storage-device-explained-ssd-vs-hdd-atozpc-in

Storage Device Explained

ADVERTISEMENT

storage-device-explained-ssd-vs-hdd-atozpc-in

சேமிப்பகத்தின் முன்னுரை

கணினியில் எந்த ஒரு தரவையும் சேமிக்க சேமிப்பகம் தேவைப்படுகிறது. கணினியின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு அதன் சேமிப்பகத்திலும் மாற்றங்கள் வந்துள்ளது. இந்த சேமிப்பகம் பற்றி முழு விளக்கத்தையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

உள்ளடக்கம்

சேமிப்பகம் எதற்கு பயன்படுகிறது?
சேமிப்பகத்தில் வகைகள்
பழைய சேமிப்பக வகைகள்
பயன்பாட்டிலுள்ள சேமிப்பக வகைகள்
எதிர்காலத்தில் வரக்கூடிய சேமிப்பு முறை
சேமிப்பகத்தில் அதிக அளவு எவ்வளவு?

சேமிப்பகம் எதற்காக பயன்படுகிறது?

உங்களுக்கு தெரிந்திருக்கும் சேமிப்பகம் நமது தரவுகளை தேக்கிவைக்க தேவைப்படுகிறது. இந்த சேமி பக்கங்கள் இல்லை என்றால் நமது தரவுகள் சேமித்து வைக்க இயலாது. நம் தினமும் எடுக்கக்கூடிய புகைப்படங்கள் வீடியோக்கள் ஆடியோக்கள் மற்றும் இன்னும் பல தரவுகளை தினமும் சேமித்து வைத்துக் கொள்கிறோம். இதை இப்போது சேமித்து வைத்து எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்துமாறு இந்த சேமிப்பார்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேமிப்பகத்தில் அனைத்துவிதமான தகவல்களையும் சேமித்து வைக்க இயலும். உதாரணமாக படங்கள் வீடியோக்கள் பாட்டுகள் இன்னும் பல. எனவே சேமிப்பகம் இல்லை என்றால் கணினிக்கு தேவையான மற்றும் நமக்கு தேவையான தரவுகளை சேமித்து வைக்க இயலாது.

படிக்க : கணினியில் இயங்குதளம் இன்ஸ்டால் செய்வது எப்படி?

சேமிப்பகத்தில் வகைகள்

சேமிப்பகத்தில் நிறைய வகைகள் உள்ளது. அவை ஒவ்வொன்றும் விலை மற்றும் வேகம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கொண்டு இருக்கும். சேமிப்பகத்தில் புதிய புதிய தொழில் நுட்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. கணினியின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு இந்த சேமிப்பகத்தில் வளர்ச்சியும் சமமாக வளர்ந்து கொண்டே வருகிறது. முதலில் கணினி வந்தபொழுது பிட் அளவுக்கு மட்டுமே சேமிப்புகளை செய்ய முடியும் ஆனால் இப்போது பல டெரா பைட் ஒரே நேரத்தில் சேமிக்க முடியும். இந்த செண்பகத்தின் வகைகள் மற்றும் அதன் சில விளக்கங்களைப் பற்றி கீழே பார்க்கலாம்.

ADVERTISEMENT
  • ஃபிளாப்பி டிஸ்க் ( Flophy Disk )
  • சிடி அல்லது டிவிடி ( Optical Storage )
  • பேப்பர் ஸ்டோரேஜ் ( OMR/Punch hole )
  • ஹார்ட் டிஸ்க் ( HDD )
  • பென்டிரைவ் ( Flash Drive )
  • மெமரி கார்டு ( Memory Card )
  • சாலிட் ஸ்டேட் டிஸ்க் ( SSD )
  • எம்.2 (M.2)
  • என் வி எம் ஈ (NVMe)
  • கிளவுட் ஸ்டோரேஜ் ( Clowd )
  • சிலிகான் ஸ்டோரேஜ் ( Project Silicon )

இனி வரப்போகும் காலத்தில் கண்ணாடியில் எப்படி தரவுகளை சேமித்து வைப்பது, என்று ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

பிளாப்பி டிஸ்க்

இந்த பிளாப்பி டிஸ்க் தொழில்நுட்பம் மிகவும் பழைய ஒரு தொழில்நுட்பமாகும். இந்தப் பிளாப்பி டிஸ்க்கில் ஒரு சில கிலோ பைட் அளவு ஸ்டோரேஜ் மட்டுமே சேமிக்க முடியும். இந்த பிளாப்பி டிஸ்க் பழைய கணினிகளில் காணப்படும். இது ஒரு மின்காந்த விசை சேமிப்பகம் ஆகும். இந்த தொழில்நுட்பம் இப்பொழுது முற்றிலுமாக அழிந்து விட்டது.

படிக்க : சிபியு ஜிபியூ ஏபியூ வேறுபாடுகள் மற்றும் அதன் வகைகள். உங்களுக்கு தேவையான ப்ரோசிஸோர் வாங்குவது எப்படி?

சிடி அல்லது டிவிடி

இந்த சிடி அல்லது டிவிடி தொழில்நுட்பம் இப்பொழுதும் சில கணினிகளில் காணப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் 2010 முன் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. ஏனெனில் அப்போது பென்டிரைவ் மற்றும் கணினிகள் அதிகமாக இந்தியாவுக்குள் இல்லை. எனவே இந்த சிடி அல்லது டிவிடியை பயன்படுத்தி மக்கள் புதிய படங்களை சேமித்து பார்க்க பயன்படுத்தினார்கள். இந்த சிடி அல்லது டிவிடி இப்பொழுதும் ஒரு சில கணினிகளில் காணப்படுகிறது. ஏனெனில் ஒரு சில நிறுவனங்கள் தமது கணினிக்கு தேவையான மென்பொருள்களை சிடி மூலமே வழங்குகிறது. எனவே இந்த சிடி இப்போதும் ஒரு சிலரிடம் பயன்பாட்டில் உள்ளது.

பேப்பர் ஸ்டோரேஜ்

இது ஒரு மிகப்பழைய தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு அட்டையில் துளையிட்டு அதன் மூலமாக தரவுகளை சேமித்து வைத்து சில கணக்குகளையும் பயன்படுத்தினார்கள். இந்த தொழில்நுட்பம் ஆரம்ப காலத்தில் கணிப்பான் மற்றும் கணினிகளில் தரவு சேமிப்பகம் ஆகவும் பயன்பட்டது. இந்த தொழில்நுட்பம் இப்போதும் பயன்பாட்டில் உள்ளது எங்கே என்றால் தமிழ்நாட்டில் தறி ஓட்டுநரிடம் அவர்கள் செய்யக்கூடிய ஆடைகளுக்கு இந்த தொழில்நுட்பம் மூலமாகவே வடிவம் கொடுக்கின்றனர்.

ஹார்ட் டிஸ்க்

இந்த தொழில்நுட்பம் போதும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஹார்ட்டிஸ்க் தொழில்நுட்பம் கணினிகளில் அதிகமாக காணப்படுகிறது. இப்பொழுதும் இதை அதிகமாக மக்கள் வாங்கி உபயோகப்படுத்தலாம். இந்த ஹார்ட் டிஸ்க் ஐ கொண்டு மக்கள் பல சேமிப்பகங்களில் பல தரவுகளையும் சேமித்தல் முடியும். இந்த தொழில்நுட்பம் ஒரு புரட்சியை ஏற்படுத்தி விட்டது. எனினும் இந்த தொழில்நுட்பம் இன்னும் சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்தாலும் வரலாம். ஏனென்றால் இப்பொழுது இந்த ஹார்ட் டிஸ்க் அடுத்த தொழில்நுட்பம் வந்துவிட்டது.

பென்டிரைவ்

இது ஒரு மாற்று வகை தொழில்நுட்பம் ஆகும். இந்த பென்டிரைவ் மூலமாக ஒரு குறிப்பிட்ட அளவு தரவுகளை சேமித்து வைக்க முடியும். ஹார்ட் டிஸ்க் பிறகு இந்த தொழில் நுட்பம் வாய்ந்தது. இந்த தொழில்நுட்பத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு தரவுகளை சேமித்து வைக்க முடியும். இது எடை மிகவும் குறைவாகவும் விலையும் சரியாகவும் இருந்தது. எனவே இதை மக்கள் அதிகமாக வாங்கி பயன்படுத்தினார்கள். இப்பொழுதும் இந்த தொழில்நுட்பம் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பென்டிரைவ் தற்பொழுது அதிக வளர்ச்சியை எட்டியுள்ளது. ஒரு சிறிய பென் ட்ரைவில் 1 டி பி அளவு தரவுகளை சேமித்து வைக்கவும் முடியும்.

படிக்க : கணினியில் குப்பைகளை நீக்குவது எப்படி?

மெமரி கார்டு

இந்த மெமரி கார்டு தொழில்நுட்பம் மற்றும் பென்டிரைவ் தொழில்நுட்பம் ஏறக்குறைய ஒன்றாகும். பென்டிரைவ் கணினிகளில் தொடர்புபடுத்தி பயன்படுத்த முடியும் மற்றும் மெமரி கார்டு தொலைபேசிகளில் பயன்படுத்த முடியும். ஆனால் இப்பொழுது இந்த இரண்டையும் எந்த ஒரு சாதனத்துடன் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். இந்த தொழில் நுட்பமும் இப்பொழுதும் நிலையில் உள்ளது. இந்த மெமரி கார்டு பென்டிரைவை போலவே அதிகமான வளர்ச்சியை எட்டியுள்ளது. ஒரு சிறிய மெமரி கார்டில் மிகப்பெரிய அளவிலான தரவுகளை சேமிக்க முடியும். இதன் தேக்கு திறன் 1 டி பி வரை கூட இருக்கிறது.

ADVERTISEMENT

சாலிட் ஸ்டேட் டிஸ்க்

இது ஒரு மிகப் புதிய தொழில்நுட்பம் ஆகும். இந்த தொழில்நுட்பம் தற்போது புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. மக்களின் விருப்பம் தற்போது இந்த தொழில்நுட்பத்திற்கு மாறியுள்ளது. ஏனெனில் இந்த சாலிட் ஸ்டேட் டிஸ்க் மிக அதிக வேகத்துடன் இயங்கும். தரவுகளை பரிமாற்றம் செய்யவும் தரவுகளை சேர்க்கவும் இது அதிக வேகத்துடன் இயங்குகிறது. இதனால் கணினி மிக அதிக வேகத்துடன் இயங்குகிறது. அதுமட்டுமில்லாமல் இதன் எடை மிகவும் குறைவாகவும் சிறிய இடத்தை அடைத்துக்கொள்ளும் திறன் கொண்டது. எனவே மக்கள் இதை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதன் விலை சாதாரன ஆர்டு டிஸ்க்கை விட இரண்டு அல்லது மூண்று மடங்கு அதிகம்.

எம்.2

இதுவும் ஒரு சாலிட் ஸ்டேட் டிஸ்க் ஆகும். இது ஒரு இரண்டாம் தலைமுறை சாலிட் ஸ்டேட் டிஸ்க் ஆகும். இதன் மூலமாக தரவுகளை சாலிட் ஸ்டேட் டிஸ்க் விட இரு மடங்கு அதிகமான வேகத்தில் சேமிக்க முடியும். இந்த தொழில்நுட்பம் கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக கணினி மூன்று மடங்கு வேகத்துடன் இயங்குகிறது.

என் வி எம் ஈ

இதுவும் ஒரு சாலிட் ஸ்டேட் டிஸ்க் ஆகும். இதை நமது கணினியின் பிசிஐ கார்டு போடும் பகுதியின் மூலம் தொடர்பு படுத்திக் கொள்ளலாம். அதனால் இதன் வேகம் அதிகமாக கிடைக்கும். இந்த சாலிட் ஸ்டேட் டிஸ்க் பல விதங்களில் கிடைக்கிறது.

படிக்க : அழிந்த தரவுகளை மீட்பது எப்படி? கணினியில்,மொபைல் போனில், மற்ற சேமிப்பகங்களில்.

கிளவுட் ஸ்டோரேஜ்

கிளவுட் கம்ப்யூட்டிங் என்று ஒரு சிலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த கிளவுட் கம்ப்யூட்டிங் என்பது கிளவுட் இல் தரவுகளை எப்படி சேமிப்பது மற்றும் எப்படி எடுப்பது என்பது பற்றிய ஒரு தொழில்நுட்பமாகும். இந்த கிளவுட் ஸ்டோரேஜ் மூலமாக நமது கணினியில் உள்ள தரவுகளை ஆன்லைனில் அல்லது இன்டர்நெட்டில் பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ளலாம். இந்த தரவுகளை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இன்டர்நெட் இருந்தால் பார்க்க முடியும். உதாரணமாக கூகுள் ட்ரைவ் ( Google Drive ) மற்றும் ஒன் ட்ரைவ் (One Drive ).

சிலிகான் ஸ்டோரேஜ்

இந்த சிலிக்கான் ஸ்டோரேஜ் என்பது ஒரு எதிர்கால தொழில் நுட்பமாகும். இந்த தொழில்நுட்பத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது. இந்த சிலிகான் ஸ்டோரேஜ் உதவியுடன் தரவுகளை பல வருடங்களுக்கு அறிவில்லாமல் மற்றும் எந்த ஒரு பாதிப்பு இல்லாமல் சேமித்து வைக்க முடியும் என கூறுகின்றார்கள். இந்த தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தால் நமக்கு இன்னும் சில நன்மைகள் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் சிலிகான் நமது பூமியில் அதிகமாக கிடைக்கிறது எனவே தரவுகளை அதிகமாக சேமித்து மற்றும் விலை குறைவாகவும் பெறமுடியும்.

பழைய சேமிப்பு முறை

கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகள் அனைத்தும் பழைய கால சேமிப்பு முறைகள் அல்லது கணினி முதலில் உபயோகப்படுத்திய சேமிப்பு முறைகள் ஆகும்.
ஃபிளாப்பி டிஸ்க் ( Flophy Disk )
சிடி அல்லது டிவிடி ( Optical Storage )
பேப்பர் ஸ்டோரேஜ் ( OMR/Punch hole )

ADVERTISEMENT

படிக்க : கணினித் துவங்கவில்லையா? இதை செய்து பாருங்க

நடைமுறையில் உள்ள சேமிப்பு முறை

கீழே கொடுக்கப்பட்டுள்ள சேமிப்பு முறைகள் இப்போதும் உபயோகத்தில் உள்ளது மற்றும் மக்கள் இதை அதிகமாக பயன்படுத்திக் கொண்டு வருகின்றார்கள்.

  • சிடி அல்லது டிவிடி ( Optical Storage )
  • பேப்பர் ஸ்டோரேஜ் ( OMR/Punch hole )
  • ஹார்ட் டிஸ்க் ( HDD )
  • பென்டிரைவ் ( Flash Drive )
  • மெமரி கார்டு ( Memory Card )
  • சாலிட் ஸ்டேட் டிஸ்க் ( SSD )
  • எம்.2 (M.2)
  • என் வி எம் ஈ (NVMe)
  • கிளவுட் ஸ்டோரேஜ் ( Clowd )

எதிர்கால சேமிப்பு முறை

இந்த எதிர்கால சேமிப்பு முறையை பல நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றார்கள் மற்றும் ஆராய்ச்சி செய்து வருகின்றார்கள். இந்த சிலிகான் ஸ்டோரேஜ் ( Project Silicon ) என்ற தொழில்நுட்பத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆராய்ச்சி செய்து வருகின்றது. இது வெற்றியடைந்தால் இது எதிர்காலத்தில் பயன்படுத்தப்படும்.

சேமிப்பகத்தில் அதிக அளவு எவ்வளவு?

இந்த சேமிப்பகங்களை ஒன்றோடு ஒன்று இணைத்தால் அதை இரு மடங்கு அதிகமாக சேமிப்பகமாக மாற்ற முடியும். எனவே இதன் அதிக அளவு சேமிப்பு அளவை அளக்க முடியாது. இது போன்ற அதிகமாக சேமிப்பகத்தை ஒரு சில நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டு வருகின்றார்கள். உதாரணமாக கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள். ஏனெனில் இவர்கள் அதிகமான தரவுகளை சேமித்து வைத்திருக்க வேண்டும் அதுமட்டுமில்லாமல் பயனர்களுக்கு சேவையை வழங்கிக் கொண்டே இருக்கவேண்டும். எனவே இவர்கள் அதிகமான சேமிப்பகத்தை உபயோகப்படுத்துகிறார்கள்.

படிக்க : சிறந்த மடிக்கணினி வாங்குவது எப்படி? வாங்குவதற்கு முன் பார்க்க வேண்டியவை?

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும், மேலும் இது போன்ற பதிவுகளுக்கு எங்கள் வலைதளத்தை பார்வையிடவும்.
நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *