how-to-fix-dll-missing-error-in-tamil-atozpc-in

dll Missing Error

ADVERTISEMENT

how-to-fix-dll-missing-error-in-tamil-atozpc-in

DLL கோப்பு பிழை

நமது கணினியில் பொதுவாக பலவகையான பிழைகள் ஏற்படும். அவற்றை சரிசெய்ய பலவகையான வழிமுறைகளும் இருக்கும். ஆனால் கணினியில் மிகவும் அதிகமாக ஏற்படும் ஒரு பிழை என்னவென்றால் இந்த DLL பிழை தான்.

இந்தப் பிழை கணினியில் அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஒரு சில நேரங்களில் அவை தானாகவே சரியாகிவிடும். ஒரு சில நேரங்களில் அவை சரியாகாது. இந்த ஒரு பிழை மூலம் கணினி பல நேரங்களில் தவறாக செயல்படும். இந்தப் பிழைகளை போக்க பல வழிமுறைகள் உள்ளது. அவற்றைப் பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

இந்தப் பிழை எப்படி உருவாகிறது

இந்த DLL பிழையை சரி செய்யும் முன் இது எப்படி உருவாகிறது என்று பார்க்கலாம். இந்தப் பிழையானது கணினியிலுள்ள ஒரு சில கோப்புகள் (Files) காணாமல் போவதினால் ஏற்படும் பிழையாகும். நமது கணினியில் எப்படி கோப்புகள் காணாமல் போகும் என யோசிக்க வேண்டாம். நாம் தவறுதலாக ஒரு சில காரியங்கள் செய்யும் பொழுது அந்த கோப்புகள் காணாமல் போகும்.

சரி அந்த கோப்புகள் எப்படி எல்லாம் காணாமல் போகிறது என்று கீழே பார்க்கலாம்.

  • நீங்கள் தவறுதலாக ஏதாவது ஒரு கோப்பை நீக்கம் செய்தால் இந்தப் பிரச்சனை வரும்.
  • ஒரு புதிய மென்பொருள் தவறுதலாக நிறுவப்பட்டால் இந்த பிரச்சனை வரும்.
  • கணினி திடீரென அனையும் பொழுது சில கோளாறுகள் மூலமாக இந்த பிரச்சனை வரும்.
  • தவறான ஒரு கோப்பை தவறான இடத்தில் மாற்றுவதன் மூலமாக இந்த கோளாறு வரும்.
  • புதிய கணினியில் பழைய விதமான கோப்புகளை அப்டேட் செய்வதன் மூலமாக இந்தப் பிழை வரும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள சில காரணங்கள் மூலமாக இந்த DLL பிரச்சனை வரும். இன்னும் ஒரு சில காரணங்களும் உள்ளது. இருப்பினும் பொதுவாக இந்த காரணங்கள் மூலமாக மட்டுமே அதிகமான பிழைகள் ஏற்படும்.

ADVERTISEMENT

படிக்க : கணினியின் வேகத்தை அதிகப்படுத்துவது எப்படி?

இந்தப் DLL பிழையை எப்படி சரி செய்வது?

இந்தப் பிழையை சரி செய்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் ஏதாவது ஒன்று அல்லது அனைத்தையும் முயற்சி செய்து பாருங்கள். அப்போதுதான் உங்கள் DLL பிழை சரி செய்யப்படும்.

கணினியை மறுதுவகம் செய்க

உங்கள் கணினிக்கு முதலில் எந்த பிரச்சனை வந்தாலும் ஒரு முறை மறுதொடக்கம் செய்க. உங்களுக்கு இந்த டி எல் எல் பிரச்சனை வந்தால் முதலில் நீங்கள் கணினியை மறுதொடக்கம் செய்து பார்க்கவேண்டும். அப்போது உங்கள் கணினி எந்த ஒரு பிழையும் இல்லாமல் துவங்கினால் அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் கணினியை முதலில் அனைத்து சிறிது நேரம் கழித்து துவக்கவும். அப்போதுதான் டெம்ப்ரவரி மெமரி துடைக்கப்படும்.

கணினியை மறு தொடக்கம் செய்த பிறகும் உங்களுக்கு இதே பிரச்சனை வந்தால் அடுத்த தீர்வை பார்க்கவும்.

படிக்க : கணினி சேமிப்பாக வகைகள் மற்றும் அதன் விளக்கம்

டெம்பரவரி மெமரி துடைக்க ( Temp )

உங்கள் கணினியில் அதிகபடியான டெம்பரவரி மெமரி இருந்தால் அதை சுத்தமாக துடைக்க வேண்டும். ஒரு சில காரணங்களால் இந்த பிழை வந்திருக்கலாம்.
உங்கள் கணினியின் டெம்பரவரி மெமரி கிளீன் செய்ய சிசி கிளீனர் போன்ற மென்பொருள் பயன்படுத்தி சுலபமாக துடைக்க முடியும்.

டெம்ப்ரவரி மெமரி நீக்கிய பிறகும் கணினியை ஒரு முறை மறுசுழற்சி செய்து பார்த்து அந்தப் பிழை வருகிறதா இல்லையா என்று தெரிந்து கொள்க. மறுபடியும் அந்த பிள்ளை வந்தால் அடுத்த தீர்வை பார்க்கவும்.

ADVERTISEMENT

கமெண்ட் ( cmd )மூலம் சரி செய்ய

உங்கள் கணினியில் டி எல் எல் பிழை வந்தால் அல்லது வேறு ஏதாவது இலைகள் வந்தாலும் உங்கள் கணினியில் கமெண்ட் மூலம் ஓரளவு சரி செய்ய முடியும். கமெண்ட் மூலம் சரிசெய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை பயன்படுத்துக.

  • முதலில் ஸ்டார்ட் பட்டன் அழுத்தி கொள்க.
  • இப்போது cmd என டைப் செய்க.
  • இப்போது command prompt எனும் ஒரு செயலி வரும்.
  • அதை வலது கிளிக் செய்து run as administrator எனும் தேர்வை கொடுக்க.
  • இப்போது உங்கள் திரையில் எஸ் அல்லது நோ என்று கேட்கும் அதற்கு நீங்கள் எஸ் என கொடுக்கவும்.
  • இப்போது உங்களுக்கு command prompt திரை வரும்.
  • அந்தத் திரையில் sfc /scannow என தட்டச்சு செய்து என்டர் செய்க.
  • இப்போது ஏதாவது ஒரு பிழை இருந்தால் உங்கள் கணினி காட்டிக் கொடுத்துவிடும். மற்றும் பிழையை அதை நீக்கிவிடும்.

பிழை நீங்கவில்லை என்றால் அடுத்த தீர்வை பார்க்கவும்.

டிரைவர்ஸ் அப்டேட் செய்ய

உங்கள் கணினியில் இந்த பிழை டிரைவர் மூலமாகவும் வரலாம். எனவே டிரைவர் மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்து ஒரு முறை மறுசுழற்சி செய்க.

கணினியில் டிரைவர் அப்டேட் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வழியை பின்பற்றுக.

  • முதலில் உங்கள் கணினியில் ஃபைல் மேனேஜர் ஓபன் செய்து கொள்ளவும்.
  • அங்கே இருக்கும் This Pc ரைட் கிளிக் செய்து மேனேஜ் என்பதை தேர்வு செய்யவும்.
  • இப்போது உங்களுக்கு உங்கள் கணினியில் உள்ள அனைத்து விதமான டிரைவர் மற்றும் அதன் விளக்கங்கள் கிடைக்கும்.
  • இப்போது நீங்கள் கடைசியாக இன்ஸ்டால் செய்யப்பட்ட டிரைவர் அல்லது அனைத்தையும் அப்டேட் செய்யவும்.
  • இந்த டிரைவர் அப்டேட் செய்ய நீங்கள் டிரைவர் மீது ரைட் கிளிக் செய்து அப்டேட் நவ் எனும் பொத்தானை தேர்வுசெய்யவும்.
  • பிறகு சர்ச் பார் டிரைவர் அப்டேட் ஆன்லைன் எனும் பொத்தானை கிளிக் செய்யவும்.

இப்போது உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்ய வேண்டும். மருத்துவகம் ஆன பிறகு உங்கள் கணினியில் அந்தப் பிழை உள்ளதா இல்லையா என்று பரிசோதித்து பார்க்க வேண்டும்.
அந்தப் பிள்ளை இன்னும் நீங்கவில்லை என்றால் அடுத்த தீர்வை பார்க்கவும்.

படிக்க : கணினித் துவங்கவில்லையா? இதை செய்து பாருங்க

டி எல் எல் இன்ஸ்டால் செய்யவும்

உங்களுக்கு வரும் அந்தப் பிழை, எந்த ஒரு டி எல் எல் இல்லை என கூறுகிறதோ அதை நீங்கள் தனியாக டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து அந்தப் பிழையை நீக்க முடியும்.
இதை செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளைப் பின்பற்றவும்.
முதலில் உங்களுக்கு என்ன பிழை வருகிறது என்று பார்த்துக் கொள்ளவும்.
இப்போது அந்தப் பிழையை அல்லது டி எல் எல் கோப்பை இன்டர்நெட்டில் தேடி பார்க்கவும்.
ஏதாவது ஒரு வலைத்தளத்தில் நீங்கள் தேடப்பட்ட அல்லது உங்களுக்கு தேவையான கோப்பு கிடைக்கும்.
அதை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளவும்.
பிறகு அந்தக் கோப்பை காப்பி செய்து கொள்ளவும்.
இப்போது c தரவை ஓபன் செய்து கொள்ளவும்.
அங்கே விண்டோஸ் ( Windows )எனும் போல்டர் ஓபன் செய்து கொள்ளவும்.
பிறகு system32 எனும் போல்டர் ஓபன் செய்து கொள்ளவும்.
இப்போது நீங்கள் காப்பி செய்யப்பட்ட அந்த கோப்பை இங்கே பேஸ்ட் செய்யவும்.
இப்போது நீங்கள் உங்கள் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்க.
மருத்துவம் செய்த பிறகு உங்கள் கணினியில் இந்த பிழை வருகிறதா இல்லையா என்று சோதித்து பார்க்கவும்.
இப்பொழுது உங்களுக்கு இந்த பிழை வந்தால் நீங்கள் அடுத்த தீர்வை பின்பற்றவும்.

ADVERTISEMENT

படிக்க : அழிந்த தரவுகளை மீட்பது எப்படி? கணினியில்,மொபைல் போனில், மற்ற சேமிப்பகங்களில்.

டிஎல்எல் அப்டேட் செய்க

சந்தைகளில் ஒரு சில மென்பொருள்கள் இந்த டி எல் எல் கோப்புகளை அப்டேட் செய்ய கிடைக்கிறது. அவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கி நீங்கள் பயன்படுத்தலாம். அந்த மென்பொருள் உங்கள் கணினியில் எந்த பிழைகள் உள்ளதோ அதை நீக்கிவிடும்.
இந்தப் பிழையை நீக்க இந்த மென்பொருளில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் சரியாக செய்து டி எல் எல் பிழையை நீக்க முடியும்.
அப்டேட் விண்டோஸ்

உங்கள் கணினியில் மறுபடியும் இதே பிரச்சனை வந்தால் உங்கள் கணினியை ஒரு முறை அப்டேட் செய்து பார்க்கவும். உங்கள் கணினியை அப்டேட் செய்ய செட்டிங்ஸ் சென்று கண்ட்ரோல் பேனல் உள்ளே அப்டேட் விண்டோஸ் எனும் பொத்தானை தேர்வு செய்து அப்டேட் செய்யலாம்.

அப்டேட் நடக்கும் பொழுது எந்த ஒரு இடையூறுகளும் இல்லாமல் பார்த்துக் கொள்க.

கணினி அப்டேட் ஆன பிறகு உங்களுக்கு மறுபடியும் இதே பிறை வந்தால் அடுத்த தீர்வை பார்க்கவும்.

வைரஸ் மூலம் பிரச்சனை

உங்கள் கணினியில் வைரஸ் மற்றும் மால்வேர் இருந்தாள் உங்களுக்கு இந்த டி எல் எல் பிரச்சனை வரலாம். எனவே உங்கள் கணினியில் மால்வேர் உள்ளதா இல்லையா என்று சோதித்து பார்க்க.
நீங்கள் ஏதாவது ஒரு ஆண்டி வைரஸ் மென்பொருள் இன்ஸ்டால் செய்து அதன் மூலமாக வைரஸ் அனைத்தையும் கிளீன் செய்ய வேண்டும். வைரஸ் நீக்கிய பிறகு உங்கள் கணினியை ஒரு முறை மறுசுழற்சி செய்து பார்க்க வேண்டும்.
இப்போது உங்களுக்கு அந்த டிரைலரில் பிரச்சனை நீங்கி இருக்கும். பிரச்சனை நீங்கவில்லை என்றால் அடுத்த தீர்வை பார்க்கவும்.

படிக்க : வைரஸ் கிளீன் செய்வது எப்படி? இலவச மென்பொருள் மூலம் வைரஸ்-ஐ அழிப்பது எப்படி?

ரீஸ்டோர் செய்து பார்க்கவும் ( System Restore )

உங்கள் கணினியில் உள்ள ரீஸ்டோர் ஆப்ஷன் மூலமாக கணினியை பழைய நிலைக்கு திரும்ப கொண்டு வர முடியும். இந்த ரீஸ்டோர் எப்படி செய்வது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது அந்த வழியை பின்பற்றுக.

ADVERTISEMENT
  • முதலில் கண்ட்ரோல் பேனல் உள்ளே சென்று கொள்ளவும்.
  • அங்கே சிஸ்டம் ரீஸ்டோர் எனும் தேர்வு இருக்கும் அதை செலக்ட் செய்யவும்.
  • இப்போது ஒரு புதிய சிஸ்டம் ரீஸ்டோர் விண்டோ ஓபன் ஆகும்.
  • அதில் ரீஸ்டோர் எனும் பொத்தானை தேர்வு செய்து நெக்ஸ்ட் எனும் பட்டனை கிளிக் செய்யவும்.
  • அடுத்து வரும் திரையில் இறுதியாக எந்த ஒரு தேதி இருக்கிறதோ அந்த தேதியை அல்லது
  • அந்தத் தேதியில் உருவான பிரதியை தேர்வுசெய்யவும்.
  • பிறகு நெக்ஸ்ட் ( Next ) எனும் பொத்தானை கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்கள் கணினியில் பழைய தரவுகள் அனைத்தும் புதிதாக இன்ஸ்டால் ஆகிவிடும்.
  • அதாவது நீங்கள் தேர்வு செய்யப்பட்ட நாளில் உங்கள் கணினி எப்படி இருந்ததோ அதே போல் திரும்ப கிடைக்கும்.

இப்பொழுது உங்களுக்கு இந்தப் பிழை நீங்கவில்லை என்றால் அடுத்த தீர்வை பார்க்கவும்.

இயங்குதளத்தை மாற்ற வேண்டும்

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வகையான சோதனைகளின் நீங்கள் செய்துவிட்டால் இந்தப் பிழை நீங்கிவிடும். அப்படியும் நீங்கவில்லை என்றால் நீங்கள் கட்டாயம் உங்கள் இயங்குதளத்தை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதை நீங்கள் மறு இன்ஸ்டால் செய்யும் முன் ஒருமுறை உங்கள் தரவுகள் அனைத்தையும் பாதுகாத்து வைத்துக் கொள்ளவும்.
உங்கள் கணினியில் இயங்குதளம் இன்ஸ்டால் செய்யும் முன் உங்கள் கணினிக்கு எந்த ஒரு இயங்கு தளம் சரியாக இருக்கும் மற்றும் வேகமாக இருக்கும் என்று பார்த்து இன்ஸ்டால் செய்யவும்.

ஏனெனில் குறைந்த வேகம் உள்ள கணினியில் பெரிய மென்பொருள்கள் நிறுவினால் அல்லது ஏற்காத இயங்குதளம் நிறுவினால் பல பிரச்சனைகள் ஏற்படும்.

உங்கள் கணினியில் புதிய இயங்குதளம் இன்ஸ்டால் செய்த பிறகு இந்த பிரச்சனை தீர்ந்து விடும்.

படிக்க : கணினியில் இயங்குதளம் இன்ஸ்டால் செய்வது எப்படி?

கேள்விகளுக்கு பதில்

உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அல்லது இந்தப் பிழை நீங்கவில்லை என்றாலும் கருத்துப் பெட்டியில் பதிவிடவும். உங்களுடைய கேள்விக்கு பதில்கள் கிடைக்கும்.

டி எல் எல் பிழையை நீக்க முடியுமா

உங்கள் கணினியில் இப்போதுதான் இந்த பிழை வந்துள்ளது என்றால் இதை முற்றிலுமாக தீர்க்கமுடியும். இந்தப் பிழை பல காலத்துக்கு முன்னால் இருந்தே இருக்கிறது என்றால் நீங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள தீர்வுகள் அனைத்தையும் செய்து பார்த்து பிழையை நீக்க முடியும்.

ADVERTISEMENT

எதன் மூலம் இந்தப் பிழை வருகிறது

இந்தப் பிழை எப்படி வருகிறது மற்றும் எப்படி தீர்ப்பது என்ற விளக்கம் இந்தப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.‌ மேலே உள்ள பதிவை முழுவதுமாக படிக்கவும்.

டி எல் எல் பிழை வைரஸ் மூலம் வருகிறதா

இந்தப் பிழை வைரஸ் மூலம் தான் வந்தது என கூறமுடியாது. இருப்பினும் வைரஸ் ஒரு முக்கிய காரணமாகும்.

இந்த ஒரு பதிவின் மூலம் உங்களுக்கு எப்படி இந்த டி எல் எல் கோப்பு பிழையை சரி செய்வது என்று தெரிந்திருக்கும். இதேபோல வேறு பயனுள்ள தகவல்கள் வேண்டுமென்றால் எங்கள் வலைதளத்தை அடிக்கடி பார்வையிடவும்.
நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *