டார்க் மோட்
சாதாரணமாக அனைவராலும் தொலைபேசியில் இருந்து வரும் அனைத்து வெளிச்சத்தையும் இரவில் பார்க்க முடியாது. அதனால் தொலைபேசியில் டார்க் மூடு எனப்படும் ஒரு அமைப்பை கொண்டு வந்தார்கள். இந்த டார்க் மோட் மூலமாக மொபைலில் திரையில் காணப்படும் அதிகபட்சமான வெளிச்சத்தை கருப்பு நிறமாக மாற்றி அல்லது குறிப்பிட்ட வண்ணங்களை கருப்பு நிறத்தில் மாற்றி இந்த வெளிச்சத்தை கட்டுப்படுத்த முடியும். இதனை பயன்படுத்த தொலைபேசியில் ஒரே ஒரு பொத்தானை கிளிக் செய்தால் மட்டுமே போதும் அந்த வசதி இயங்கி விடும். இது தொலைபேசி பயன்படுத்தும் அனைவருக்கும் மிகவும் நன்றாக இருந்தது.
இதே போன்ற வசதிகளை உங்களுடைய விண்டோஸ் கணினிகளலும் பெற முடியும். கணினியில் எப்படி டார்க் மோட் செட் செய்வது மற்றும் அந்த வசதி உங்களுடைய கணினியில் இல்லை என்றால் எப்படி வேறு ஒரு செயலைக் கொண்டு பயன்படுத்துவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
விண்டோசில் டார்க் மோட்
உங்களுடைய விண்டோஸ் கணிணியிலும் இந்த டார்க் மோட் பயன்படுத்த முடியும். உங்களுடைய கணினி விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இயங்கிக்கண்டிருக்கிறது என்றால் இதை எளிமையாக செய்ய முடியும். அல்லது வேறு விண்டோஸ் இயங்கு தளத்தில் இயங்கிக் கொண்டு இரந்தால் அதற்கு ஒரு தனி சாஃப்ட்வேர் அல்லது அப்ளிகேஷன் மூலமாக கட்டுப்படுத்த முடியும். இதனை எப்படி செய்வது என கீழே பார்க்கலாம்.
விண்டோஸ் 10 டார்க் மூடு
விண்டோஸ் 10 இயங்குதளத்தில் டார்க் மோட் பயன்படுத்துவது எப்படி என்று முதலில் பார்க்கலாம். விண்டோஸ் 10 இயங்குதளம் புதியதாக இருக்க வேண்டும். இல்லையெனில் உங்களுடைய விண்டோஸ் 10 இயங்குதளத்தை அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.
பிறகு ஸ்டார்ட் அல்லது விண்டோஸ் பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து செட்டிங்ஸ் எனப்படும் தேர்வை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்களுடைய செட்டிங்ஸ் திரை வரும். அதில் பர்சனலா ஸ்டேஷன ( personalization ) எனப்படும் தேர்வை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து வரும் திரையில் கலர்ஸ் ( colours ) எனப்படும் தேர்வை செலக்ட் செய்ய வேண்டும். பிறகு வரும் திரையில் ஜூஸ் இவர் டீபால்ட் ஆப் மூடு ( choose your default app mode ) எனப்படும் பகுதியில் இரண்டு தேர்வு இருக்கும். லைட் மற்றும் டார்க் என இருக்கும்.
இதில் முதலில் லைட் எனப்படும் தேர்வு செலக்ட் செய்யப்பட்டு இருக்கும். இப்பொழுது உங்களுக்கு டார்க் மூடு வேண்டுமெனில் இரண்டாம் தேர்வை கிளிக் செய்தால் மட்டும் போதும். அது தானாகவே உங்களுடைய திரையை டார்க் திரையாக மாற்றிவிடும்.
விண்டோஸ் 10 லைட் மோட்
உங்களுக்கு உங்களுடைய கணினி திரும்ப பழைய நிலைக்கு வர வேண்டும் எனில். அல்லது லைட் மூடு மாறவேண்டும் எனில் மேலே உள்ள திரை அனைத்தையும் திறந்து கொள்ள வேண்டும். இறுதியில் உள்ள ஜூஸ் யுவர் டிபால்ட் ஆப் மூடு எனப்படும் பகுதியில் லைட் எனும் தேர்வை கிளிக் செய்யவேண்டும். இப்போது உங்களுடைய கணினி பழைய நிலைக்கு வரும் அல்லது லைட் திரைக்கு வரும்.
விண்டோஸ் 8 / 8.1 டார்க் மூடு
விண்டோஸ் 8 கணினி மற்றும் விண்டோஸ் 8.1 இயங்குதளம் பயன்படுத்தி கொண்டிருக்கிறீர்கள் என்றால் முதலில் செட்டிங்ஸ் திறந்து கொள்ள வேண்டும். பிறகு சேஞ்ச் பிசி செட்டிங்ஸ் எனப்படும் தேர்வை கிளிக் செய்யவும். அடுத்து ease of access எனும் தேர்வை கிளிக் செய்யவும். High contrast என்பதை தேர்வு செய்யவும். அதை ஆன் மற்றும் ஆப் செய்து இந்த டார்க் மூடு பயன்படுத்த முடியும்.
விண்டோஸ் 7 டார்க் மூடு
நீங்கள் விண்டோஸ் 7 இயங்குதளத்தில் உள்ள கணினியை உபயோகப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதில் டார்க் மூடு வேறு வடிவில் இருக்கும். அதை எப்படி ஆக்டிவேட் செய்வது என்பதை பார்க்கலாம்.
முதலில் ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்து கொள்ள வேண்டும். பிறகு கண்ட்ரோல் பேனல் கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும். அந்த கண்ட்ரோல் பேனல் திரை வந்த பிறகு வலது புறத்தில் உள்ள சர்ச் தேர்வை கிளிக் செய்ய வேண்டும். அதில் windows colour என சர்ச் செய்ய வேண்டும். பிறகு சேஞ்ச் தீம் எனப்படும் தேர்வை கிளிக் செய்ய வேண்டும். பிறகு பேசிக் அண்ட் ஹை கான்டஸ் தீம்ஸ் எனப்படும் தேர்வில் ஐ கான்ட்ரஸ் எனப்படும் தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.
விண்டோஸ் 7 ஹோம் பேசிக் டார்க் மூடு
முதலில் ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்து கொள்ள வேண்டும். கண்ட்ரோல் பேனல் தேர்வு செய்யவும். அப்பாரன்ஸ் தேர்வு செய்யவும். டிஸ்ப்ளே செலக்ட் செய்யவும். வலதுபறத்தில் சேஞ்ச் காலர் ஸ்கீம் கிளிக் செய்யவும். அதில் ஐ காணட்ராஸ்ட் செலக்ட் செய்து ஓகே கொடுக்கவும். இப்போது உங்களுடைய விண்டோஸ் 7 கணினி டார்க் மூடு மாறிவிடும்.
இந்த டார்க் மூடு பயன்படுத்துவதன் மூலமாக உங்களுடைய கண் அதிக வெளிச்சத்தை உள்வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. இதன் மூலமாக கண்களுக்கு எரிச்சல் குறையும். இன்னும் அந்த எரிச்சலை குறைக்க வேண்டுமெனில் நீங்கள் கணினிக்கு நைட் மூடு அல்லது நைட் லைட் எனப்படும் தேர்வை பயன்படுத்தி குறைத்துக் கொள்ள முடியும். அதைப்பற்றி படிக்க கீழே உள்ள லிங்க் க்லிக் செய்யவும்.
படிக்க : கணினியில் நைட் லைட் திரையை பயன்படுத்துவது எப்படி?
கேள்விகளுக்கு பதில்
உங்களுக்கு இந்த பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அல்லது கருத்துக்கள் இருந்தால் கீழே உள்ள கருத்து பெட்டியில் தெரிவிக்கவும்.