிய வன் பொருள் காரணமாக இருக்கலாம்.

வன்பொருள்கள் கோளாறு

கணினி ஒரு மின்சாரத்தில் இயங்கக் கூடிய எலக்ட்ரானிக்ஸ் கருவி. இதில் எப்போது வேண்டுமானாலும் பழுது ஏற்படலாம். எனவே உங்கள் வன் பொருள்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். இதை தெரிந்து கொள்ள முதலில் உங்கள் கணினியை அணைத்துவிட்டு, கணினியின் அனைத்து வகை பொருட்களையும் வெளியே எடுத்து ஏதாவது ஒரு பொருள் அல்லது கருவி அதிக வெப்பமடைகிறது அல்லது வெடித்துள்ளதா என்று சோதனை இடவும்.
வன்பொருள்கள் எப்போது வேண்டுமானாலும் செயலிழக்கும். எனவே அதை சரியான மின்சாரம் கொடுத்து மற்றும் வெப்பத்தை வெளியேற்றி பாதுகாத்து வந்தால் அது நீண்ட காலம் உழைக்கும்.

ADVERTISEMENT

படிக்க : வைரஸ் கிளீன் செய்வது எப்படி? இலவச மென்பொருள் மூலம் வைரஸ்-ஐ அழிப்பது எப்படி?

கேள்விகளுக்கு பதில்

இங்கு நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும். உங்களிடம் ஏதாவது ஒரு கேள்வி அல்லது சந்தேகம் இருந்தால் கருத்துப் பெட்டியில் பதிவிடவும்.

கணினியில் அதிக சத்தம் வருகிறது?

கணினியில் முக்கியமாக சத்தம் வரக் காரணம் கணினியில் உள்ள காற்று வெளியேற்றும் அமைப்பு தான் . இந்த அமைப்பு செயல்படவில்லை என்றால் உங்கள் கணினி முற்றிலுமாக இயங்காது. இதில் அதிக சத்தம் ஒருமுறை வந்தால் அது சாதாரணமாக நிகழக் கூடிய ஒன்றுதான். ஆனால் அடிக்கடி அல்லது எப்போதுமே அதிக சத்தம் வந்து கொண்டே இருந்தால் நீங்கள் உங்கள் கணினியின் காற்று வெளியீடு மற்றும் கருவிகளை பழுது பார்க்க வேண்டும். உங்களுக்கு சத்தம் வரவே கூடாது என்றால் புதிய வாட்டர் கூலிங் டெக்னாலஜி மூலம் கட்டுப்படுத்த முடியும்.

குப்பைகளை எவ்வாறு சுத்தம் செய்வது?

கணினியின் வெளியே உள்ள குப்பைகளை நீங்களே சுத்தம் செய்து கொள்ளலாம். ஆனால் உள்ளே அதிகமான குப்பை இருந்தால் அதை நீங்கள் சரியான முறையில் திறந்து உள்ளே உள்ள அனைத்து விதமான பொருள்களையும் சுத்தப்படுத்தி மறுபடியும் அதே போல வைக்க வேண்டும்.

படிக்க : கணினியில் குப்பைகளை நீக்குவது எப்படி?

கணினியில் வெப்பம் வருகிறதா?

நீங்கள் அதிக நேரம் வேலை பார்க்கும் பொழுது உங்கள் கணினியில் வெப்பம் வருவது சாதாரண நிகழ்ச்சிதான். ஆனால் அதிக வெப்பமுடைய கணினியை நீங்கள் இயக்கும் பொழுது உங்களுக்கும் ஏதாவது ஒரு கோளாறு வரும். எனவே கணினி காற்று வெளியீடு அமைப்பு சரியாக உள்ளதா என்று கவனிக்க வேண்டும். நீங்கள் மடிக்கணினி பயன்படுத்தி வந்தால் மடிக்கணினிக்கு ஏற்றவாறு ஒரு காற்று வெளியில் செலுத்தும் அமைப்பு சந்தையில் கிடைக்கிறது அதை வாங்கி நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கணினியில் சார்ஜ் ஆக வில்லை?

உங்கள் கணினியில் சார்ஜ் ஆகவில்லை என்றால் அதற்கு முக்கியமாக ஒரு சில காரணங்கள் இருக்கும். முதலில் உங்களுடைய அடாப்டர் மற்றும் பவர் கேபிள் சரிபார்க்கவும். பிறகு கணினியின் பவர் உள்ளே செலுத்தும் அமைப்பு சரியாக வேலை செய்கிறதா மற்றும் சார்ஜிங் விளக்குகள் தெரிகிறதா என்று பார்க்க வேண்டும். இல்லையெனில் உங்கள் கணினியின் மின்சார அமைப்பு பழுதாக இருக்கலாம்.

படிக்க : சிறந்த மடிக்கணினி வாங்குவது எப்படி? வாங்குவதற்கு முன் பார்க்க வேண்டியவை?

இந்தப் பதிவின் மூலம் உங்களுடைய கணினி இயங்கவில்லை என்றால் அதை எப்படி சரிசெய்வது மற்றும் அதில் என்ன கோளாறு உள்ளது என்பதை கண்டுபிடிக்க உங்களால் முடியும். இந்தப் பதிவின் மூலம் உங்கள் கணினி இயங்க வில்லை என்றால் உங்களுடைய கணினியை சர்வீஸ் செய்யும் கடையில் கேட்டு சரிசெய்து கொள்ளவும். நீங்கள் தேவையில்லாமல் எந்த ஒரு வீன் காரியங்களும் செய்ய தேவை இல்லை.

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *