full-pc-build-under-20000-in-tamil-new-atozpc-in

PC Build Under ₹20,000

ADVERTISEMENT

full-pc-build-under-20000-in-tamil-new-atozpc-in

20 ஆயிரம் ரூபாய் கணினி

அனைவருக்கும் ஒரு புதிய கணினி வாங்க வேண்டும் அல்லது உருவாக்க வேண்டும் என்று ஆர்வம் இருக்கும். ஆனால் அனைவராலும் மிக விலை உயர்ந்த கணினியை வாங்க இயலாது. எனவே இப்பதிவில் நாம் இருபது ஆயிரம் (₹20,000) ரூபாய்க்குள் ஒரு கணினியை உருவாக்குவது எப்படி என்று பார்க்கலாம்.

இந்த 20 ஆயிரம் ரூபாய் கணினியின் மூலமாக நீங்கள் விளையாட்டுக்கள் மற்றும் ஒரு சில மென்பொருட்களை இயக்க முடியும்.

யாருக்கு பயன்படும்

இந்த கணினி யார் யாருக்கு பயன்படும் என்று பார்க்கலாம்.

  • மாணவர்களின் தேவைக்காக பயன்படுத்தலாம்.
  • வீட்டு உபயோகத்துக்காக பயன்படுத்தலாம்.
  • சிறிய அலுவலக வேலைக்காக பயன்படுத்தலாம்.
  • அதுமட்டுமல்லாமல் இதில் ஒரு சில சிறிய ரக விளையாட்டுகளையும் விளையாட முடியும்.

இந்த குறைந்த விலையில் கணினியை உருவாக்க வேண்டுமென்றால் ஒரு சிறந்த மற்றும் விலை குறைந்த ப்ராசசர் ஏ எம் டி நிறுவனத்தின் Ryzen 3 1200 ப்ராசஸர் வாங்கி உபயோகப்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்

சரி முதலில் இந்த கணினிக்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

ADVERTISEMENT

பிராசஸர் : ஏஎம்டி Ryzen 3 1200
கிராபிக்ஸ் கார்டு : ப்ராசசர் உடன் வரும்.
மதர்போர்ட் : ஏசூஸ் ராக் A320M
ரேம் : Crucial 4 ஜிபி
ஹார்ட் டிஸ்க் : Seagate 500 ஜிபி
கேபினட் : Mercury brand ATX with PSU
பவர் சப்ளை : கேபினட் உடன் வரும்
மானிட்டர் : Mercury 19 இன்ச்
கீ போர்டு & மவுஸ் : KB & MS Set

சரி இந்த பொருள்களின் விலை மற்றும் அதில் உள்ள வசதிகளைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்.

படிக்க : கணினித் துவங்கவில்லையா? இதை செய்து பாருங்க

மானிட்டர் : Mercury 19 இன்ச்

இது ஒரு எல்சிடி மானிட்டர், இது நமது விலைக்கு உள்ளடங்கும். இந்த மானிட்டரில் ஒளியின் அளவு மற்றும் கலர் போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும். இதில் விடியோ சோர்ஸ் ஒன்று மட்டுமே உள்ளது. ஆனால் அதுவே நமக்குப் போதுமானதாகும். இதிலுள்ள வீடியோ இன்புட் சோர்ஸ் விஜிஏ ( VGA ) ஆகும்.
இதை நீங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் வாங்க முடியும்.

இந்த Mercury 19 இன்ச் மானிட்டர் விலை ₹3000 ரூபாய் இருக்கும்.

கீ போர்டு & மவுஸ் : KB & MS Set

இந்த கீபோர்டு மற்றும் மவுஸ் இணைப்பு நமக்கு போதுமானதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இதன் விலையும் மிகவும் குறைவு. எனவே நீங்கள் குறைந்த விலையில் கீபோர்டு மற்றும் மவுஸ் இணைப்பாக வாங்க முடியும்.
இந்த கீபோர்டு மற்றும் மவுஸ் இணைப்பு ஒரு பெயர் தெரியாத நிறுவனத்தின் படைப்பாகும். இருப்பினும் இது போதுமான அளவு நன்றாகவே வேலை செய்கிறது.

இந்த கீ போர்டு & மவுஸ் : KB & MS செட் விலை ₹400 ரூபாய் இருக்கும்.

ADVERTISEMENT

பிராசஸர் : ஏஎம்டி 3 Ryzen 1200

குறைந்த விலைக்கு ஒரு நல்ல பிராசஸர் வாங்க வேண்டுமென்றால் நீங்கள் இந்த பிராசஸர் வாங்கலாம். இதன் விலையும் குறைவு அதுமட்டுமல்லாமல் இதன் உள்ளே போதுமான அளவு கிராபிக்ஸ் மெமரி உள்ளது. எனவே இந்த விலைக்கு கணினியை உருவாக்க விரும்புவோர் இதை வாங்கலாம்.
இந்த பிராசஸரில் நான்கு கோர் மற்றும் 10 மெகா பைக் கேட்ச் ( cache memory ) மெமரியும் உள்ளது. இதன் வேகம் 3.4 GHz முதல் 3.45 GHz வரை இருக்கும். இது ஒரு வி ஆர் உள்ளடக்கிய பிராசஸர் ஆகும். இதன் சிஸ்டம் மெமரி வேகம் 2667 MHz ஆகும்.

இந்த பிரவுசர் சார் நீங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் வாங்க முடியும். இந்த பிராசசர் உடன் ஒரு கூலிங் ஃபேன் இணைப்பாக வரும்.
இந்த ஏஎம்டி 3 Ryzen 1200 பிராசஸர் விலை ₹6000 ரூபாய் இருக்கும்.

கிராபிக்ஸ் கார்டு : பயன்படுத்தப் போவதில்லை.
இந்த 20,000 பட்ஜெட் கணினிக்கு கிராபிக்ஸ் கார்டு பயன்படுத்தினால் விலை சற்று அதிகமாக இருக்கும். எனவே இந்த கணினிக்கு கிராபிக்ஸ் கார்டு பயன்படுத்த போவதில்லை.
இருப்பினும் பிராசசர் உடன் போதுமான அளவு கிராபிக்ஸ் மெமரி வருகிறது.

மதர்போர்ட் : ஏசூஸ் ராக் A320M

இந்த கணினி உருவாக்க ஏசூஸ் ராக் எ320 என்ற மதர்போர்டு பயன்படுத்த போகிறோம். ஏனெனில் இந்த மதர்போர்டில் போதுமான அளவு வசதிகள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இதன் விலையும் குறைவு. எனவே இதை இந்த கணினி உருவாக பயன்படுத்த போகிறோம்.
இந்த மதர்போர்டில் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம். இது ஒரு ஏஎம்டி ப்ராசஸ் ஏற்றுக்கொள்ளும் மதர்போர்டு ஆகும். இதில் இரண்டு டிடிஆர் 4 ரேம் போடமுடியும். ஒரு PCI express X 16 மற்றும் 1 PCIe 2.0 X 1 கார்டுகள் போட முடியும். இதில் 7.1 சேனல் high-definition ஆடியோ உள்ளது. ஈதர்நெட் போர்ட் மற்றும் ஆறு யுஎஸ்பி 3.0 பகுதிகள் உள்ளது.

நமக்கு தேவையான அனைத்து பாகங்களும் இந்த மதர்போர்டில் கிடைக்கும். குறைந்த விலையில் நல்ல மதர்போர்டு வாங்க வேண்டும் என்றால் இதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.

இந்த மதர்போர்ட் ஏசூஸ் ராக் A320M விலை ₹4300 ரூபாய் இருக்கும்.

ADVERTISEMENT

படிக்க : ரேம் பற்றி முழு விளக்கம்? வகைகள்? எது சிறந்தது? இன்னும் பல…

ரேம் : Crucial 4 ஜிபி

நாம் இந்த கணினி உருவாக்க 4 ஜிபி அளவுள்ள ரேம் போடப் போகிறோம். 2ஜிபி போட்டால் அது வேகம் சற்று குறைவாக இருக்கும். எனவே 4 ஜிபி அளவுள்ள ஒரே ஒரு ரேம் மட்டும் போட போகிறோம். உங்களுக்கு தேவை என்றால் எதிர்காலத்தில் நீங்கள் 8 ஜிபி அளவுள்ள ரேம் ஆக மாற்றிக்கொள்ளலாம்.
இந்த ஒரு பட்ஜெட் கணினி உருவாக்கத்திற்கு 4 ஜிபி அளவுள்ள ரேம் போதும். இந்த ரேம் ஒரு டிடிஆர் 4 பதிப்பு ஆகும்.
இந்த Crucial 4 ஜிபி ரேம் விலை ₹3200 ரூபாய் இருக்கும்.

ஹார்ட் டிஸ்க் : Seagate 500 ஜிபி

நாம் இந்த கணினி உருவாக்க 500 ஜிபி அளவுள்ள சேமிப்பக ஹார்ட் டிஸ்க் மட்டுமே பயன்படுத்த போகிறோம். ஒரு டிபி அளவுள்ள சேமிப்பக ஹார்டிஸ்க் வாங்கினால் ஒரு ஆயிரம் ரூபாயை விட அதிகமாக இருக்கும். உங்களுக்கு தேவை என்றால் அதை வாங்கிக்கொள்ளலாம் இல்லையெனில் நீங்கள் இந்த 500 ஜிபி அளவுள்ள ஹார்ட் வாங்கிக் கொள்ளலாம்.
இந்த ஹார்ட் டிஸ்கில் 32 எம் பி கேஷ் ( Cache ) மெமரி இருக்கும். இது 3.5 இன்ச் அளவுள்ள ஒரு ஹார்ட் டிஸ்க் ஆகும். இந்த ஹார்ட் டிஸ்க் ஒரு நொடிக்கு 6 ஜிபி வேகத்தில் தரவுகளை பரிமாற்றம் செய்யும் திறன் உடையதாகும்.

இந்த ஹார்ட் டிஸ்க் Seagate 500 ஜிபி விலை ₹1500 ரூபாய் இருக்கும்.

படிக்க : SSD vs HDD, கணினி சேமிப்பாக வகைகள் மற்றும் அதன் விளக்கம்

SSD சேமிப்பகம் : இல்லை

இந்த கணினி உருவாக்கத்திற்கு எஸ் எஸ் டி சேமிப்பகம் பயன்படுத்தப் போவதில்லை. ஏனெனில் அந்த எஸ் எஸ் டி யின் விலை மிகவும் அதிகமாக இருக்கும். எனவே நாம் ஹார்ட் டிஸ்க் மட்டுமே பயன்படுத்த போகிறோம்.
உங்களுக்கு விருப்பமிருந்தால் எஸ் எஸ் டி வாங்கி கொள்ளலாம்.

கேபினட் : Mercury brand ATX with PSU

இந்த கணினி உருவாக்கத்திற்கு கேபினட் மெர்குரி தயாரிப்பிலிருந்து பயன்படுத்தப் போகிறோம். இது விலை குறைவாகவும் மற்றும் எந்த ஒரு வேலைப்பாடும் இல்லாமல் வருகிறது. இந்த ஒரு கணினி உருவாக்கத்திற்கு இதுவே போதுமானதாகும். அதுமட்டுமில்லாமல் இந்த கேபினட் பவர் சப்லி சாதனத்துடன் வருகிறது. எனவே நாம் தனியாக பவர் சப்ளை வாங்க வேண்டியது இல்லை.
இந்த கேபினட்டில் விலை ₹1700 ரூபாய் இருக்கும்.

பவர் சப்ளை : கேபினட் உடன் வரும்

இந்த ஒரு கணினி உருவாக்கத்திற்கு தனியாக பவர் சப்ளை வாங்கப் போவதில்லை. ஏனெனில் நாம் வாங்கும் கேபினட் உடனே இந்த பவர் சப்ளை சாதனமும் வருகிறது. எனவே நமக்கும் விலையும் குறையும்.
இந்த பவர் சப்ளை செய்யும் கருவி 450 வாட்ஸ் திறன் உடையதாகும். அதுமட்டுமில்லாமல் இதற்கு ஒரு வருடத்திற்கு வாரண்டி உள்ளது. எனவே இடையில் நீங்கள் எந்த கோளாறு ஏற்பட்டாலும் மாற்றிக் கொள்ளலாம்.
இதை தனியாக வாங்க வேண்டும் என்றால் பவர் சப்ளை செய்யும் சாதனம் ₹500 ரூபாய் இருக்கும்.

ADVERTISEMENT

இப்போது 20 ஆயிரம் ரூபாய்க்குள் கணினி உருவாக்க தேவையான அனைத்துவிதமான கணினி சாதனங்களையும் பார்த்தோம். இதன் மொத்த விலை எவ்வளவு ஆகிறது என்று கீழே பார்க்கலாம்.

பிராசஸர் ஏஎம்டி Ryzen 3 1200 : ₹6000
கிராபிக்ஸ் கார்டு : ₹0
மதர்போர்ட் ஏசூஸ் ராக் A320M : ₹4300
ரேம் Crucial 4 ஜிபி : ₹3200
ஹார்ட் டிஸ்க் Seagate 500 ஜிபி : ₹1500
எஸ் எஸ் டி : ₹0
கேபினட் Mercury : ₹1700
பவர் சப்ளை : ₹0
மானிட்டர் Mercury 19 இன்ச் : ₹3000
கீ போர்டு & மவுஸ் : ₹400

மொத்த விலை : ₹20,100/- ( தோராயமாக 20 ஆயிரம் )

குறிப்பு : இதன் விலை எப்போது வேண்டுமானாலும் மாறும், எனவே நீங்கள் ஆன்லைனில் ஒரு முறை சோதித்து பாருங்கள். ஒரு சில பொருள்கள் ஆப்லைன் கடைகளில் விலை அதிகமாக கிடைக்கும், அதுவே ஆன்லைன் கடைகளில் விலை மிகவும் குறைவாக கிடைக்கும்.

கேள்விகளுக்கு பதில்

இந்தப் பதிவில் உங்களுக்கு எந்த ஒரு சந்தேகம் இருந்தாலும் கருத்து பெட்டியில் கருத்து இடவும். உங்கள் கேள்விகளுக்கு இங்கே பதில் அளிக்கப்படும்.

இன்டெல் கணினி 20 ஆயிரத்தில் முடியுமா?

20 ஆயிரம் ரூபாயில் இன்டெல் கணினி உங்களால் செய்ய முடியும். ஆனால் அதில் ப்ராசஸர் பெண்டியம் மட்டும் குறைந்த விலையில் கிடைக்கும். பெண்டியம் ப்ராசசர் உடன் கணினி செய்தால் அது வேகம் சற்று குறைவாகத்தான் இருக்கும்.

இன்டெல் மற்றும் எம்டி எது சிறந்தது?

இன்டெல் மற்றும் ஏ எம் டி ப்ராசசர் இரண்டும் சிறந்தது தான். ஆனால் நீங்கள் எந்த உபயோகத்திற்கு எந்த கணினியை பயன்படுத்துகிறீர்கள் என்பதன் மூலமாகவே அதை கூறமுடியும்.
ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் ஒவ்வொரு கணினி உள்ளது. எனவே நீங்கள் உங்கள் தேவைக்கு ஏற்ப சரியான கணினியை உருவாக்க வேண்டும்.

ADVERTISEMENT

20000 விட மலிவான கணினி

20 ஆயிரம் ரூபாயே குறைந்தது தான். இதைவிட மலிவான விலையில் கூட கணினியை உருவாக்க முடியும். அதற்கு நீங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள வன் பொருள்களுக்கு ( Hardware ) வேறு ஏதாவது ஒரு குறைந்த விலையில் உள்ள வன் பொருள்களை வாங்கினால் விலை குறையும். ஆனால் அதனை நீங்கள் நீண்ட காலம் பயன்படுத்த இயலாது.

சிறந்த கணினியை உருவாக்க

ஒரு நல்ல கணினியை உருவாக்க நீங்கள் குறைந்தது முப்பது ஆயிரம் ரூபாயாவது செலவு செய்ய வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு ஓரளவு வேகம் மற்றும் திறன் கிடைக்கும்.

கணினி வேகத்தை அதிகப்படுத்துவது எப்படி

கணினியின் வேகத்தை அதிகப்படுத்த பல வழிகள் உள்ளது. இதைப் பற்றி இன்னொரு பதிவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். அதை நீங்கள் படித்து பயன்பெறுக.

படிக்க : கணினியின் வேகத்தை அதிகப்படுத்துவது எப்படி?

ஆன்ட்டி வைரஸ் தேவையா?

நீங்கள் உங்கள் கணினியை வெளிப்புற தொடர்பு இல்லாமல் உபயோகித்து வந்தால் உங்களுக்கு ஆண்டிவைரஸ் தேவைப்படாது. நீங்கள் இன்டர்நெட், யுஎஸ்பி அல்லது வேறு ஏதாவது உள்ளீடு மற்றும் வெளியீடு மூலம் தரவுகளை பரிமாற்றம் செய்தால் நீங்கள் கட்டாயம் ஆண்டிவைரஸ் போட வேண்டும். இல்லையெனில் உங்கள் கணினியில் வைரஸ் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

படிக்க : இலவசமாக கிடைக்கும் ஆண்டிவைரஸ் மென்பொருள்கள்.

மடிக்கணினி மலிவாக கிடைக்குமா?

பல வருடங்களுக்கு முன்னால் வந்த மடிக்கணினிகள் குறைந்த விலையில் கிடைக்கும். ஆனால் அவை அனைத்தும் இன்றைய கால மென்பொருள் மற்றும் வேகத்துக்கு இணையாகாது. அதை வாங்கினாலும் உபயோகப்படுத்த மிகவும் சிரமமாக இருக்கும்.

பழைய மடிக்கணினியை வாங்கினால் கூட நீங்கள் ஓரளவு வேகத்துடன் பயன்படுத்த முடியும். இந்தப் பழைய மடிக்கணினியை எப்படி பார்த்து வாங்குவது என்று இன்னொரு பதிவு உள்ளது அதைப் படித்து பயன் பெறுங்கள்.

ADVERTISEMENT

படிக்க : பழைய மடிக்கணினியை பார்த்து வாங்குவது எப்படி?

தெரியாமல் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்பது எப்படி

கணினியில் தெரியாமல் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்க பல வழிகள் உள்ளது அவற்றை பற்றி இன்னொரு பதிவில் தெளிவாக குறிப்பிட்டு உள்ளேன் அதை நீங்கள் படித்து பயன்பெறுங்கள்.

படிக்க : அழிந்த தரவுகளை மீட்பது எப்படி?

இந்த பதிவின் மூலம் வெறும் 20 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு முழு கணினியை உருவாக்குவது எப்படி என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். நீங்களும் இதுபோன்ற விலை குறைவான கணினியை உருவாக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் உறவுகளுடன் பகிருங்கள்.

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *