Intel vs AMD Processor
வணக்கம் நண்பர்களே இந்தப்பதிவில் நாம் இன்டெல் மற்றும் ஏ எம் டி பிராசசர் இன் வேறுபாடுகள் இதில் எது சிறந்தது என்று தெளிவாக பார்க்கலாம்.
இன்டல் மற்றும் ஏஎம்டி என்பவை கணினியில் பயன்படுத்த கூடிய ஒரு பிராசசர் ஆகும். இதை கணினியின் மூளை என்று கூட சொல்லலாம். இந்த பிராசஸர் இல்லாவிட்டால் கணினி செயல்படாது. எனவே ப்ராசசர் மிகவும் முக்கியமான ஒரு பகுதியாகும். இந்த கணினியின் பிராஸஸரை இரண்டு முன்னணி நிறுவனங்கள் தயாரித்து வருகின்றது. அவை இன்டல் மற்றும் ஏ எம் டி ஆகும். இந்தியாவில் அதிகமாக இன்டெல் ப்ராசசர் பயன்படுத்தப்படுகிறது. ஏனென்றால் இன்டல் எம் டி க்கு முன்னால் இந்தியாவுக்குள் வர தொடங்கிவிட்டது. அதுமட்டுமில்லாமல் இன்டல் முதலில் தொடங்கப்பட்டது.
இன்டல் மற்றும் ஏஎம்டி பிராசசர் இரண்டுமே நல்ல கம்பெனி தான். ஆனால் நீங்கள் எந்த பயன்பாட்டுக்காக கணினியை உருவாக்குகிறீர்கள் என்று தெரிந்த பிறகு இந்த பிராசஸ் வாங்கலாம்.
படிக்க : இன்டெல் ப்ராசசர் தலை முறைகள்? சிபியு வின் வகைகள்? பத்து தலைமுறைகள்? எது சிறந்தது?
ஏ எம் டி மற்றும் இன்டெலின் வேறுபாடுகள்
முதலில் ஏ எம் டி மற்றும் இன்டெலின் வேறுபாடுகளை பற்றி பார்க்கலாம்.
விலை மலிவானது எது?
விலையைப் பொறுத்தவரை இன்டெல் மற்றும் ஏ எம் டி இல் சுமார் 4 லட்சம் வரை இருக்கிறது. ஆனால் விலை மணமான பிராசஸர் இன்டல் இல் கிடைக்கிறது. விலை மலிவாக கிடைத்தாலும் இதில் சில தொழில்நுட்பங்கள் குறைவாக உள்ளது. ஆரம்ப விலை அதிகமாக இருந்தாலும் போதுமான அளவு வேகம் ஏ எம் டி இல் கிடைக்கிறது.
கிராபிக்ஸ் கார்டு தொழில்நுட்பம்?
கிராபிக்ஸ் கார்டு பொறுத்தவரை இன்டல் மிகவும் குறைவான அளவு இன்பில்ட் கிராபிக்ஸ் காடுகளை கொண்டுள்ளது. ஆனால் ஏஎம்டி ப்ராசசர் அதிக அளவு கிராபிக்ஸ் திறனை கொண்டுள்ளது. எனவே மக்கள் குறைந்த விலையில் அதிக திறன் கொண்ட கணினியை உருவாக்க வேண்டி ஏஎம்டி ப்ராசசர் வாங்குகின்றனர். கிராபிக்ஸ் கார்டு வாங்க பணம் இல்லை எனில் நீங்கள் ஏஎம்டி பிராஸஸரை தேர்வு செய்யலாம்.
கோர் தொழில்நுட்பம்?
கோர் தொழில்நுட்பம் என்பது பிராசசர் இன் வேலையை சுலபமாக செய்யும் ஒரு தொழில்நுட்பமாகும். எடுத்துக்காட்டாக நான்கு வேலையை இரண்டு கோரில்ல செயல்படுத்தினால் அதன் வேகம் குறையும். இதுவே நான்கு கோர் உள்ள பிராசஸர் இல் செய்யும் போது அதன் வேகம் அதிகமாக இருக்கும்.
எனவே கோர் தொழில்நுட்பம் அதிகமாக உள்ள பிராஸஸரை வாங்குவது நல்லது. உங்களுக்கு இது பயன்படா விட்டால் நீங்கள் வாங்க தேவையில்லை.
இன்டல் மற்றும் ஏ எம் டி ப்ராசசர் கள் கோர் தொழில்நுட்பத்தைக் கொண்டே இயங்குகின்றது. இன்டெல் ப்ராசசர் களில் குறைந்தது 2 கோர் உள்ள பிராசஸர் கள் வெளியிடப்படுகிறது. இன்டல் இல் உயர்ந்த கோர் உள்ள பிராசஸர் ஐ3 ஒன்பதாவது பிராசஸர் ஆகும். இந்த ப்ராசசர் இல் எட்டு கூறுகள் உள்ளது. எனவே இதன் வேகம் மற்றும் விலை அதிகமாகும். ஆனால் ஏ எம் டி யில் 4 கோர் முதல் 16 கோர் பிராசசர் கொண்டுள்ளது. இதனால் தான் இதன் வேகம் அதிகமாகவும் திறன் மிக்கதாக உள்ளது.
படிக்க : சிபியு ஜிபியூ ஏபியூ வேறுபாடுகள் மற்றும் அதன் வகைகள். உங்களுக்கு தேவையான ப்ரோசிஸோர் வாங்குவது எப்படி?
அன்லாக் பிராசஸர் எது சிறந்தது
பொதுவாக பிராசசர் வாங்கும்போது அதன் வேகத்தை ஜிகா எட்ஸ் எனக் குறிப்பிடுவார்கள். இந்த வேகத்தை நாம் நம் கணினியில் சில மாற்றங்களை செய்து அதன் வேகத்தை மிகவும் அதிக படுத்த முடியும். இதற்கு பெயர்தான் அன்லாக் குடு பிராசஸர் அல்லது ஓவர்க்கிளாக்கிங் ப்ராசசர்.
இந்த அன்லாக் குடு தொழில்நுட்பத்தை பொருத்தவரை இன்டல் இல் 80% பிராசஸர் ஒத்திசைவு செய்யும். மீதமுள்ள பிராசசர் கள் இதை சப்போர்ட் செய்யாது. ஆனால் ஏ எம் டி இல் அப்படி இல்லை. 100% அனைத்து பிராசஸர் களும் ஒத்திசைவு செய்யும். எனவே குறைந்த அளவு பணம் செலவு செய்து அதிக திறனை இதில் பெற முடியும்.
இந்த அன்லாக் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை நீங்கள் இதன் வேகத்தை கூட்டினால் உங்களுடைய வாரண்டி நீக்கப்படும். எனவே இதைத் தெளிவாக செய்யுங்கள்.
அதிக நாள் உழைக்கும் சிபியூ எது?
நான் இதுவரை பார்த்த வரை எனக்குத் தெரிந்து அதிக நாள் மற்றும் எந்த ஒரு கோளாறும் இல்லாமல் இயங்கும் சிபியு இன்டல். ஏனெனில் ஏ எம் டி இல் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் உள்ளதால் அது எல்லா விதமான மதர்போர்டு களுக்கும் செயல்படாது. அதுவே கணினியில் நீலத்திரை கோளாறு மற்றும் கருப்பு திரை கோளாறு போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே நீங்கள் அதிக நாள் உழைக்கும் சிபியூ வை வாங்க விரும்பினால் நீங்கள் இன்டல் தேர்வு செய்யலாம். இருப்பினும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் புதிய புதிய தொழில்நுட்பங்கள் களமிறங்கும் அதற்கேற்ப நீங்கள் உங்களது கணினியை மாற்ற விரும்பினால் அல்லது வேறொரு புது கணினியை உருவாக்க விரும்பினால் நீங்கள் ஏஎம்டி தேர்வு செய்யலாம்.
படிக்க : கணினி மதர்போர்டு வாங்குவது எப்படி? தேவையான மதர்போர்டு தேர்வு செய்வது எப்படி?
உங்களுக்கு எது சிறந்தது?
நீங்கள் எந்த மாதிரியான வேலை செய்கிறீர்கள் மற்றும் கணினிக்கு என்ன ஒருவேளை கொடுப்பீர்கள் என்று தெரிந்தால் நீங்கள் அதற்கேற்ப கணினியை வாங்கிக்கொள்ளலாம். உதாரணமாக வீட்டுப் பயன்பாட்டுக்கு விளையாட்டு கணினியை வாங்க தேவையில்லை அப்படி வாங்கினாலும் அது வீண் செலவு தான். எனவே உங்களுக்கு தேவையானது எது என்று தேர்ந்தெடுங்கள்.
கணினியின் வகைகள்?
கணினியை மூன்று வகையாக பிரிக்கலாம். அவை வீட்டுப் பயன்பாட்டுக்காக அல்லது எளிமையான பயன்பாட்டுக்காக, அலுவலகப் பயன்பாட்டுக்காக மற்றும் விளையாட்டுக்காக அல்லது வீடியோ, எடிட்டிங், கிராபிக்ஸ், 3டி அனிமேஷன், ரிசர்ச் செய்வதற்காக.
எளிமையான அல்லது வீட்டு பயன்பாட்டிற்காக
நீங்கள் வீட்டு பயன்பாட்டிற்காக அல்லது படம் பார்ப்பதற்காக ஒரு கணினியை உருவாக்க விரும்பினால் நீங்கள் குறைந்த பணத்தில் உருவாக்க விரும்புவீர்கள். எனவே உங்கள் பட்ஜெட் 20000 வரை போகலாம். இதற்கு நீங்கள் இன்டல் செயலியை தேர்வு செய்யலாம்.
அலுவலகப் பயன்பாட்டுக்காக
நீங்கள் அலுவலகப் பயன்பாட்டுக்காக ஒரு கணினியை உருவாக்க விரும்பினால் கணினி பழுதடையாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுவீர்கள். எனவே உங்களுடைய பட்ஜெட் 40000 வரை போகலாம். இதற்கு நீங்கள் இன்டல் செயலியை தேர்வு செய்யலாம்.
விளையாட்டு மற்றும் சாஃப்ட்வேர் பயன்பாட்டிற்காக
நீங்கள் விளையாட்டுக்காக அல்லது அதிக சக்தியுள்ள சாஃப்ட்வேர் பயன்பாட்டிற்காக ஒரு கணினியை உருவாக்க விரும்பினால் நீங்கள் இன்டெல் மற்றும் ஏஎம்டி தேர்வு செய்யலாம். விலை குறைவாக இருக்கவேண்டுமென்றால் ஏ எம் டி தேர்வு செய்யலாம். ஏனெனில் இதில் கிராபிக்ஸ் கார்டு உள்ளது. விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை எனக்கு அதிகமான நாட்களுக்கு உழைக்கவேண்டும் என எண்ணினால் இன்டல் தேர்வு செய்யலாம்.
ஒரு சில சந்தேகங்களுக்கு தீர்வு
ஏஎம்டி நிறுவனத்தின் ப்ராசசர் குறைந்த விலையில் கிடைக்கிறது ஏன்?
ஏஎம்டி நிறுவனம் இன்டெல் நிறுவனத்திற்கு போட்டியாக வந்தது. எனவே இதன் ஆரம்ப விலை மிகவும் குறைவாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த நிறுவனம் ஆரம்ப காலத்திலிருந்தே மிகவும் குறைந்த விலைக்கு ப்ராசசர் தயாரித்து வருகிறது. எனவே இதன் விலை குறைவாகத்தான் இருக்கும்.
ஐ7 பிராசஸர்க்கு சமமான ஏ எம் டி ப்ராசசர் எது ?
இன்டெல் நிறுவனத்தின் ஐ 7 பிராசஸர் ஏ எம் டி நிறுவனத்தின் ரைசன் 7 பிராசஸர்க்கு சமமானது ஆகும்.
ஏஎம்டி , இன்டல் விட வேகம் குறைவானதா?
பொதுவாக ஏ எம் டி நிறுவனத்தின் ப்ராசசர் இன்டெல் நிறுவனத்தின் பிராசஸர் விட வேகம் குறைவாக தான் இருக்கும். ஆனால் அதை பூஸ்ட் அல்லது ஓவர்க்கிளாக் செய்தால் அதன் வேகம் அதிகமாக கிடைக்கும்.
படிக்க : சிறந்த மடிக்கணினி வாங்குவது எப்படி? வாங்குவதற்கு முன் பார்க்க வேண்டியவை?
ஐ3 ஐ5 ஐ7 மற்றும் ஐ9 இதில் எதை வாங்கலாம்?
சிறிய மற்றும் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தினால் ஐ3 வாங்கிக் கொள்ளலாம்.
வீட்டு உபயோகம் மற்றும் வேலைக்கு பயன்படுத்தினால் ஐ5 வாங்கிக் கொள்ளலாம்.
விளையாட்டுகளை விளையாட விரும்பினால் ஐ7 ப்ராசசர் வாங்கிக் கொள்ளலாம்.
மிகப்பெரிய அளவிலான பிராஜக்ட் மற்றும் விளையாட்டுகள் விளையாட விரும்பினால் ஐ9 வாங்கிக் கொள்ளலாம்.
குறிப்பு : உங்களின் தேவைக்கு ஏற்ப மட்டுமே ப்ராசசர் தேர்வு செய்து வாங்க வேண்டும்.
ஏஎம்டி நிறுவனத்தின் எது சிறந்த ப்ராசசர்?
- ஏஎம்டி ரைசன் 9 3900
- ஏஎம்டி ரைசன் 5 3600
- ஏஎம்டி ரைசன் 3 2200
- ஏஎம்டி ரைசன் 9 3950
ஐ5 விட ஐ7 ல் என்ன உள்ளது?
ஐ 7 பிராசஸர் மிகவும் உயர் தொழில்நுட்ப ப்ராசசர் ஆகும். ஐ5 விட பலமடங்கு வேகம் மற்றும் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் திறன் கொண்டுள்ளது. எனவே ஐ7 பிராசஸர் ஐ5 விட சிறந்ததாகும்.
பிராசஸர் வேகத்தை எப்படி தெரிந்து கொள்வது?
ஒரு பிராசஸர் வேகம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் கணினியில் system properties சென்று பார்த்துக் கொள்ளலாம். அங்கே ப்ராசசர் வேகம் ஜிகா எட்ஸ்ல் ( GHz ) கொடுக்கப்பட்டிருக்கும்.
பிராசஸர் முழு வேகத்தை எப்படி சோதிப்பது ?
ஒரு பிராசஸர் இன் முழு வேகம் அல்லது முழு திறன் தெரிய வேண்டுமென்றால் ஒரு சில மென்பொருள்கள் கொண்டு அதன் வேகத்தை அளக்க முடியும். பிராசஸர் வேகத்தை பெஞ்ச்மார்க் ( benchmark ) என்று குறிப்பிடுவார்கள். இந்த பெஞ்ச்மார்க் மூலம் அந்த ப்ராசசர் வேகம் கிடைக்கும்.
இதனை அளக்க ஆன்லைனில் பல வகையான மென்பொருள்கள் கிடைக்கிறது. இந்த மென்பொருள்கள் புரோசெஸ்சர்களுக்கு அதிகப்படியான வேலையை கொடுத்து அதன் வேகத்தை சோதிக்கும்.
கணினியின் வேகத்தை அளக்கும் மென்பொருள்கள்
Cine bench, user benchmark, CPU z இந்த மென்பொருட்களில் ஏதாவது ஒன்றை டவுன்லோட் செய்து உங்கள் கணினியின் வேகத்தை அறிய முடியும்.
ஒவர் கிளாக்கிங் என்றால் என்ன?
ஒரு பிராசஸர் வேகத்தை குறிப்பிட்டுள்ள வேகத்தை விட பல மடங்கு அதிகமாக மாற்றும் வேலைக்கு ஓவர்க்கிளாக்கிங் என்று பெயர். ஒவர்கிளாக்கிங் மூலம் கணினியின் வேகத்தை அதிகப்படுத்த முடியும்.
படிக்க : அழிந்த தரவுகளை மீட்பது எப்படி? கணினியில்,மொபைல் போனில், மற்ற சேமிப்பகங்களில்.
ஒவர் கிளாக்கிங் செய்வது எப்படி?
உங்கள் மதர்போர்டு மற்றும் பிராசஸர் இந்த வசதிக்கு ஒத்து இசைக்கும் என்றால், நீங்கள் இதை செய்ய முடியும். இதை செய்ய உங்கள் மதர்போர்டு பயோஸ் ( BIOS ) உள்ளே சென்று ப்ராசசர்க்கு செல்லக்கூடிய மின்சார வேகத்தை அதிகப்படுத்தினால் கணினியின் வேகம் அதிகமாகும். மின்சாரம் வேகம் மிகவும் அதிகமாக கொடுத்தால் ஒரு சில சமயம் அது இயங்காது.
இந்தப்பதிவில் உங்களுக்கு எந்த ஒரு கணினியை தேர்வு செய்யலாம் என்று தெளிவாக புரிந்திருக்கும் அதுமட்டுமில்லாமல் ஏஎம்டி மற்றும் இன்டல் வேறுபாடுகளைப் பற்றி தெரிந்து இருப்பீர்கள். இந்த பதிவு பிடித்திருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் தெரிவிக்கலாம்.