mother-board-buy-guide-in-tamil-atozpc-in

Motherboard Buy Guide

ADVERTISEMENT

mother-board-buy-guide-in-tamil-atozpc-in

கணினி மாதர் போர்டு வாங்குவது எப்படி?

கணினிக்கு ஒரு முக்கிய பொருள் மற்றும் கணினியில் அனைத்து சாதனங்களும் இந்த மதர்போர்டு மூலம் இணைக்கப்பட்டிருக்கும். உதாரணமாக கீ போர்டு, மவுஸ், ஹார்ட் டிஸ்க் போன்றவை. ஒரு நல்ல கணினியை உருவாக்க வேண்டுமெனில் இந்த மதர் போர்ட் நன்றாக இருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் இதிலுள்ள உள்ளீடு மற்றும் வெளியீடு அமைப்புகள் சரியாகவும் இருக்க வேண்டும். இந்த மதர்போர்டு எப்படித் தேர்ந்தெடுக்கலாம் இதற்கு எவ்வளவு செலவு செய்யலாம் மற்றும் இதிலுள்ள தொழில்நுட்பங்கள் சிப்செட் சாக்கட் போன்றவற்றை பற்றி பார்க்கலாம்.

மதர்போர்டு அளவு

இந்த மதர்போர்டு மூன்று அளவுகளில் கிடைக்கிறது. அவை நமது தேவைக்கு ஏற்ப சிபியு வடிவமைக்க உதவுகிறது. இந்த மதர்போர்ட் அளவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • ஏ டி எக்ஸ்
  • மைக்ரோ ஏ டி எக்ஸ்
  • மினி ஐ டி எக்ஸ்

ஏ டி எக்ஸ் மதர்போர்டு

இந்த ஏ டி எக்ஸ் மதர்போர்டுகள் அதிகமான மக்கள் உபயோகப்படுத்துகின்றனர். இதன் அளவு பெரியதாகவும் இதில் அனைத்து சாதனங்களும் பொருத்துமாறும் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த ஏ டி எக்ஸ் மதர்போர்டின் அளவு 12 க்கு 9 இன்ச் இருக்கும். இதனைக் கொண்டு மிகப் பெரிய அளவிலான சிபியு உருவாக்க முடியும். இந்த சிபியும் கேமிங் மற்றும் எடிட்டிங் போன்ற பயன்பாட்டாளர்களுக்கு சரியாக இருக்கும். இந்த மதர்போர்டு மூலம் 4 முதல் 8 ரேம் வரை போட முடியும். பிசி எக்ஸ்டென்ஷன் கார்டு 4 போட முடியும். அதுமட்டுமில்லாமல் இந்த சிபியு அதிக உள்ளீடு மற்றும் வெளியீடு உள்ளதால் சில பெரிய சாதனங்களுக்கும் உதவியாக இருக்கும் ( உதாரணமாக வே பிரிட்ஜ் போன்றவை ).

படிக்க : 20 ஆயிரம் ரூபாய் கணினி , யாருக்கு பயன்படும்.

மைக்ரோ ஏ டி எக்ஸ் மதர்போர்டு

இந்த மதர்போர்ட் அளவு 9 க்கு 9 இன்ச் இருக்கும். இதன் அளவு ஏடி எக்ஸ் மதர்போர்டில் சிறிது குறைவாக இருக்கும். இது செவ்வக வடிவ அமைப்பை கொண்டிருக்கும். இந்த மைக்ரோ ஏ டி எக்ஸ் மதர்போர்டில் நமக்குத் தேவையான அனைத்து பொருட்களும் இருக்கும் ஆனால் உள்ளீடு மற்றும் வெளியீடு இணைப்பு சாதனங்கள் இணைக்கும் பகுதிகள் 1-2 மட்டுமே இருக்கும். உதாரணமாக ஒரே ஒரு பிசி எக்ஸ்டென்ஷன் கார்டு மற்றும் 2 – 4 ரேம் மட்டுமே போட முடியும்.

ADVERTISEMENT

மினி ஐ டி எக்ஸ் மதர்போர்டு

இந்த மதர்போர்டு செவ்வக வடிவில் இருக்கும். இதன் அளவு 6 க்கு 6 இன்ச் இருக்கும். மிகவும் சிறிய இடத்தை இது பிடித்துக் கொள்ளும். மிகவும் சிறிய கணினியை உருவாக்க விரும்புபவர்கள் இந்த மினி ஐ டி எக்ஸ் மதர்போர்டு வாங்கலாம். இதில் கணினிக்கு தேவையான அனைத்து பொருட்களும் இருக்கும். ஆனால் 1-2 மட்டுமே இருக்கும். இதில் 1-2 ரேம் மட்டுமே போட முடியும். உள்ளீடு மற்றும் வெளியீடு சற்று குறைவாகவே இருக்கும். இதில் ஒரே ஒரு பிசி எக்பான்ஷன் கார்டு மட்டுமே போட முடியும். மிகச்சிறிய கணினியை உருவாக்க இது போதுமானதாகும்.

சிபியு சாக்கெட்

இந்த சாக்கெட் என்பது ப்ராசசர் இயங்க உதவுகிறது. சாக்கெட் என்பது பிராசஸர் மற்றும் மதர்போர்டு இரண்டையும் இணைக்க உதவும் ஒரு தளமாகும். இந்த மதர்போர்டு கம்பெனிகள் இரண்டு விதமான சிபியு சாக்கெட் உருவாக்குகிறது. அவை இன்டல் மற்றும் ஏ எம் டி. இன்டெல் ப்ராசசர் வாங்கினால் நமக்கு இன்டல் சாக்கெட் தேவைப்படும். ஏஎம்டி ப்ராசசர் வாங்கினால் ஏ எம் டி ஷார்ட்கட் தேவைப்படும். ஏஎம்டி மற்றும் இன்டெல் வேறுவேறு சாக்கெட் அமைப்புகளை பயன்படுத்துகிறது. இன்டல் பயன்படுத்தும் சாக்கெட் அமைப்பு எல்ஜிஏ மற்றும் ஏஎம்டி பயன்படுத்தும் சாக்கெட் அமைப்பு ஏ எம் நான்கு ஆகும்.

இன்னும் தெளிவாக சொன்னால் இன்டெல் ப்ராசசர்ல் பின் இருக்காது ஆனால் மதர்போர்டில் பின் இருக்கும். ஏஎம்டி பிராசஸர்ல் பின் இருக்கும் ஆனால் மதர்போர்டில் பின் இருக்காது. இதுவே இதன் தெளிவான விளக்கம் ஆகும்.

சிப்செட்

சிப்செட் என்பது மதர்போர்டு இயக்க உதவுகிறது. மதர் போர்டில் உள்ள அனைத்து விதமான சாதனங்களும் இணைக்கப்பட்டிருக்கிறதா பிராசஸர் சரியாக வேலை செய்கிறதா மற்றும் இன்புட் அவுட்புட் செயலிகளை தெளிவாக செய்ய இந்த சிப்செட் உதவுகிறது. இந்த சிப்செட் மதர்போர்டு அமைப்புகளை பொருத்து இருக்கும். இதற்கு மேல் ஒரு ஹீட் ஸிங்க் இருக்கும்.

படிக்க : கணினியின் வேகத்தை அதிகப்படுத்துவது எப்படி?

பயோஸ் (BIOS) மற்றும் யூஈஎஃப்ஐ (UEFI)

நமது கணினியில் இரண்டு விதமான பயாஸ் இன்டர்பேஸ் இருக்கிறது. அவை பயோஸ் (BIOS) மற்றும் யூஈஎஃப்ஐ (UEFI). இந்த அமைப்பு எதற்கு உதவுகிறது என்றால் நாம் கணினியை பூட் ஆப்ஷன் உள்ளே செல்லும் பொழுது நமக்கு வரும் அந்த ஒரு ஸ்க்ரீன் அல்லது கண்ட்ரோல் முறையே ஆகும். பயோஸ் (BIOS) உள்ள மதர் போர்டு மூலம் விசைப்பலகையில் உள்ள சாவிகளை கொண்டே இயக்க முடியும் மற்றும் இது ஒரு பழைய முறையாகும். ஆனால் யூஈஎஃப்ஐ (UEFI) முறையில் கீபோர்டு மற்றும் சுட்டி கொண்டு இயக்க முடியும். இயக்குவதற்கு எளிமையாக இருக்கும். நமக்கு தேவையான அனைத்துவிதமான கண்ட்ரோல் களும் இருக்கும். இது ஒரு புதிய விதமான அமைப்பு ஆகும். இதை வாங்கினால் நாம் செய்யக்கூடிய வேலையை தெளிவாக செய்யலாம்.

உள்ளீடு மற்றும் வெளியீடு அமைப்பு

இந்த மதர்போர்ட் பல உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனங்களை கொண்டுள்ளது. இந்த சாதனங்களைக் கொண்டு கணினியை தெளிவாக இயக்க முடியும். எனவே உங்களுக்கு எந்த கருவிகள் தேவை படுகிறதோ அது அனைத்தும் உங்கள் மதர்போர்டில் உள்ளதா என்று சோதனை செய்து கொள்ளவும்.

ADVERTISEMENT

யூ எஸ் பி 3.0/3.1

இந்த சாதனத்தை கொண்டு நம் தரவுகளை மிகவும் அதிகமான வேகத்தில் இயக்க முடியும். இது ஒரு புதிய தொழில்நுட்பம் ஆகும்.

யுஎஸ்பி 2.0

இந்த சாதனத்தைக் கொண்டு நமது சாதாரணமான வேலைகளை செய்ய முடியும். உதாரணமாக பென்ட்ரைவ் கனெக்ட் செய்வது யூஎஸ்பி கீபோர்டு மற்றும் மவுஸ் இணைப்பது போன்றவை. இதில் வேகம் சற்றுக் குறைவாகவே இருக்கும்.

பி எஸ் 2

இந்த சாதனத்தைக் கொண்டு நமது கீபோர்டு மற்றும் மவுஸ் மட்டுமே இணைக்க முடியும். இது ஒரு மிகப்பழைய தொழில்நுட்பமாகும் ஆனாலும் இப்போது கூட இதை பயன்படுத்தி வருகின்றார்கள். கீபோர்டு மற்றும் மவுஸ் இதில் இணைத்து பயன்படுத்தினால் மின்சார அளவு குறையும். மற்றும் இது ஒரு வேகமான தொழில்நுட்பமாகும்.

டைப் சி

இந்த டைப் சி என்பது ஒரு புதிய தொழில் நுட்பம் ஆகும். இதனைக் கொண்டு தரவுகளை மிகவும் வேகமாக கணினிக்கு செலுத்தவும் பெறவும் முடியும். நமது கணினி மற்றும் அலைபேசியை இதன் மூலம் இணைத்தால் வேகம் அதிகமாக கிடைக்கும். இதனைக் கொண்டு பல பெரிய வேலைகளையும் செய்ய முடியும்.

எச்டிஎம்ஐ / விஜிஏ

இந்த சாதனம் ஒரு அவுட்புட் சாதனமாகும் இதனைக் கொண்டு மானிட்டர் மூலம் கணினியை பார்க்க முடியும். இதன் பழைய தொழில் நுட்பம் விஜிஏ ஆகும். இப்பொழுதும் இந்த இரண்டு விதமான தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி வருகின்றனர்.

இசை போர்ட்

நாம் பாட்டு அல்லது கணினியின் சத்தத்தை கேட்க இந்த இசை போர்ட் உதவுகிறது. நீங்கள் ஹோம் தியேட்டர் அல்லது வேறு ஏதேனும் மிகப்பெரிய சவுண்ட் சிஸ்டம் பொருத்தி இருக்கிறீர்கள் என்றால் இதனை கேட்டு தெளிவாக வாங்க வேண்டும். இதில் நல்ல ஒரு சத்தத்தை பெற முடியும். இந்த இசை போர்ட் மூலமாக நமது மைக் மற்றும் சத்தத்தை வெளியிடும் போர்ட் இருக்கும்.

ADVERTISEMENT

லேண்ட் போர்ட்

இந்த லேண்ட் போர்ட் மூலமாக நமது கணிணிக்கு இன்டர்நெட் கொடுக்க முடியும். எனவே இந்த போர்ட் மிகவும் முக்கியமானதாகும்.

தண்டர்போல்ட் 3

இந்த தண்டர்போல்ட் 3 என்பது ஒரு புதிய தொழில்நுட்பம் ஆகும். இதனைக் கொண்டு தரவுகளை பல ஜி பி வேகத்துக்கு அனுப்பவும் பெறவும் முடியும். இந்த தொழில்நுட்பம் உங்களுக்கு தேவை பட்டு இருந்தால் இதை வாங்கிக் கொள்ளவும். இந்த அனைத்து பொருட்களும் தேவைப்பட்டால் நீங்கள் ஏ டி எக்ஸ் மதர்போர்டு தான் வாங்க வேண்டும்.

படிக்க : கணினித் துவங்கவில்லையா? இதை செய்து பாருங்க

வேறு தொழில்நுட்பங்கள்

கணினியில் மேலே கொடுக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் மட்டும் உள்ளது என்று என்ன வேண்டாம். இன்னும் பல புதிய புதிய தொழில்நுட்பங்கள் இந்த மதர்போர்டில் இருக்கிறது. அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

ஆண் போர்டு ஸ்விச்

மதர்போர்டு இயங்கவும் அல்லது இயங்காமல் இருக்கவும் இந்த விசை உதவுகிறது. மதர் போர்டில் ஒரு ஆண் மற்றும் ஆஃப் ஸ்விட்ச் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த ஸ்விச் கொண்டு மதர் போர்டை ஆன் செய்ய முடியும். இந்த ஸ்வீட் எல்லா மதர் போர்டு களிலும் இருக்காது. நமக்கு தேவைப்பட்டால் அல்லது அதிக விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்றால் அதில் இது இருக்கும். இது மதர்போர்டு மின்சாரத்தால் பழுதடையாமல் பாதுகாக்கும்.

பழுது பார்க்கும் எல்இடி

ஆம் உங்கள் கணினி தெளிவாக இயங்கவில்லை அல்லது தொடங்கும் பொழுது ஏதேனும் பிழை ஏற்பட்டால் இந்த எல்இடி விளக்குகள் காட்டிக் கொடுத்துவிடும். இதன் மூலமாக நமது கணினியில் என்ன பழுது உள்ளது என்பது நமக்கு தெளிவாக புரியும். மதர்போர்டு இயக்கத்தில் ஏதேனும் பிழை இருந்தால் இந்த விளக்குகள் எரியாது. எந்த ஒரு பிழையும் இல்லை என்றால் இந்த விளக்குகள் அனைத்தும் எரியும்.

இரண்டு லேன் போர்ட்

இரண்டு லேண் போர்ட் தேவைப்படுமா என்று நினைக்க வேண்டாம். மிகப்பெரிய தரவுகளை எளிமையாகவும் வேகமாகவும் இயக்கம் இந்த இரண்டு லேண் அமைப்பு உதவுகிறது. இதன் மூலமாக அதிவேக இன்டர்நெட் இணைப்புகளை பொருத்த முடியும்.

ADVERTISEMENT

வை-பி கார்டு

கணினியில் இந்த வை-பி கார்டு யுஎஸ்பி மூலமாகவும் போட்டுக் கொள்ளலாம். ஆனால் அது சற்று வேகம் மிதமாகவே இருக்கும். ஆனால் அதிக வேகம் வேண்டுமெனில் இந்த வை-பி கார்டு உள்ள மதர்போர்டு வாங்க வேண்டும். இதில் இரண்டு விதமான ஆண்டனா கொடுக்கப்பட்டிருக்கும். இதன் மூலமாக கணினிக்கு வயர்லெஸ் இணைப்புகளை சுலபமாக இணைக்க முடியும்.

படிக்க : ரேம் பற்றி முழு விளக்கத்தை பார்க்கலாம். வகைகள்? எது சிறந்தது? இன்னும் பல…

ரேம் அமைப்பு

நீங்கள் முதலில் ரேம் அளவு மற்றும் எவ்வளவு ரேம் போடப் போகிறீர்கள் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் பிற்காலத்தில் நீங்கள் ரேம் அதிகப்படுத்த வேண்டும் என்றால் இயலாமல் போய்விடும். மதர்போர்டில் பொதுவாக 2 முதல் 8 வரை ரேம் போட முடியும். நீங்கள் ஏ டி எக்ஸ் மதர்போர்டு வாங்கினாள் அதில் 4 முதல் 8 ரேம் வரை போடமுடியும். மைக்ரோ ஏ டி எக்ஸ் மதர்போர்டு வாங்கினால் 4 ரேம் போடமுடியும். அதுவே மினி ஐ டி எக்ஸ் மதர்போர்டு வாங்கினாள் அதில் 2 ரேம் மட்டுமே போட முடியும். எனவே நீங்கள் அதை கருத்தில் கொண்டு உங்களுடைய மதர்போர்டு வாங்க வேண்டும்.

எக்ஸ்பேன்ஷன் கார்டு

இந்த கார்டு மூலமாக நீங்கள் கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஏனைய கார்டுகளை போடமுடியும். இந்த கார்டு அளவு மற்றும் எண்ணிக்கை நீங்கள் வாங்கும் மதர்போட்ன் வகையை பொறுத்து அமைகிறது. உதாரணமாக நீங்கள் ஒரு ஏ டி எக்ஸ் மதர்போர்டு வாங்கினாள் அதில் 4 பிசிஐஈ போர்க் இருக்கும். மைக்ரோ ஏ டி எக்ஸ் மதர்போர்டு வாங்கினால் அதில் இரண்டு முதல் நான்கு போர்ட் இருக்கும். மினி எக்ஸ் மதர்போர்டு வாங்கினால் அதில் ஒரே ஒரு போர்ட் மட்டுமே இருக்கும்.

படிக்க : சிபியு ஜிபியூ ஏபியூ வேறுபாடுகள் மற்றும் அதன் வகைகள். உங்களுக்கு தேவையான ப்ரோசிஸோர் வாங்குவது எப்படி?

சேமிப்பக போர்ட்

புதிய ஏ டி எக்ஸ் மதர்போர்டு வாங்கினால் அதில் 4 சேட்டா தொடர்பு மற்றும் எம்.2 சேமிப்பு முறை இருக்கும். பழைய மதர்போர்டு களில் இது இருக்காது. எம்.2 இருந்தால் கணினியை வேகமாகவும் சுலபமாகவும் இயக்க முடியும். இது தேவைப்பட்டால் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

ஓவர்க்கிளாக்கிங் மதர்போர்டு

நீங்கள் உங்கள் கணினியின் வேகத்தை இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக இயக்க வேண்டும் என்றால் ஓவர்க்கிளாக்கிங் மதர்போர்டு தேவைப்படும். மதர்போர்டு மற்றும் பிராசஸர் இரண்டுமே ஓவர்க்கிளாக்கிங் தொழில்நுட்பத்தில் இருந்தால் மட்டுமே நீங்கள் வேகத்தை அதிகரிக்க முடியும். ஓவர்க்கிளாக்கிங் செய்யப்போவது இல்லை என்றால் இந்த தொழில் நுட்பம் தேவைப்படாது. அதுமட்டுமில்லாமல் விலையும் குறையும்.

மதர்போர்டு விலை

நீங்கள் ஒரு சாதாரணமான அல்லது மலிவான கணினியை வடிவமைக்க விரும்பினால் உங்கள் மதர்போட் இன் விலை 4 ஆயிரம் ரூபாய்க்கு உள்ளே இருந்தால் போதும். நீங்கள் ஒரு என்ட்ரி லெவல் கேமிங் அல்லது எடிட்டிங் போன்ற பயன்பாட்டிற்கு கணினியை உருவாக்க விரும்பினால் உங்கள் மதர்போர்டு விலை ரூபாய் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை இருக்கலாம். நீங்கள் ஒரு மிகப்பெரிய பிரம்மாண்டமான கணினியை உருவாக்க விரும்பினாலோ அல்லது அதிகத் தொழில்நுட்பம் உள்ள கணினியை உருவாக்க விரும்பினாலோ உங்கள் மதர்போர்டுன் விலை பத்தாயிரம் மேலே இருக்க வேண்டும். மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விதமான தொழில்நுட்பங்களும் உள்ளடங்கிய கணினி மதர்போர்டு விலை மட்டும் குறைந்தபட்சம் 18 ஆயிரம் இருக்கும்.

ADVERTISEMENT

படிக்க : கணினி மதர்போர்டு வாங்குவது எப்படி? தேவையான மதர்போர்டு தேர்வு செய்வது எப்படி?

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும், மேலும் இது போன்ற பதிவுகளுக்கு எங்கள் வலைதளத்தை பார்வையிடவும்.
நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *