intel-processor-generations-explained-in-tamil-atozpc-in

Intel Processor Explained

ADVERTISEMENT

intel-processor-generations-explained-in-tamil-atozpc-in

Table of Contents

இன்டெல் ப்ராசசர் தலை முறைகள்

இந்தப் பதிவில் இன்டெல் ப்ராசசர் வகைகள் மற்றும் அதன் தலை முறைகள் பற்றி பார்க்கலாம்.
ஏதேனும் ஒரு கணினி சார்ந்த கடைகளுக்கோ அல்லது கணினி பழுது பார்க்கும் வேலையாட்களிடம் இன்டல் சிபியு வின் வகைகள் மற்றும் தலைமுறைகளை பற்றி கேட்டால் முதல் தலைமுறையை விட இரண்டாம் தலைமுறை அதிக வேகத்துடன் இருக்கும் என்று மட்டுமே கூறுவார்கள். ஆனால் அதன் உண்மையான வகைகள் மற்றும் தலைமுறைகளை பற்றி இந்த பதிவில் தெளிவாக குறிப்பிட்டு உள்ளேன். எனவே முழு பதிவையும் படிக்கவும்.

இன்டெல் ப்ராசசர் அதன் கோர் தொழில்நுட்பத்தை கொண்டு வகைப்படுத்தப்படுகிறது. இந்த கோர் தொழில் நுட்பமானது 2 முதல் 8 வரை இருக்கும். இதன் மூலமாகவே இதன் வகைகளை பிரிக்க முடியும். இந்த இன்டல் சிபியு வின் வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இன்டல் சிபியு வின் வகைகள்

  • பெண்டியம் 1,2,3,4 ( Pentium 1,2,3,4 )
  • செல்லிரான் ( Celeron )
  • பெண்டியம் எம் மற்றும் செல்லிரான் எம்
  • பெண்டியம் இரண்டு கோர் ( Pentium Dual Core )
  • கோர் சோலோ ( Core solo )
  • கோர்  டியோ ( Core trio )
  • கோர் 2 டியோ ( Core 2 Duo )
  • கோர் 2 குவாடு ( Core 2 Quad )
  • கோர் ஐ3, ஐ5, ஐ7, ஐ9 ( Core i3, i5, i7 and i9 )

மேலே கொடுக்கப்பட்டுள்ள இன்டெலின் வகைகளாகும். இது ஒவ்வொன்றிலும் சில தலைமுறைகள் உள்ளது. அந்த தலைமுறைகள் ஒவ்வொன்றும் வேறுபட்டது. இதன் தொழில் நுட்பங்களும் மாறுபட்டது. இன்டல் இதுவரை 10 தலைமுறைகளை தயாரித்து உள்ளது. அந்தப் பத்து தலை முறைகளையும் பற்றி தெளிவாக கீழே பார்க்கலாம்.

பத்து தலைமுறைகள்

பத்து தலைமுறைகள் மற்றும் அதன் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
  1. முதல் தலைமுறை : நெகீலம் ( Nehalem )
  2. இரண்டாம் தலைமுறை : சேன்டி பிரிச் ( Sandy Bridge )
  3. மூன்றாம் தலைமுறை : ஐவி பிரிச் ( Ivy Bridge )
  4. நான்காம் தலைமுறை : ஆஸ்வெல் ( Haswell  )
  5. ஐந்தாம் தலைமுறை : போஃட்வெல் ( Broadwell )
  6. ஆறாம் தலைமுறை : ஸ்கை லீக் ( Skylake )
  7. ஏழாம் தலைமுறை : கபி லீக் ( Kaby Lake )
  8. எட்டாம் தலைமுறை : கபி லீக் ஆர் ( Kaby Lake R )
  9. ஒன்பதாம் தலைமுறை : காஃபி லீக் ( Coffee Lake )
  10. பத்தாம் தலைமுறை : ஐஸ் லீக் ( Ice Lake ) (இதுவரை)

வேலை கொடுக்கப்பட்டுள்ள தலைமுறைகளை பற்றி தெளிவாக பார்க்கலாம். இந்தப் பத்து தலை முறைகளிலும் பொதுவாக இருக்கக்கூடிய வேறுபாடு சிபியு வின் வேகம் மற்றும் அது பயன்படுத்தக்கூடிய மின்சாரத்தின் அளவு. இப்பொழுது தெளிவாக பார்க்கலாம்.

முதல் தலைமுறை : நெகீலம்

இந்த முதல் தலைமுறை சிபியு 2010இல் வெளியிடப்பட்டது. இதில் அன்றைக்கு போதுமான பைப்லைன் கிளாக் ஸ்பீட் மற்றும் இன்ஸ்பெக்சன் சரியாக இருந்தது.
இது ஒரு 45 நேனோ மீட்டர் ப்ராசசர் ஆகும். இதன் மூலமாக ஐ3 சிபிஐ செய்ய முடிந்தது.
இதில் 64 கேபி முதல் 12 எம்பி வரை கேட்ச் மெமரி பயன்பட்டது. இது மூன்றாம் தலைமுறை ரேம் இருந்தால் மட்டுமே இயங்கும்.  இதில் 2 ரோம் மட்டுமே உபயோகிக்க முடியும்.

இரண்டாம் தலைமுறை : சேன்டி பிரிச்

இந்த இரண்டாம் தலைமுறை ப்ராசசர் 2011இல் வெளியிடப்பட்டது. இது ஒரு 32 நேனோ மீட்டர் ப்ராசசர் ஆகும். இதன் காட்சி மெமரி அளவு 64 கேபி முதல் 15 எம்பி வரை இருக்கும். இதில் இரண்டு சேனல் ராம் பயன்படுத்த முடியும். இந்தப் சிபியூ வை எல்ஜி 1155 பாக்கெட்களில் உபயோகிக்க முடியும்.

மூன்றாம் தலைமுறை : ஐவி பிரிச்

இந்த மூன்றாம் தலைமுறை பிராசஸர் 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த சிபியு 22 நேனோ மீட்டர் சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது கடந்த தலைமுறைகளை விட 50% மின்சாரத்தை சிக்கனப்படுத்த. அதுமட்டுமில்லாமல் 25 முதல் 68% ஏஜ் வரை இதன் வேகம் கூட்டப்பட்டுள்ளது. இந்த பிராசசர் எல் ஜி ஏ 1155 பொருத்தத்தில் பொருத்தவேண்டும். இந்த பிராசஸர் மூன்றாம் தலைமுறை ராம்ல் பயன்படுத்தப்படுகிறது.

படிக்க : 20 ஆயிரம் ரூபாய் கணினி , யாருக்கு பயன்படும்.

நான்காம் தலைமுறை : ஆஸ்வெல்

இந்த நான்காம் தலைமுறை ப்ராசசர் 2013இல் வெளியிடப்பட்டது. இதில் 22 நேனோ மீட்டர் ப்ராசசர் பயன்படுத்தப்படுகிறது. இது மூன்றிலிருந்து 8 சதவீதம் வேகம் அதிகமாக இருக்கும். மற்றும் இது எல் ஜி ஏ 1150 பொருத்தத்தில் பொருந்தும். இந்த நான்காம் தலைமுறை சிபியு ல் நான்காம் தலைமுறை ராம் பயன்படுத்தப்படுகிறது.

ஐந்தாம் தலைமுறை : போஃட்வெல்

இந்த ஐந்தாம் தலைமுறை பிராசசர் 2015 இல் இது ஒரு 14 நேனோ மீட்டர் சிபில் பயன்படுகிறது. இதன் அளவு மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. எனவே இதை மடிக்கணினியில் அதிகமாக பயன்படுத்துவார்கள். இது 37% வேகத்துடன் இயங்கும். இது 1150 பொருத்தத்தில் பொருந்தும். இந்த பிராசசர் இல் மூன்றாம் தலைமுறை ராம் பயன்படுத்தப்படுகிறது.

ADVERTISEMENT

ஆறாம் தலைமுறை : ஸ்கை லீக்

இந்த ஆறாம் தலைமுறை சிபியும் 2015 இல் வெளிவந்தது தான். இது ஐந்தாம் தலைமுறை சிபியு போலவே இருக்கும். அதன் அனைத்து குணங்களையும் இது கொண்டிருக்கும். எனவே இது தனிப்பட்ட எந்த ஒரு வேறுபாடுகளும் இல்லை. ஆனால் வேகம் மட்டும் சிறிது கூடியிருக்கும்.

படிக்க : கணினியின் வேகத்தை அதிகப்படுத்துவது எப்படி?

ஏழாம் தலைமுறை : கபி லீக்

இந்த ஏழாம் தலைமுறை சிபியு 2016 இல் வெளியிடப்பட்டது. இந்த ஏழாம் தலைமுறை சிபியு 14 நேனோ மீட்டர் அளவைக் கொண்டுள்ளது. இதன் ஆர்க்கிடெக்சர் மாற்றப்பட்டுள்ளது. எனவே இதன் வேகம் அதிகமாகவும் காணப்படும். இது எல் ஜி ஏ 1151 சாக்கெட் பொருந்தும். இந்த சிபியூ வை மூன்றாம் தலைமுறை மற்றும் நான்காம் தலைமுறை ராம் கொண்டு இயக்கலாம்.

எட்டாம் தலைமுறை : கபி லீக் ஆர்

இந்த எட்டாம் தலைமுறை சிபியும் 2017 இல் வெளியிடப்பட்டது. இதன் மூலமாக 3டி அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும். இந்த சிபிக்கு நான்காம் தலைமுறை ராம் பயன்படுத்தப்படுகிறது.

ஒன்பதாம் தலைமுறை : காஃபி லீக்

இந்த ஒன்பதாம் தலைமுறை சிபியு 2017 இல் வெளியிடப்பட்டது. இதில் நான்கு கோர்  உள்ளது. எனவே இதன் வேகம் மிகவும் அதிகமாக இருக்கும். எனவே இதை அதிகமாக மக்கள் வாங்கினார்கள். இதில் நான்காம் தலைமுறை ராம் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஒன்பதாம் தலைமுறை பிராஸஸரை 1151 பொருத்தத்தில் பொருத்த வேண்டும். இது ஒரு பத்து நேனோ மீட்டர் பார்சஸ் ஆர் ஆகும்.

பத்தாம் தலைமுறை : ஐஸ் லீக் (இதுவரை)

இந்த பத்தாம் தலைமுறை பிராசசர் 2017 ல் வெளியிடப்பட்டது. இந்த சிபியு இல் நான்கு முதல் எட்டு கோர் வரை இருக்கும். எனவே இதன் வேகம் அதிகமாக இருக்கும். மக்கள் இதை அதிகமாக வாங்க விரும்புவார்கள். ஆனால் இதன் விலை மிகவும் அதிகம். இதைக்கொண்டு பெரிய பெரிய பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம். இது ஒரு பத்து நேனோ மீட்டர் போசஸஸ் ஆகும்.

அடுத்த தலைமுறை

இனி வரப்போகும் தலைமுறை ஒரு நேனோ மீட்டர் பிராசஸர் ஆக கூட இருக்கலாம். இது வெறும் 5 வோல்ட் மின்சாரத்தில் இயங்கக் கூடியதாக இருக்கலாம். இது வெறும் கற்பனையே. இது வந்தால் இதைப்பற்றி பார்க்கலாம்.

ADVERTISEMENT

படிக்க : கணினி சேமிப்பாக வகைகள் மற்றும் அதன் விளக்கம்

கேள்விகளுக்கு பதில்

இன்டெல் ப்ராசசர்-ல் எது சிறந்தது?

என்னைப் பொறுத்தவரை இன்டெல் ப்ராசசர்ன் எட்டாம் தலைமுறை ப்ராசசர் சிறந்ததாக இருக்கும். அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இன்டல் ‌ஐ3 8100
இது ஒரு பட்ஜெட் ப்ராசசர் ஆகும். இந்த ப்ராசசர் 4 கோர் மற்றும் நான்கு திரட்ஃடு ப்ராசசர்.

இன்டல் ஐ5 8600
இது ஒரு கேமிங் ப்ராசசர் ஆகும். இதில் 6 கோர் மற்றும் 6 திரட் உடைய பிராசஸர்.

இன்டல் ஐ7 8700
இந்த பிராசஸர் ஆன்லைனில் ஸ்ட்ரீமிங் செய்ய சிறந்தது ஆகும். இதில் 6 கோர் உள்ளது.

இன்டல் ஐ9 9900
இது அதிவேகமான பிராசஸர் ஆகும். இதில் 8 கோர் உள்ளது.

புதிய பிராசஸர் எது?

இன்டெல் நிறுவனத்தின் புதிய பிராசஸர் ஒன்பதாம் தலைமுறை மற்றும் பத்தாம் தலைமுறை கொண்ட பிராசஸர் ஆகும். இதில் வேகம் மற்றும் திறன் அதிகமாக இருக்கும்.

ADVERTISEMENT

ஏஎம்டி மற்றும் இன்டெல் ப்ராசசர் எது சிறந்தது.

இந்த இரண்டு ப்ராசசர் பற்றிய தெளிவான விளக்கம் இன்னொரு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை நீங்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

படிக்க : ஏஎம்டி மற்றும் இன்டெல் ப்ராசசர் வேறுபாடுகள், சிறந்தது எது?, எதை வாங்கலாம்?

வீட்டு உபயோகத்திற்கு போதுமான ப்ராசசர் எது?

உங்களுடைய வீட்டு உபயோகத்திற்கு மட்டும் பயன்படுத்த போகிறீர்கள் என்றால் இன்டெல் பெண்டியம் ப்ராசசர் போதுமானதாகும்.

அலுவலக பயன்பாட்டிற்கு சரியான பிராசஸர் எது?

குறைந்த அலுவலக வேலை மற்றும் சிறிய விளையாட்டுகளை விளையாட இன்டெல் நிறுவனத்தின் ஐ3 பிராசஸர் போதுமானதாகும்.

விளையாட்டு மற்றும் ஆன்லைனில் ஸ்டிரீம் செய்ய பிராசஸர்

நீங்கள் விளையாட்டுகள் விளையாடி மற்றும் அதை ஆன்லைன் மூலம் ஸ்டிரீம் செய்யப் போகிறீர்கள் என்றால் நீங்கள் ஐ5 அல்லது ஐ7 ப்ராசசர் வாங்கலாம்.

பெரிய மென்பொருள் பயன்படுத்த ப்ராசசர்

நீங்கள் பெரிய மென்பொருள் பயன்படுத்த போகிறீர்கள் அல்லது பெரிய வீடியோ எடிட்டிங் செய்ய போகிறீர்கள் என்றால் நீங்கள் ஐ7 அல்லது ஐ9 ப்ராசசர் வாங்கிக் கொள்ளலாம்.

ஏஎம்டி, இன்டல் குறைந்த விலை எது?

இன்டெல் நிறுவனத்தின் ப்ராசசர் விலையைவிட ஏ எம் டி நிறுவனத்தின் பிராசஸர் விலைமலிவாக கிடைக்கும்.

ADVERTISEMENT

ஏஎம்டி, இன்டல் எது வேகமானது?

ஏஎம்டி ப்ராசசர் விட இன்டெல் நிறுவனம் பிராசஸர் வேகமானது. இருப்பினும் ஏஎம்டி ப்ராசஸ்ல் ஓவர்கிளாக் ( Over clocking )  செய்யும் பொழுது வேகம் அதிகமாக கிடைக்கும்.

படிக்க : சிபியு ஜிபியூ ஏபியூ வேறுபாடுகள் மற்றும் அதன் வகைகள். உங்களுக்கு தேவையான ப்ரோசிஸோர் வாங்குவது எப்படி?

ஓவர்க்கிளாக்கிங் என்றால் என்ன?

நீங்கள் பயன்படுத்தும் ப்ராசசர் மிகவும் வேகம் குறைவானதாக இருந்தால் நீங்கள் அதை ஓவர்க்கிளாக்கிங் செய்து அதன் வேகத்தை சற்றே அதிகப் படுத்தலாம். உதாரணமாக 3 GHz வேகமுடைய ப்ராசசர் ஓவர்க்கிளாக்கிங் செய்யும் பொழுது 3.5 GHz வரை வேகம் கிடைக்கலாம். இதன் மூலமாக உங்கள் திறன் அதிகரிக்கும்.

ஓவர்க்கிளாக்கிங் செய்வது எப்படி?

ஓவர்க்கிளாக்கிங் செய்யும் முன் உங்கள் பிராசஸர் மற்றும் மதர்போர்டு ஓவர்க்கிளாக்கிங் வசதி உள்ளதா என்பதை சோதனை செய்து கொள்ளவும். ஓவர்க்கிளாக்கிங் வசதி இருந்தால் உங்கள் மதர்போர்டு அமைப்பு உள்ளே சென்று பிராசஸர்க்கு செல்லும் மின்சாரத்தின் வேகத்தை சற்றே அதிகப் படுத்தினால் நீங்கள் ஓவர்க்கிளாக்கிங் செய்ய முடியும்.

இன்டெல் ப்ராசசர் ஓவர்க்கிளாக்கிங் செய்ய முடியுமா?

முடியும். உங்களுடைய ப்ராசசர் கடைசி எழுத்து K என முடிந்தால் உங்களால் ஓவர்க்கிளாக்கிங் செய்ய முடியும்.

இன்டெல் ப்ராசசர் ரேம் எவ்வளவு தேவைப்படும்

உங்கள் கணினிக்கு எவ்வளவு ரேம் தேவைப்படும் அல்லது நீங்கள் செய்யும் வேலைக்கு எவ்வளவு ரேம் தேவை என தெரிந்து கொள்ள நமது தளத்தின் இன்னொரு பதிவை படிக்கவும்.

படிக்க : உங்களுக்கு ரேம் எவ்வளவு தேவைப்படும்?

இந்த ஒரு பதிவில் உங்களுக்கு இன்டெலின் வகைகள் மற்றும் அதன் தலைமுறைகளை பற்றி தெளிவாக புரிந்திருக்கும். எனவே இந்த பதிவை நண்பர்களுக்கும் பகிருங்கள்.

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *