aptop-buy-guide-in-tamil-atozpc-in

New Laptop Buy Guide

ADVERTISEMENT

aptop-buy-guide-in-tamil-atozpc-in

சிறந்த மடிக்கணினி வாங்குவது எப்படி

பலருக்கும் ஆசை இருக்கும் நாம் ஒரு சொந்தமாக மடிக்கணினி வாங்க வேண்டும் என்று. மடிக்கணினி வாங்கும் முக்கிய காரணம் அதை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்ல முடியும் என்பதற்காக மட்டுமே. இந்த மடிக்கணினியில் பல மாற்றங்களும் வேறுபாடுகளும் மற்றும் சில நிறுவனங்கள் தயாரித்து வருகிறது. இவ்வளவு இருக்கும் மடிக் கணினி வகைகள் மற்றும் அதன் திறன்கள் மிகவும் வேறுபாடானது. அதை எப்படி வாங்குவது உங்களுக்கு தேவையான மடிக்கணினி எது என்று தெளிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

மடிக்கணினியை வாங்குவதற்கு முன் பார்க்க வேண்டியவை

இந்த மடிக்கணினியை வாங்குவதற்கு முன்னால் பார்க்க வேண்டிய சில முக்கிய குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம். மடிக்கணினியை பெரும்பாலானோர் வாங்குவதற்கு முக்கிய காரணம் அதை எளிதில் எங்கு வேண்டுமானாலும் கையில் எடுத்து செல்ல முடியும் என்பதும் மற்றும் அதில் அனைத்து தொழில் நுட்பங்களும் அடங்கியிருக்கும் என்பதே.

மடிக்கணினியை வாங்குவதற்கு முன்னால்  பார்க்க வேண்டிய சில விஷயங்கள்.

இயங்குதளம் ( Operating System )

மடிக்கணினி அல்லது கணினி இந்த இயங்குதளம் இல்லை எனில் இயங்காது. இந்த இயங்குதளம் கணினியில் தற்போது மூன்று வகையில் கிடைக்கிறது. அவை விண்டோஸ் , குரோம் ஓஎஸ் மற்றும் மேக் ஓஎஸ். இவற்றின் வேறுபாடுகள் மற்றும் திறன்களை பற்றி பார்க்கலாம்.

ADVERTISEMENT

படிக்க : கணினியில் இயங்குதளம் இன்ஸ்டால் செய்வது எப்படி?

விண்டோஸ் ஓஎஸ் (Windows Os)

இது பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப் பட்டு வருகிறது. ஏனெனில் இது மிகவும் பயன் படுத்துவதற்கு எளிமையாக இருக்கும் என்பதற்காக. அதுமட்டுமில்லாமல் இதில் புதிய புதிய மென்பொருள்கள் அதிகமாக கிடைக்கும். அதில் நமக்கு தேவையான மென்பொருளை நிறுவி நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இது பல சாதனங்களுடன் ஒத்திசைவு செய்யும் என்பதும் ஒரு காரணம் ஆகும்.

மேக் ஓஎஸ் ( Mac OS )

இந்த மேக் ஓஎஸ் ஆனது அவர்களது மேக்புக் போன்ற மடிக்கணினிகளில் கிடைக்கிறது. அதை வேண்டுமானாலும் நமது கணினியிலும் நிறுவிக்கொள்ளலாம். ஆனால் வேகம் மற்றும் திறன் மாறுபடும். இந்த மேக் ஓஎஸ் ஒரு லினக்ஸ் மூலம் எழுதப்பட்டதாகும். இதில் மென்பொருள்கள் மிக அதிகமான அளவு இல்லை என்றாலும் நமக்கு தேவையான அளவு மென்பொருள்கள் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்த முக்கிய காரணம் இதில் அதிகமாக வைரஸ் வராது மற்றும் பயன்படுத்த வேகமாக இருக்கும் என்பதே. இதன் விலை மிகவும் அதிகமாக இருக்கும் எனவே வெளி நாட்டில் உள்ளோர் மட்டுமே அதிகமாக இதை பயன்படுத்துகின்றனர்.

குரோம் ஓஎஸ் (Chrome OS)

உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் கூகுளின் குரோம் பிரவுசரை பயன்படுத்தி இருப்பீர்கள். இந்த குரோம் ஓஎஸ் நீங்கள் பயன்படுத்தும் அதே குரோம் பிரவுசர் மூலமாகத் தான் இயங்குகிறது. இதை நாம் ஒரு வீட்டு கன்னியாகவும் பயன்படுத்த முடியும். இதில் அதிகமான மென்பொருள்கள் கிடையாது ஆனாலும் இது வீட்டுப் பயன்பாட்டுக்கு அல்லது படம் பார்ப்பதற்கு போன்ற பயன்பாட்டுக்கு சிறந்ததாக இருக்கும். இந்த குரோம் ஓஎஸ் நாம் நமது கணினியில் கூட நிறுவ முடியும்.

பட்ஜெட் மடிக்கணினி

கணினி அல்லது மடிக்கணினி கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று வகையான மக்களுக்கு தேவைப்படும். இதில் நீங்கள் எந்த வகை என்பதை தேர்வு செய்து அதற்கேற்றவாறு மடிக்கணினியை வாங்கிக் கொள்ளவும்.

தொடக்க அளவு மடிக்கணினி ( Low Budget )

வீட்டு பயன்பாட்டிற்காக, படம் பார்ப்பதற்காக, வலைத் தேடல் (Browse) செய்வதற்காக அல்லது இப்போதுதான் கணினியை பற்றி பயில்கிறார்கள் இதுபோன்ற அளவுக்கு இந்த மடிகணினி போதுமானதாகும்.
இந்த தொடக்க அளவு மடிக் கணினி விலை ரூபாய் 30,000 வரை இருக்கலாம்.

மிதமான அளவு மடிக்கணினி ( Medium Budget )

ஒரு போதுமான அளவு மடிக்கணினி என்பது தொழில் சார்ந்த உபயோகத்திற்கு (Business Laptop) மற்றும் மாணவர்களுக்காக (Students use) அல்லது இதைக்கொண்டு மிதமான விளையாட்டுக்களை விளையாட முடியும்.
இந்த மிதமான அளவு மடிக்கணினி விலை ரூபாய் 50,000 வரை இருக்கலாம்.

ADVERTISEMENT

விளையாட்டுக்காக மடிக்கணினி (Gaming Laptop)

நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எந்த விதமான விளையாட்டுகளை விளையாட வேண்டும் என்றால் நீங்கள் இந்த மடிக்கணினி தேர்வு செய்யலாம். அதுமட்டுமில்லாமல் நீங்கள் ஒரு பெரிய மென்பொருளை இயக்க வேண்டும் என்றாலும் இந்த கணினி நிச்சயமாக பயன்படும்.
இந்த விளையாட்டுக்கான மடிக்கணினி விலை ரூபாய் 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை இருக்கலாம்.

தொழில்நுட்பங்கள்

சரி இந்த மடிக்கணினியில் என்னென்ன தொழில்நுட்பங்கள் உள்ளது மற்றும் அதன் அளவுகளை பற்றி பார்க்கலாம். இந்த தொழில்நுட்பங்களை பொருத்து உங்களுடைய பணமும் மாறுபடும். உங்களுடைய கணினியை உங்கள் தேவைக்கேற்ப ஒரு சில தொழில் நுட்பங்களை மாற்றிக் கொள்ளலாம். உதாரணமாக சேமிப்பகம் மற்றும் ஒருசில தொழில்நுட்பங்கள்.

திரையின் அளவு (Screen Size)

மடிக் கணினி திரையின் அளவு 14 அங்குலம் முதல் 18, 20 போன்றவை வரை கிடைக்கிறது. இதில் மடிக் கணினி திரையின் அளவு 15 இருந்தால் போதுமானது. இதன் விலையும் நமக்கு சரியாக இருக்கும். அதற்கு மேலே வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் அது உங்கள் விருப்பம்.

பிராசஸர் ( Processor )

பிராசஸர் என்பது கணினியின் மூளையாக கருதப்படுகிறது. ஏனெனில் அனைத்து தரவுகளும் இங்கேதான் மாற்றம் செய்யப்படும். இந்த பிராசஸர் குறைந்த அளவு 3 ஜிக் ஆஃ இட்ஸ் (GHz) இருக்க வேண்டும். அதற்கு மேலே வேண்டுமானாலும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம்.

கிராபிக்ஸ் ப்ராசசர் ( graphics processor )

கிராஃபிக்ஸ் புரோசெசோர் என்பது நீங்கள் திரையில் பார்க்கக்கூடிய அனைத்து காட்சிகளையும் தெளிவாக காட்ட உதவும் ஒரு பிராசஸர் மெமரி ஆகும். இதன் மூலமாக நீங்கள் பெரிய அளவு விளையாட்டுகள் மற்றும் மென்பொருள்களை நிறுவ முடியும். இந்த மெமரி இல்லாவிட்டால் நீங்கள் செய்யும் வேலையில் சற்று சிரமம் ஏற்படும். எனவே உங்களுக்கு கிராபிக்ஸ் மெமரி தேவையா இல்லையா என்று நீங்கள் பயன்படுத்தும் மென்பொருள் பொருத்து வாங்கலாம்.

 

ADVERTISEMENT

 படிக்க : சிபியு vs ஜிபியூ vs ஏபியூ வேறுபாடுகள் மற்றும் அதன் வகைகள்

 

சேமிப்பகம் ( Storage )

நினைவகத்தை பொறுத்தவரை உங்களுக்கு இரண்டு தொழில்நுட்பங்கள் முறையில் கிடைக்கிறது. அவை வன்தட்டு ( HDD ) மற்றும் மண் தட்டு ( SSD ). இதில் மண் தட்டு அதிக வேகத்துடன் இருக்கும் இதன் விலையும் அதிகமாக இருக்கும். ஆனால் வன்தட்டு முறை போதுமான அளவு வேகமாக இருக்கும் இதன் விலையும் குறைவாக இருக்கும். நினைவகத்தை பொருத்தவரை வன்தட்டு முறை பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீங்கள் அதிக பணம் கொடுத்து மடிக்கணினி வாங்கும் பொழுது இந்த மண் தட்டு முறையை வாங்குவது நல்லது. இது உங்களுடைய விருப்பம் தான்.

ரேம் அளவு ( RAM )

உங்களுடைய இந்த ரேம் உங்களுடைய கணினிக்கு ஒரு வேகத்தை கொடுக்கிறது. ஆனால் இது முற்றிலும் அதிகமாக வேகத்தையும் கொடுக்காது. கணினியின் வேகமானது உங்களுடைய ப்ராசசர், சேமிப்பகம் மற்றும் ரேம் போன்றவற்றை பொருத்து அமைகிறது. இந்த ரேம் குறைந்தது 4 ஜிபி அளவு இருக்க வேண்டும். அதற்கு மேலே வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு வாங்கிக் கொள்ளலாம்.

தொடுதிரை கணினி ( Touch screen )

என்ன கணினியில் தொடுதிரை உள்ளதா? ஆம் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய தொலைபேசியில் தொடுதிரை வந்தபொழுது மடிக்கணினியிலும் இன்னும் சில சாதனத்திலும் தொடுதிரை கொண்டுவர முடிவு செய்துவிட்டார்கள். இப்பொழுது கணினியிலும் தொடுதிரை வசதி உள்ளது. இந்த தொடுதிரை வசதி உள்ள கணினிகள் விலை சிறிது அதிகமாகவே இருக்கும். விருப்பமிருந்தால் நீங்கள் இதை வாங்கிக் கொள்ளலாம்.

முன்பக்க கேமரா (web cam)

இந்த முன்பக்க கேமரா மூலமாக உங்களுடைய புகைப்படங்களை எடுக்க முடியும். இது அனைத்து மடிக் கணினிகளும் கிடைக்கும். இதயங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம்.

வன்தட்டு ( Compact disc )

மடிக்கணினியிலும் வன்தட்டு போடும் வசதி உள்ளது. ஆனால் இப்பொழுது வரும் சில கணினிகளில் இந்த வசதி கிடையாது ஏனெனில் அதில் எடையை குறைப்பதற்காக இந்த வன்தட்டு நீக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த வன் தட்டு பயன்பாடு மிகவும் குறைந்துள்ளது. இதற்கு பதிலாக நாம் பென்டிரைவ் மற்றும் சேமிப்பகங்களில் பயன்படுத்துகிறோம். இது உங்களுக்கு தேவைப்பட்டால் வாங்கிக் கொள்ளலாம். அல்லது யூஎஸ்பி யின் மூலம் இணைக்கும் வெளிப்புற வன்தட்டு வகைகளும் கிடைக்கும்.

ADVERTISEMENT

படிக்க : ரேம் பற்றி முழு விளக்கம். வகைகள்? எது சிறந்தது? இன்னும் பல…

உள்ளீடு மற்றும் வெளியீடு ( Ports )

நீங்கள் வாங்கக்கூடிய கணினியில் உங்களுக்கு தேவையான அனைத்து விதமான உள்ளீடு மற்றும் வெளியீடு அமைப்புகள் உள்ளதா என்று சரி பார்த்து வாங்க வேண்டும். உங்களுக்கு தேவைப்படும் உள்ளீடு மற்றும் வெளியீடு அமைப்புகள் அனைத்தும் மடிக்கணினியில் இடம்பெற்று இருக்கும்.

ஒருசில போர்ட்ஸ் அமைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

Type-C அமைப்பு

இந்த யூஎஸ்பி type-c அமைப்பு ஒரு புதுவிதமான உள்ளீடு மற்றும் வெளியீடு அமைப்பாகும். இதனைக் கொண்டு பல உள்ளீடு மற்றும் வெளியீடு வேலையை ஒரே நேரத்தில் செய்ய முடியும். இது ஒன்று இருந்தால் மட்டும் அனைத்துவிதமான உள்ளீடு மற்றும் வெளியீடு அமைப்புகளை கட்டுப்படுத்த முடியும். உங்களுக்கு இது தேவைப்பட்டால் வாங்கிக் கொள்ளலாம்.

USB 3.0 ( யுஎஸ்பி 3.0 )

இது அனைத்து விதமான கணினிகளிலும் இருக்கும். இது அல்லாமலும் ஒரு சில கணினிகள் இருக்கும். அவை பழைய கணினிகள் ஆகும். குறைந்தபட்சம் ஒரே ஒரு யுஎஸ்பி 3.0 இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும். அப்போதுதான் தரவு பரிமாற்றம் வேகமாக இருக்கும்.

தொடர்புகள் ( Connections )

உங்கள் மடிக் கணினிக்கு தேவையான அனைத்து விதமான தொடர்புகளும் உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும். இங்கே தொடர்புகள் இரண்டு வகையாக இருக்கும். அவை ப்ளூடூத் மற்றும் வைபை. ப்ளூடூத் மற்றும் வைபை அமைப்பு இன்டர்நெட் கனெக்ட் செய்ய, தகவல்களை பரிமாற மற்றும் ஒரு சில கட்டுப்படுத்தும் அமைப்புக்களாகும் செயல்படுகிறது. எனவே இவை உள்ளதா என்று பரிசோதித்து வாங்க வேண்டும்.

இதுமட்டுமல்லாமல் மடிக்கணினியில் மின்தேக்கி, விசைப்பலகை இணைப்புகள் போன்ற வசதிகளும் உள்ளது. அது உங்களின் தேவைக்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

நீங்கள் அதிக நேரம் உங்கள் மடிக்கணினியில் வேலை செய்யப் போகிறீர்கள் என்றால் அதற்கு ஏற்றவாறு அதிக அளவு மின்தேக்கி வாங்க வேண்டும். குறைந்த அளவு மின்தேக்கி வாங்கினால் நீங்கள் சிறிது நேரம் மட்டுமே வேலை செய்ய முடியும்.

வாரண்டி மற்றும் பிராண்ட்

நீங்கள் வாங்கக்கூடிய கணினிக்கு எவ்வளவு வருடம் வாரண்டி உள்ளது? என்று சோதித்து வாங்க வேண்டும். அனைத்து கணினிகளுக்கும் குறைந்தது ஒரு வருடம் முதல் மூன்று வருடம் வரை வாரண்டி இருக்கும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் வாங்கக்கூடிய மடிக்கணினி பிராண்ட், சர்வீஸ் சபோட் உள்ளதா என்று சோதித்து வாங்க வேண்டும்.

படிக்க : முழு கணினியை உருவாக்குவது எப்படி? கணினியை உருவாக்க தேவையான பொருட்கள்?

இந்த ஒரு பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எண்ணுகிறேன். இந்த பதிவு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

நன்றி.

படிக்க : இன்டெல் மற்றும் ஏ எம் டி பிராசசர் ? வேறுபாடுகள்? மலிவானது? எது சிறந்தது? எதை வாங்கலாம்?

படிக்க : வைரஸ் கிளீன் செய்வது எப்படி? இலவச மென்பொருள் மூலம் வைரஸ்-ஐ அழிப்பது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *