OXC000005 பிழையை எப்படி சரி செய்வது?
நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கணினியின் வகை விண்டோஸ் 7, விண்டோஸ் 8, விண்டோஸ் 10 மற்றும் வேறு வகைகள் எதுவாக இருந்தாலும் இந்தப் பிழை வரும். இந்தப் பிழையை எதனால் வருகிறது மற்றும் இதை எப்படி சரி செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
நமது விண்டோஸ் கணினியில் பலவேறு வகையான பிழைகள் வந்து கொண்டே இருக்கும். அவை அனைத்தையும் முற்றிலுமாக சரிசெய்ய முடியும். இதுபோன்ற பிழைகள் ஒரு சில காரணங்களால் வருகிறது. அது என்ன காரணங்கள் மற்றும் எப்படி வருகிறது என்று பார்க்கலாம்.
இந்தப் பிழை எப்படி வருகிறது?
இந்த 0XC000005 பிழை ஒரு சில காரணங்களால் வருகிறது. அந்த காரணங்கள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- வைரஸ் மூலமாக வரலாம்
- குறைந்த ரேம் மூலமாக வரலாம்
- சேதமடைந்த ரேம் மூலமாக வரலாம்
- ரெஜிஸ்ட்ரி கோப்பு பிழை மூலமாக வரலாம்
- தவறான வன்பொருள்கள் ( Hardware ) காரணமாக வரலாம்
- விண்டோஸ் தவறாக இன்ஸ்டால் செய்யப்பட்டால் வரலாம்
- மென்பொருள் தவறாக இயக்கப்பட்டால் வரலாம்
- கோப்புகளின் ( Files ) லொகேஷன் மூலமாக வரலாம்
- வேறு காரணங்கள் மூலமாகவும் வரலாம்
வைரஸ் மூலமாக வரலாம்
நீங்கள் உங்கள் கணினியில் ஆன்டிவைரஸ் இல்லாமல் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது இந்த பிழை வந்திருக்கலாம். கணினியை தாக்கும் ஒரு சில வகையான வைரஸ்கள் உங்கள் கணினியில் ஏதாவது ஒரு வழியாக உள்ளே வந்து உங்கள் வன்பொருள் அல்லது மென்பொருளை சேதப்படுத்தி இந்த பிழையை ஏற்படுத்தும்.
இந்த பிழை வந்தபிறகு அந்த வைரஸ் வேறுசில பிழைகளை ஏற்படுத்த முயற்சிக்கும்.
உங்கள் கணினியில் ஆண்டிவைரஸ் இல்லாமல் இயக்குவது மிகவும் பாதுகாப்பு இல்லாத ஒரு செயலாகும்.
படிக்க : இலவசமாக வைரஸ் நீக்குவது எப்படி? ஆன்ட்டி வைரஸ் கணினிக்கு தேவையா?
குறைந்த அளவு ரேம் மெமரி மூலமாக வந்திருக்கலாம்
உங்கள் கணினியில் போதுமான அளவு ரேம் மெமரி இல்லாமல் ஒரு மென்பொருளை இயக்கினால் அந்த மென்பொருள் செயல்பட மெமரி இல்லாமல் இந்த பிழையை ஏற்படுத்தும்.
ஒவ்வொரு மென்பொருள்களும் செயல்பட குறைந்த அளவு மெமரி என்று ஒரு விதிமுறை இருக்கும். அந்த மென்பொருள் சரியாக உங்கள் கணினியில் இயங்க வேண்டும் என்றால் உங்களுக்கு அந்த குறைந்த மெமரி தேவைப்படும். அந்த மெமரி இல்லாமல் உங்கள் கணினியில் நீங்கள் இயக்கினால் உங்கள் கணினியில் இந்த பிழைகள் ஏற்படலாம்.
எனவே ஒரு மென்பொருளை இயக்கம் முன் அதன் குறைந்த அளவு மெமரி என்ன என்று சரிபார்த்து இயக்கவேண்டும்.
படிக்க : ரேம் உங்கள் கணினிக்கு குறைந்த அளவு எவ்வளவு தேவைப்படும்? ரேம் மெமரி மற்றும் அதன் வகைகள் யாவை?
சேதமடைந்த ரேம் மெமரி மூலமாக வரலாம்
உங்கள் கணினியில் இந்தப் பிழை ரேம் மெமரி சேதம் அடைந்து அதன் மூலமாக கூட வந்திருக்கலாம். ரேம் மெமரி முற்றிலும் சேதம் அடையாமல் குறைந்த அளவு சேதமடைந்து நீங்கள் ஒரு சில வேலை செய்யும் பொழுது மட்டுமே இந்தப் பிழை வந்தால் உங்கள் ரேம் மெமரி சேதம் அடைந்திருக்க வாய்ப்புகள் உள்ளது.
நீங்கள் சாதாரணமாக ஒரு சில வேலைகள் செய்யும் பொழுது எந்த பிழையும் வராது. ஆனால் உங்கள் கணினிக்கு மெமரி அதிகமாக தேவைப்படும் பொழுது அல்லது அதிகமாக பயன்படுத்தினால் இந்தப் பிழை ஏற்படும். இதற்கு நீங்கள் உங்கள் ரேம் மெமரியை மாற்ற வேண்டும்.
ரெஜிஸ்ட்ரி கோப்பு பிழை மூலமாக வரலாம்
ரெஜிஸ்ட்ரி கோப்பு என்பது கணினியில் ஒவ்வொரு வேலைகளும் சரியாக செய்ய வேண்டும் என்றால் இதனுள் உள்ள கோப்புகள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். உதாரணமாக இதில் ஏதாவது ஒரு கோப்பு ஒன்று என்பதற்கு பதிலாக பூஜ்ஜியம் என இருந்தால் அது முற்றிலுமாக வேலை செய்யாது.
இதன் மூலமாக நம் கணினியில் பல மென்பொருள் மற்றும் வன்பொருள்களை கட்டுப்படுத்த முடியும். எனவே இந்த அமைப்பு சரியாக இல்லை என்றால் நமக்கு அந்த பிழை ஏற்படும்.
தவறான வன்பொருள்கள் காரணமாக ஏற்படலாம்
உங்கள் கணினியில் தவறான வன்பொருள்கள் காரணமாகக்கூட இந்தப் பிழை ஏற்படலாம். உதாரணமாக உங்கள் கணினியில் பொருந்தாத ஒரு வன்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்தால் அதன் காரணமாக கூட இந்த பிழை ஏற்படலாம். உங்கள் கணினிக்கு எது பொருந்தும் அல்லது பொருந்தாது என ஆலோசனை செய்த பிறகு வன்பொருள் களை இன்ஸ்டால் செய்யவும்.
விண்டோஸ் தவறாக இன்ஸ்டால் செய்யப்பட்டால் பிழை வரலாம்
உங்கள் கணினியில் விண்டோஸ் இயங்குதளம் இன்ஸ்டால் செய்யும்போது ஏதாவது பிழை இருந்தால் அதன் மூலமாகக் கூட இந்தப் பிழை உருவாகி இருக்கலாம். உங்களுடைய கணினியில் விண்டோஸ் இயங்குதளம் இன்ஸ்டால் செய்யும் போது எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் இன்ஸ்டால் செய்ய வேண்டும். அல்லது நீங்கள் விண்டோஸ் இயங்குதளம் மறு இன்ஸ்டால் செய்கிறீர்கள் என்றால் அந்த பழைய டிரைவ் முற்றிலுமாக அழிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் எந்தப் பிழையும் வராது.
மென்பொருள் தவறாக இயக்கப்பட்டால் வரலாம்
உங்கள் கணினியில் உள்ள மென்பொருட்களை தவறாக இயக்கப்படும் போது உங்களுக்கு இந்த பிழை வரலாம். ஒரே மென்பொருளை இரண்டு அல்லது மூன்று முறை துவக்கம் செய்வது அல்லது சரியாக இயங்காமல் அதற்கு அதிக வேலை கொடுத்தால் இந்த பிழை ஏற்படலாம். ஒரு மென்பொருளை அது இயக்காத வேறு கோப்புகளை இயக்க பயன்படுத்தினால் இந்த பிழை வரலாம்.
கோப்புகளின் லொகேஷன் மூலமாக வரலாம்
உங்கள் கணினியில் பயன்படுத்தும் ஒரு சில கோப்புகள் மிகவும் பெரியதாக அல்லது அது இருக்கும் இடம் பெரியதாக இருந்தால் ( அதிக போல்டர் உள்ளே இருந்தால் ) இந்தப் பிழை வரலாம். கோப்புகளை குறுகிய லொகேஷன்ல் இருக்குமாறு பார்த்துக் கொண்டால் இந்த பிழை வராது.
வேறு காரணங்கள் மூலமாக கூட வரலாம்
உங்கள் கணினியில் ஏதாவது ஒரு மென்பொருள் அல்லது வன்பொருள் பாதிக்கப்பட்டிருந்தாலோ, சரியாக செயல்படுத்தப்படவில்லை என்றாலும் இந்த பிழைகள் வரலாம்.
இந்த 0XC000005 பிழை மேலே உள்ள காரணங்கள் ஏதாவது ஒன்றின் மூலமாக உங்கள் கணினிக்குள் வந்திருக்கும். இந்தப் பிழை வந்த பிறகு கணினியில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என பார்க்கலாம்.
இந்த பிழை வந்த பிறகு
ஒருமுறை உங்கள் கணினியின் உள் இந்தப் பிழை வந்துவிட்டால் அது கணினியில் மிகப்பெரிய மாற்றங்களை செய்து விடும். அந்த மாற்றங்கள் மூலமாக கணினியை இயக்க முடியாமல் போய்விடும்.
உதாரணமாக நீங்கள் எதாவது ஒரு மென்பொருளை இயக்க முயன்றால் அது சரியாக இயங்காமல் இந்த பிழை காட்டும்.
இதற்கு நீங்கள் பல வழிகளில் தீர்வுகளைப் பெற முடியும். அதைப் பற்றி கீழே பார்க்கலாம்.
இதை எப்படி சரி செய்வது
இந்தப் பிழையை சரி செய்ய பல வழிகள் உள்ளது. ஆனால் நீங்கள் ஒவ்வொன்றாக முயற்சி செய்து பார்க்க வேண்டும். இவை அனைத்தையும் முயற்சி செய்து உங்கள் கணினி பிழை நீக்க முடியும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் ஒவ்வொன்றையும் பின்பற்றவும். இந்த வழிமுறைகள் மூலமாக உங்கள் பிழை தீர்ந்துவிடும்.
- கணினியை மறுதொடக்கம் செய்க
- ஆன்ட்டி வைரஸ் தீர்வு
- மென்பொருள் தீர்வு
- ரெஜிஸ்ட்ரி தீர்வு
- இயங்குதளம் தீர்வு
- ரேம் தீர்வு
- ஹார்ட் டிஸ்க் தீர்வு
- கிராபிக்ஸ் கார்டு தீர்வு
- மதர்போர்டு தீர்வு
கணினியை மறுதொடக்கம் செய்க
முதலில் இந்தப் பிழை உங்கள் கணினியில் வந்து விட்டால் உங்கள் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து பார்க்க வேண்டும். மறு தொடக்கம் செய்த பிறகு இந்தப் பிழை வரவில்லை எனில் நன்று. இல்லையெனில் அடுத்த தீர்வை செயல் படுத்தவும்.
ஆன்ட்டி வைரஸ் தீர்வு
உங்கள் கணினியில் நீங்கள் இலவசமாக கிடைக்கும் ஆன்டி வைரஸ் இன்ஸ்டால் செய்திருந்தால் அதை உடனே நீக்கி விட்டு புதிய ஆண்டிவைரஸ் இன்ஸ்டால் செய்யவும்.
புதிய ஆண்டிவைரஸ் இன்ஸ்டால் செய்த பிறகு உங்கள் கணினியை ஒரு முறை முழு ஸ்கேன் செய்யவும்.
முழு ஸ்கேன் செய்த பிறகு உங்கள் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து இயக்கிப் பார்க்கவும்.
இப்போது அந்த பிழை வரவில்லை என்றால் நன்று. இல்லையெனில் அடுத்த தீர்வை செய்து பார்க்கவும்.
மென்பொருள் தீர்வு
உங்கள் கணினியில் நீங்கள் புதிதாக இன்ஸ்டால் செய்த மென்பொருளை நீக்கிவிட்டு ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து பார்க்க.
அல்லது எந்த மென்பொருள் துவங்கும் பொழுது இந்த பிழை வருகிறதோ, அந்த மென்பொருளை நீக்கிவிட்டு ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து பார்க்கவும்.
இப்போது அந்தப் பிறை வரவில்லை எனில் நன்று. இப்பொழுதும் அதே பிழை வந்தால் அடுத்த தீர்வை பார்க்கவும்.
ரெஜிஸ்ட்ரி தீர்வு
உங்கள் கணினியில் ரெஜிஸ்ட்ரி மூலமாக இந்தப் பிழை ஏற்பட்டு இருக்கலாம். எனவே கடைகளில் கிடைக்கும் இலவசமான ரெஜிஸ்ட்ரி புதுப்பிக்கும் மென்பொருள் வாங்கி இந்த பிழையை தீர்த்துக் கொள்ளலாம்.
இப்பொழுதும் அதே பிழை வந்தால் அடுத்த தீர்வை செய்து பார்க்கவும்.
இயங்குதளம் தீர்வு
உங்கள் கணினியில் இப்பொழுதும் அதே பிழை வந்து கொண்டு இருந்தால், உங்கள் கணினியில் இயங்குதளம் மறுமுறை இன்ஸ்டால் செய்து பார்க்கவும். உங்கள் கணினியில் இயங்குதளம் இன்ஸ்டால் செய்யும் முன் தரவுகள் அனைத்தையும் பாதுகாத்து வைத்துக் கொள்ளவும்.
இயங்குதளம் மறுமுறை இன்ஸ்டால் செய்த பிறகு இந்தப் பிழை அதிகபட்சம் வராது. அப்பொழுதும் இதே பிழை வந்து கொண்டு இருந்தால் அடுத்த தீர்வை செய்து பார்க்கவும்.
ரேம் தீர்வு
இயங்குதளம் மறுமுறை இன்ஸ்டால் செய்த பிறகும் அதை பிழை வந்து கொண்டு இருந்தால் உங்கள் கணினியில் மென்பொருள் மூலமாக இந்தப் பிழை வரவில்லை. இந்தப் பிழை உங்கள் வன்பொருள் மூலமாக வருகிறது.
உங்கள் கணினியில் உள்ள ரேம் அப்கிரேட் செய்து பார்க்கவும். அப்கிரேட் செய்த பிறகு இதே பிழை வந்தால், புதிதாக அப்டேட் செய்த ரேம் மட்டும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி பார்க்கவும்.
ஏனெனில் உங்கள் பழைய ரேம் மட்டும் பிரச்சனையாக இருந்தால் அது தெரிந்துவிடும். எனவே இந்த இரண்டு ரேம் தீர்வுகளையும் செய்து பார்க்கவும்.
ரேம் மாற்றிய பிறகும் இதே பிழை வந்தால் அடுத்த தீர்வை பார்க்கவும்.
ஹார்ட் டிஸ்க் தீர்வு
உங்கள் கணினியில் இந்தப் பிழை ஹார்ட் டிஸ்க் மூலமாக கூட வந்திருக்கலாம். எனவே உங்கள் கணினியின் நினைவகத்தை மாற்றி வேறு ஒரு நினைவகம் இன்ஸ்டால் செய்து இதை வருகிறதா என்று பார்ப்போம். இப்போது அந்தப் பிழை வரவில்லை என்றால் உங்கள் கணினியில் ஹார்ட் டிஸ்க் கோளாறு உள்ளது. மறுபடியும் அதே பிழை வந்தால் அடுத்த தீர்வை பார்க்கவும்.
படிக்க : அழிந்த தரவுகளை மீட்பது எப்படி? கணினியில்,மொபைல் போனில், மற்ற சேமிப்பகங்களில்.
கிராபிக்ஸ் கார்டு தீர்வு
உங்கள் கணினியில் கிராபிக்ஸ் கார்டு இன்ஸ்டால் செய்து இருந்தால் அந்த கார்டு மூலமாக கூட இந்தப் பிழை வந்திருக்கலாம். எனவே உங்கள் கணினியில் உள்ள கிராபிக்ஸ் கார்டு நீக்கிவிட்டு ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து பார்க்கவும்.
உங்கள் கணினியில் அல்லது மடிக்கணினி ல் கிராபிக்ஸ் கார்டு இல்லை எனில் நீங்கள் அடுத்த தீர்வை முயற்சி செய்து பார்க்கவும்.
இப்பொழுது அந்தப் பிழை வரவில்லை என்றால் உங்கள் கணினியில் கிராபிக்ஸ் கார்டு தொந்தரவு உள்ளது.
மாறாக அதே பிழை திரும்பவும் வந்தால் அடுத்த தீர்வை பார்க்கவும்.
மதர்போர்டு தீர்வு
உங்கள் கணினியில் அடுத்து உள்ள வன்பொருள் மதர்போர்டு. இந்த மதர் போர்டில் உள்ள ஒரு சில எலக்ட்ரானிக் பொருட்கள் மூலமாக கூட இந்தப் பிழை வந்திருக்கலாம்.
எனவே மதர்போர்டு கோளாறாக இருந்தால் அதை சர்வீஸ் செய்து உபயோகப்படுத்தவும்.
படிக்க : கணினி மதர்போர்டு வாங்குவது எப்படி? தேவையான மதர்போர்டு தேர்வு செய்வது எப்படி?
மதர்போர்டு சர்வீஸ் செய்த பிறகு உங்களுக்கு அது பிழை வந்து கொண்டு இருந்தால் உங்களுக்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். சர்வீஸ் சரியாக செய்யப்படாமல் இருக்கலாம் அல்லது நீங்கள் தீர்வுகளை சரியாக பின்பற்றாமல் இருக்கலாம். நீங்கள் திரும்பவும் மேலே உள்ள தீர்வுகளை முயற்சி செய்து பார்க்கவும்.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள கருத்துப் பெட்டியில் தெரிவிக்கவும்.
நன்றி.
Hi bro virus உள்ள hardisk இருந்து files, videos copy பன்னி வேற hardisk paste பன்னா அதே problem இந்த hardisk வருமா
Yes bro , Virus Copy aaidu, use any PAID antivirus software.
We install Original antivirus only @ ₹500
if you interested sahre your phone number.