desktop-custom-pc-build-basic-explained-in-tamil-atozpc-in

PC Build Guide in Tamil

ADVERTISEMENT

desktop-custom-pc-build-basic-explained-in-tamil-atozpc-in

முழு கணினியை உருவாக்குவது எப்படி

இந்த பதிவில் நாம் எப்படி ஒரு முழு கணினியை உருவாக்குவது எப்படி ( PC Build Guide in Tamil ) என்று பார்க்கலாம்.

கணினியை உருவாக்க தேவையான பொருட்கள்

  • பிராசஸர் ( இன்டல் அல்லது ஏஎம்டி )
  • மதர்போர்டு
  • ரேம்
  • கிராபிக்ஸ் கார்டு
  • சேமிப்பகம்
  • பவர் சப்ளை யூனிட்
  • வன்தட்டு இயக்கி சிடி
  • கேபினட்
  • மானிட்டர்
  • கீபோர்ட் மற்றும் மவுஸ்
  • யுபிஎஸ்
  • ஸ்பீக்கர்ஸ்
  • லைட்ஸ்
  • கூலிங் சிஸ்டம்

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருள்களும் இருந்தால் ஒரு கணினியை உருவாக்க முடியும்.

சரி இப்போது அந்த பொருட்களின் முழு விரிவாக்கத்தை பற்றி தெளிவாக பார்க்கலாம்

பிராசஸர் ( Processor )

கணினிக்கு தேவையான பிராசஸர் களை இரண்டு முன்னணி நிறுவனங்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். அவை இன்டெல் மற்றும் ஏ எம் டி. இன்டெல் இந்தியாவில் மிக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் ஏஎம்டி க்கு முன்னால் இன்டல் இந்தியாவுக்குள் வந்தது. எனவே இந்தியாவில் உள்ள அதிகப் பயனாளர்கள் இண்டலை பயன்படுத்துகின்றனர். ஏஎம்டி ப்ராசசர் இந்தியாவுக்குள் இப்பொழுது வரத் தொடங்கியுள்ளது. கணினியைப் பொறுத்தவரை இன்டல் அல்லது எம்டி பயன்படுத்த முடியும். ஆனால் அதை நீங்கள் சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் இல்லையெனில் நீங்கள் நினைத்த வேகம் கிடைக்காது அல்லது பணம் தேவையில்லாமல் செலவாகும்.

ADVERTISEMENT

பிராசஸர் இல்லை எனில் கணினி செயல்படாது எனவே பிராசசர் மிகவும் அவசியமானது. கணினிக்கு எது சிறந்தது இன்டல் அல்லது ஏ எம் டி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

படிக்க : இன்டல் மற்றும் ஏ எம் டி வேறுபாடுகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

படிக்க : இன்டெலின் தலைமுறைகளை பற்றி படிக்க இங்கு கிளிக் செய்யவும்

ரேம் ( RAM )

ரேம் இருந்தால் மட்டுமே ஏஎம்டி அல்லது இன்டெல் ப்ராசசர் செயல்பட முடியும். இந்த ரம் அளவு குறைந்தது 4ஜிபி இருந்தால் மட்டுமே ஒரு மிதமான வேகம் கிடைக்கும். இந்த ராம் ddr1 ddr2 ddr3 ddr4 என பல வகைகளில் உள்ளது. இதை நீங்கள் தேர்வு செய்ய உங்கள் மதர்போர்டு உதவியை பெறவேண்டும். ரேமைய அதிகப்படுத்தினாள் வேகம் அதிகரிக்கும் என்பது முற்றிலுமாக தவறான செய்தி.

ரோம் குறைந்தது 4 ஜிபி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்

படிக்க : ரோம் தலைமுறைகளை பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

மதர்போர்டு ( Motherboard )

மேலே கொடுக்கப்பட்டுள்ள ராம் மற்றும் பிராசஸர் இவை அனைத்தையும் மதர் போர்டில் சொருக வேண்டும். எனவே மதர்போர்டு மிக அவசியமான ஒன்று. மதர்போர்டில் இன்புட் மற்றும் அவுட்புட் சொறுக்கல்கள் இருக்கும். இவற்றின் மூலமாக நமது பென்டிரைவ் ஆடியோ வீடியோ இன்டர்நெட் மற்றும் பலவற்றை தொடர்புபடுத்த முடியும். இந்த மதர்போர்டு எடிஎக்ஸ், மினி எடிஎக்ஸ், மைக்ரோ எடிஎக்ஸ் போன்ற வகைகளில் கிடைக்கிறது. இதை நீங்கள் சரியாக தேர்வு செய்த மட்டுமே ராம் கிராபிக்ஸ் கார்டு இன்புட் அவுட்புட் ஸ்டோரேஜ் போன்றவற்றை சரியாக பொருத்த முடியும்.

இந்த மதர்போர்டு ஏசூஸ் ஜிகாபைட் எம் எஸ் ஐ மற்றும் பல நிறுவனங்கள் உருவாகிக் கொண்டுள்ளது.

ஒரு நல்ல கம்பெனி மதர் போர்டு வாங்குவது சிறந்தது ஏனெனில் நமக்கு உதவி எளிமையாக கிடைக்கும்.

ADVERTISEMENT

படிக்க : சிறந்த மதர்போர்ட் கம்பெனி எது படிக்க இங்கே கிளிக் செய்யவும்

படிக்க : மதர்போட் இன் வகைகளை பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்

கிராபிக்ஸ் கார்டு ( Graphics Card )

இந்த கிராபிக்ஸ் கார்டு இருந்தால் மட்டுமே மிகப்பெரிய கணினி விளையாட்டுகளை எளிமையாக விளையாட முடியும். இது இல்லாவிட்டால் உங்கள் கணினியின் மூலம் விளையாட்டுகளை விளையாட முடியாது. இந்த கிராபிக்ஸ் கார்டு ஒரு வகையான பிராசஸர். இதன் மூலம் பல செயல்களை ஒரே நேரத்தில் செய்ய முடியும் உதாரணமாக மிகப்பெரிய விளையாட்டுகளை இயக்க, 3டி அணிமேஷன் களை இயக்க மற்றும் வீடியோ அல்லது போட்டோ எடிட்டிங் செய்ய. இந்த கிராபிக்ஸ் கார்டுகளை பல முன்னணி நிறுவனங்கள் தயாரித்து வருகின்றார்கள். இதன் துவக்க விலையே 4 ஆயிரம் ரூபாய்.

கிராபிக்ஸ் கார்டு உங்களுக்குத் தேவை இருந்தால் போட்டுக் கொள்ளலாம்.

கிராபிக்ஸ் கார்டு இல்லாமல் விளையாட்டுகளை விளையாட முடியுமா?

முடியும் , அனால் மிகவும் பழமையான விளையாட்டுகள் மட்டும் விளையாடலாம், இன்றைய காலா விளையாட்டுகளுக்கு கிராபிக்ஸ் கார்டு மிகவும் அவசியமாகும்.

சேமிப்பகம் ( Storage )

சேமிப்பகத்தில் நீங்கள் தரவுகளை சேமிக்க முடியும். இந்த சேமிப்பகத்தில் தான் உங்களுடைய கணினி இயங்கும். இந்த சேமிப்பகம் இப்பொழுது இரண்டு வகைகளில் கிடைக்கிறது. அவை ஹார்ட் டிஸ்க் மற்றும் எஸ் எஸ் டி. இந்த ஹார்ட் டிஸ்க் மற்றும் எஸ் எஸ் டி யில் உங்களுடைய தரவுகளை சேமிக்க முடியும். கணினி மிக வேகமாக இயங்க எஸ் எஸ் டி பயன்படுத்த வேண்டும் ஆனால் இது மிகவும் அதிகமான விலையைக் கொண்டது. இவற்றை பல நிறுவனங்கள் தயாரித்து வருகிறது. ஆனால் ஒருசில நிறுவனத்தின் சேமிப்பகம் மட்டுமே சரியாக வேலை செய்கிறது.

ஹார்ட் டிஸ்க் குறைந்தது 1 டிபி பொருத்திக் கொள்ளவும் மற்றும் எஸ் எஸ் டி குறைந்தது 120 ஜிபி இருந்தால் வேகம் கிடைக்கும்.

படிக்க : எஸ் எஸ் டி மற்றும் ஹார்ட் டிஸ்கின் வேறுபாடுகளை பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

பவர் சப்ளை யூனிட் ( Power Supply Unit )

இந்த பவர் சப்லி யூனிட் மூலமாகத்தான் நமது கணினியில் உள்ள அனைத்து சாதனங்களுக்கும் பவர் கிடைக்கிறது. இதை நீங்கள் சரியாக தேர்வு செய்யாவிட்டால் உங்களுடைய கணினி புகைந்து போகும் வாய்ப்பு கூட உள்ளது. எனவே இதை சரியாக தேர்வு செய்ய வேண்டும். இந்த பவர் சப்ளை யூனிட் பல வகைகளில் கிடைக்கிறது. இதை பல நிறுவனங்கள் தயாரித்து வருகிறது ஆனால் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே சரியாக தயாரித்து வருகிறது. விலை அதிகமாக இருந்தாலும் கூட பரவாயில்லை உங்களுடைய பவர் சப்லி யூனிட் ஐ சரியாக தேர்வு செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

பவர் சப்ளை யூனிட்டை பொறுத்தவரை உயர் நிறுவனங்களின் சாதனத்தை வாங்குவது சிறந்தது.

வன்தட்டு இயக்கி சிடி ( CD Drive )

இந்த வன்தட்டுகள் இன்னும் சில பயன்பாட்டில் உள்ளது. இவற்றை மென்பொருள் இன்ஸ்டால் செய்யவும் மற்றும் டிரைவர் இன்ஸ்டால் செய்யவும் பயன்படுத்துகின்றனர். இப்பொழுதுகூட விண்டோஸின் மென்பொருள்கள் இந்த வந்த டுகளில் தான் வருகின்றது. இதை நீங்கள் குறைந்த விலையில் கூட வாங்கிக்கொள்ளலாம் உங்களுக்கு தேவைப்பட்டால் மட்டுமே. இந்த வன்தட்டு இயக்கி முக்கியமானது அல்ல. உங்களுக்கு விருப்பமிருந்தால் வாங்கிக் கொள்ளலாம்.

வந்துட்டு இயக்கி உங்களுக்கு தேவைப்பட்டால் மட்டுமே வாங்கிக் கொள்ளலாம்.

கேபினட்

இந்த கேபினட்டில் தான் நம்முடைய அனைத்து சிபியு சாதனங்களும் இருக்கும். இதன் மூலமாக அனைத்து சாதனங்களையும் ஒன்றாக பிடிக்க முடியும். இதை நீங்கள் உங்கள் விருப்பம் போல வாங்கிக் கொள்ளலாம். இந்த கேபினட்டில் தேர்வு செய்வது உங்களுடைய கூலிங் சிஸ்டம் மதர்போர்டு பொறுத்தே அமைகிறது. இந்த கேபினட் மூன்று அளவுகளில் கிடைக்கிறது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் கேமிங் கேபினட் அல்லது விளக்குகள் அணைந்து எரியும் கேபினட் போன்றவற்றை வாங்கிக்கொள்ளலாம். இந்த கேபினட் துவக்க விலை 1000 முதல் கிடைக்கும். இந்த கேபினட் பொறுத்துதான் கணினியின் லுக் கிடைக்கும்.

கேபினட்டைப் பொருத்தவரை உங்களுக்கு விருப்பமான படைப்பை வாங்கிக் கொள்ளலாம்.

மானிட்டர் ( Monitor )

மானிட்டர் மூலமாக சி பி யூ வில் இருந்து வரும் படங்களைப் பார்க்க முடியும். இந்த மானிட்டர்கள் பிக்சல்கள் பொறுத்து அமைகிறது. கேமிங் கணினி மானிடராக இருந்தால் அதிகமாக எப்பிஎஸ் தேவைப்படும். இந்த மானிடர் பல அளவுகளில் கிடைக்கிறது. இந்த மானிட்டரில் பல தொழில்நுட்ப மாற்றங்கள் உள்ளது. எனவே நீங்கள் இதை தெளிவாக தேர்வு செய்யாவிட்டால் உங்களுக்கு தேவையான படங்கள் கிடைக்காது மற்றும் கண்கள் எரிச்சல், வெப்ப மாறுதல் போன்றவை நிகழும். இப்பொழுது மானிட்டர் வாங்க வேண்டுமென்றால் நீங்கள் ஐபிஎஸ் ஃபுல் எச்டி மானிடர்களை வாங்கலாம் இதுதான் நடுநிலையான மானிடர்கள். அதிக பணம் இருந்தால் ஓஎல்இடி, கர்வுடு மானிட்டர் போன்ற தொழில்நுட்பங்களை வாங்கலாம்.

ADVERTISEMENT

மானிட்டரை பொருத்தவரை குறைந்தது ஐபிஎஸ் ஃபுல் எச்டி மானிடர் வாங்குவது சிறந்தது.

கீபோர்டு மற்றும் மவுஸ்

உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் கீபோர்டு மற்றும் மவுஸ் இல்லை எனில் கணினியை சுத்தமாக இயக்க முடியாது. இந்த கீ போர்ட் மற்றும் மவுஸ் தனியாகவும் ஒன்றாகவும் கிடைக்கும். இவற்றை பொறுத்தவரை பல தலைமுறைகள் உள்ளது. ஆனால் நீங்கள் புதிய தொழில்நுட்பத்தைக் கொண்ட கீபோர்டு மற்றும் மவுஸ் செட்டை வாங்கிப் பயன்படுத்தலாம். இந்த கீ போர்ட் மற்றும் மவுஸ் வேறுபட்ட பயனர்களுக்காக தனித்தனி வடிவமைப்பில் கிடைக்கிறது. மூன்று வகையில் பிரித்துவிடலாம். அவை சாதாரண வீட்டு பயன்பாட்டுக்காக, டைப்ரைட்டிங் பயன்பாட்டுக்காக மற்றும் கேம் விளையாடு வதற்காக.

நீங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எந்த பயனாளரோ அதுக்கு ஏற்றவாறு வாங்கிக் கொள்ளலாம்.

யுபிஎஸ் ( UPS )

யுபிஎஸ்சி முக்கிய பயன்பாடு : மின் இணைப்பு துண்டிப்பு ஆனவுடன் இந்த யூபிஎஸ் செயல்பட்டு நம் கணினியை திடீரென செயல் இழக்காமல் இருக்க பயன்படும். இதன் மூலமாக நமது கணினியின் முக்கிய பொருட்கள் சேதம் அடையாமல் இருக்கும். அது மட்டுமில்லாமல் நமது முக்கிய வேலைகள் அழியாமல் பாதுகாக்கும். எனவே ஒரு சிறிய யுபிஎஸ் ஆவது நமது கணினியுடன் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் இல்லையெனில் நமது ஹார்ட் டிஸ்க் மற்றும் மதர்போர்டு பவர் சப்லி போன்றவை செயல் இழக்க நேரிடும்.

யுபிஎஸ் கட்டாயமாக வாங்க வேண்டும் இல்லையெனில் கணினி பழுதடையும் வாய்ப்பு உள்ளது.

ஸ்பீக்கர்

கணினியில் இருந்து வெளிவரும் ஆடியோவை ஸ்பீக்கர் இல்லை எனில் கேட்க இயலாது. எனவே ஒரு 2.1 ஸ்பீக்கர் பொருத்தப்பட்டு இருக்க வேண்டியது அவசியமானது. உங்களிடம் ஹோம் தியேட்டர் இருந்தால் கூட இதன் மூலமாக பொருத்தி பயன்படுத்த முடியும். ஹோம் தியேட்டர் இல்லாதவர்கள் இந்த மினி ஸ்பீக்கர்களை வாங்கிக் கொள்ளவும். இது உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

உங்களுக்கு தேவைப்பட்டால் ஸ்பீக்கரை வாங்கிக் கொள்ளலாம் அல்லது உங்களுடைய போன் எட்செட் பயன்படுத்தலாம்.

லைட்ஸ் ( R-G-B Lights )

இப்போது இருக்கும் காலநிலையில் அணைந்து அணைந்து எரியும் எல்இடி விளக்குகளை பயனர்கள் அதிகமாக விரும்புகின்றனர். எனவே உங்களுக்கு அது பிடித்திருப்பின் அதை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இது ஒரு ஆடம்பர பார்வைக்காக மட்டுமே. இதன் மூலமாக வேற எந்த ஒரு மாற்றமும் நிகழ்ந்து விடாது. விருப்பமானவர்கள் இதை வாங்கிக் கொள்ளலாம்.

இந்த ஆடம்பரம் உங்களுக்கு தேவைப்பட்டால் மட்டுமே வாங்கிக் கொள்ளலாம்.

கூலிங் சிஸ்டம் ( Cooling System )

கூலிங் சிஸ்டத்தைப் பொறுத்தவரை இரண்டு வகைகளில் கிடைக்கிறது. அவை காற்றின் மூலம் கூலிங் செய்பவை மற்றும் நீரின் மூலம் கூலிங் செய்பவை. காற்றின் மூலம் கூலிங் செய்யும் முறை மிகவும் பழமையானது. இதன் மூலமாக சில சப்தங்களும் ஏற்படும். ஆனால் இதுவும் நன்றாகவே கூலிங் செய்யும். இப்பொழுது வந்திருக்கும் கூலிங் சிஸ்டம் நீரின் மூலம் கூலிங் செய்யும். இதன் மூலமாக எந்த ஒரு சத்தமும் ஏற்படாது. ஆனால் இதன் விலை மிகவும் அதிகம் ஆனது. எனவே உங்களுக்கு விருப்பம் இருந்தால் இதை பொருத்தி கொள்ளலாம்.

உங்களுடைய பட்ஜெட் அதிகமாக இருந்தால் இந்த வாட்டர் கூலிங் சிஸ்டத்தை வாங்கிக் கொள்ளலாம்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களும் இருந்தால் நாம் ஒரு மிகப்பெரிய பிரம்மாண்டமான அதிக சக்தியுள்ள கணினியை கூட வடிவமைக்க முடியும். ஆனால் அது உங்களுக்கு பயன்படுமா என்பதை பொறுத்தது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்துபொருட்களையும் நீங்கள் வாங்கி ஒரு கணினியை உருவாக்கினால் அதன் விலை குறைந்தது 50 ஆயிரம் இருக்கும். குறைந்த விலையில் கணினியை உருவாக்க விரும்புவோர் சில பொருள்களை பயன்படுத்தாமல் உருவாக்க வேண்டும்.

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *