how-to-install-any-android-app-in-pc-tamil-atozpc-in

Install Android App in Computer

ADVERTISEMENT

how-to-install-any-android-app-in-pc-tamil-atozpc-in

கணினில் ஆண்ட்ராய்டு அப்ப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்வது எப்படி

நம் அன்றாட வாழ்வில் கணினி ( Computer ) மற்றும் ஆண்ட்ராய்ட் தொலைபேசியை ( Android Phone ) பயன்படுத்தி வருகிறோம். இன்னும் தெளிவாக சொன்னால் கணினியை விட அதிகமாகவே தொலைபேசியை பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலையில் மொபைலில் உள்ள ஒரு சில பயன்பாடுகளை ( Application ) கணினியில் பயன்படுத்தினால் மட்டுமே சற்று எளிமையாக இருக்கும். உதாரணமாக மொபைலில் உள்ள விளையாட்டுகளை நமது கணினியில் விளையாடுவது ( ஒரு சில காட்சி தெளிவாக தெரிய அல்லது கண்ட்ரோல் செய்ய ) மற்றும் வாட்ஸ் அப் ( WhatsApp ) செயலியை கணினியில் பயன்படுத்துவது ( வேகமாக தட்டச்சு செய்ய ).

இந்தக் காரணங்களின் அடிப்படையில் மென்பொருள் தயாரிப்பாளர்கள் ( Software Developer ) கணினிக்கு ஒரு புதிய விதமான மென்பொருளை உருவாக்கியுள்ளார்கள். இந்த மென்பொருள் ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள அனைத்து விதமான செயலிகளையும் ( Application ) உங்களுடைய கணினியில் பயன்படுத்துமாறு வடிவமைத்துள்ளார்கள். இந்த மென்பொருள் மூலமாக ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை உங்களுடைய கணினியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும். அந்த செயலியை எப்படி தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

படிக்க : கணினியில் இயங்குதளம் இன்ஸ்டால் செய்வது எப்படி?

கணினியில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்ய பலவிதமான மென்பொருள்களும் மற்றும் ஒரு சில ஓஎஸ் ( Operating system ) உள்ளது. எனவே கணினியில் இரண்டு விதமான வழிமுறைகளில் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ய முடியும். உங்களுக்கு கணினியில் வேறு எந்த ஒரு மென்பொருளும் இல்லாமல் ஆண்ட்ராய்டு பயன்படுத்த வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் தொலைபேசியை ஸ்க்ரீன் காஸ்ட் ( Screen cast / Screen mirroring ) செய்து கணினியில் பயன்படுத்த முடியும். அந்த வழிமுறைகளை பற்றி கீழே தெளிவாக பார்க்கலாம்.

மூண்டு வழிகள்

முதல் வழி

விண்டோஸ் கணினியில் ஒரு மென்பொருளை ( Software )நிறுவி அதன் மூலமாக ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை பயன்படுத்துவது.

ADVERTISEMENT

இரண்டாம் வழி

உங்கள் கணினிக்கு ஆண்ட்ராய்டு ஓ எஸ் ( Android OS ) நிறுவி அதன் மூலமாக ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை பயன்படுத்துவது.

மூன்றாம் வழி

உங்கள் தொலைபேசியை கணினியில் ஸ்கிரீன் காஸ்ட் ( Screen cast ) செய்து பயன்படுத்துவது.

படிக்க : 20 ஆயிரம் ரூபாய் கணினி , யாருக்கு பயன்படும்.

எது உங்களுக்கு சிறந்த வழி

இந்த மூன்று வழிகளில் உங்களுக்கு சிறந்தது எது என்று பார்க்கலாம்

உங்களிடம் ஒரு பழைய கணினி அல்லது மடிக்கணினி இருந்தால் அதை நீங்கள் ஆண்ட்ராய்டு ஓ எஸ் நிறுவிப் பயன்படுத்தலாம். உங்களிடம் ஒரே ஒரு கணினி மட்டுமே இருக்கிறது என்றால் நீங்கள் அந்த கணினியில் ஆண்ட்ராய்டு சாஃப்ட்வேர் நிறுவி பயன்படுத்தலாம். உங்கள் கணினியின் வேகம் குறைவாக இருந்தால் ஸ்கிரீன் காஸ்ட் செய்து பயன்படுத்தலாம்.

சரி, இதை எப்படி சரியாக பயன்படுத்துவது என்று தெளிவாகப் பார்க்கலாம்.

A ) மென்பொருளை நிறுவி பயன்படுத்தும் முறை

கணினியில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்ய பலவிதமான மென்பொருள்கள் உள்ளது. அதில் நீங்கள் எதை வேண்டுமானாலும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இவை அனைத்தும் இலவசமாகவே கிடைக்கிறது. கீழே உள்ள ஏதாவது ஒரு மென்பொருளை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளவும்.

ADVERTISEMENT
  1. ப்ளூ ஸ்டாக் ( Blue stacks )
  2. எல் டி பிளேயர்( LD Player )
  3. ஆண்ட்ராய்டு ஸ்டுடியோ ஏமுலட்டர் ( Android studio emulator )
  4. ரீமிக்ஸ் ஓஎஸ் பிளேயர் ( Remix os player )
  5. எம் எமூ ( MEmu )
  6. கேம் லூப் ( Game loop )

இதுபோன்று பலவிதமான ஆண்ட்ராய்டு எமுலேடர் உள்ளது. இதில் உங்களுக்கு எது தேவையோ அதை நீங்கள் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இதில் நான் பயன்படுத்தியது ப்ளூ ஸ்டாக் மற்றும் கேம் லூப்.

இந்த சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்த பிறகு அதை ரன் ( Run as administrator ) செய்யவும்

அதில் கேட்கும் நெக்ஸ்ட், நெக்ஸ்ட் பொத்தானை கிளிக் செய்யவும்.

இதை நீங்கள் இன்ஸ்டால் செய்து முடித்த பிறகு ஒருமுறை உங்கள் கணினியை மறு இயக்கம் ( Restart ) செய்யவும்.

உங்கள் கணினி துவங்கிய பிறகு இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.

அது முதல் முறை பூட் (Boot) ஆவதற்கு ஒரு சில நிமிடங்கள் ஆகும்.

ADVERTISEMENT

அது பூட் ஆனபிறகு அதில் உங்களுடைய கூகுள் அக்கவுண்ட் ( Google Account ) லாகின் செய்யவும்.

அப்போதுதான் நீங்கள் உங்களுக்கு தேவையான ஆன்ட்ராய்டு மென்பொருள்களை நிறுவ ப்ளே ஸ்டோர் ( Play Store ) அனுமதிக்கும்.

இப்பொழுது உங்களது பிளே ஸ்டோரை ஓபன் செய்து அதில் உங்களுக்கு தேவையான அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும்.

உங்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்த பிறகு அதை ஓபன் செய்ய ப்ளே ஸ்டோர் அல்லது முகப்பை பயன்படுத்தவும்.

நீங்கள் உங்கள் மென்பொருளில் தரவிறக்கம் செய்த அப்ளிகேஷன்கள் உங்களது டெக்ஸ்டாப்பில் வந்திருக்கும்.

நீங்கள் நேரடியாக டெஸ்க்டாப்பில் உள்ள ஷார்ட்கட் ( Shortcut ) மூலமாக அந்த மென்பொருட்களை இயக்க முடியும்.

ADVERTISEMENT

படிக்க : வைரஸ் கிளீன் செய்வது எப்படி? இலவச மென்பொருள் மூலம் வைரஸ்-ஐ அழிப்பது எப்படி?

B ) ஸ்கிரீன் காஸ்ட் செய்து பயன்படுத்தும் முறை

உங்களுடைய கணினி மற்றும் தொலைபேசி ஒன்றோடு ஒன்று இணைப்பு செய்து உங்கள் மொபைல் போனில் உள்ள தகவல்களை அப்படியே உங்கள் கணனியில் பார்க்க இயலும். அது மட்டுமில்லாமல் உங்கள் கணினி மூலமாக உங்கள் போனை தொடாமலேயே கட்டுப்படுத்த முடியும். இதை நீங்கள் செய்ய வேண்டும் என்றால் கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

முதலில் உங்கள் கணினியில் ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்யவும்.
பிறகு கணினி செட்டிங்ஸ் உள்ளே செல்லவும்.
சிஸ்டம் ( System ) என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
பின் வலது புறம் கீழே பார்த்தால் புரொஜெக்ட் டூ பிசி ( Projecting to this PC ) என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
முதலில் உள்ள தேர்வு ஆப்ஷனில் ஆல்வேஸ் ஆப் ( Always off ) தேர்வுசெய்யவும்.
அடுத்த ஆப்ஷனில் ஃபர்ஸ்ட் டைம் ஒன்லி ( First time only ) தேர்வுசெய்யவும்.
அடுத்து உள்ள ரெட்டியூர் பின் பார் பேரிங் ( Require PIN for pairing ) பொத்தானை ஆப் செய்யவும்.
அடுத்துஉள்ள Discovered பொத்தானை ( Button ) ஆன் செய்யவும். இதை ஆன் செய்தால் மட்டும் தான் உங்களுடைய கணினி போனில் தெரியும்.
அடுத்து உள்ள பிசி நேம் ( PC Name ) உங்களுக்கு தேவை என்றால் மாற்றிக் கொள்ளலாம்.
இப்பொழுது அனைத்து திரையையும் மூடிக் கொள்ளவும்.
இப்பொழுது ஸ்டார்ட் பட்டனை அழுத்தி கனெக்ட் ( Connect ) என தேடவும்.
அதில் முதலாக வரும் ( Connect ) ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
இப்பொழுது உங்கள் கணினியில் ஒரு திரை தோன்றும், அதில் உங்கள் கணினியின் பெயர் இருக்கும் மற்றும் கீழே உங்கள் கணினி தயாராக உள்ளது ( ready for you to connect ) என்ற ஒரு வாக்கியம் இருக்கும். உங்கள் கணினி தயாராக வில்லை என்றால் மேலே உள்ள வழிமுறைகளை மீண்டும் பயன்படுத்தவும்.

இப்பொழுது உங்களுடைய போனில் நோட்டிபிகேஷன் ( Quick notification settings ) ஓபன் செய்யவும்.
அதில் காஸ்ட் , ஸ்கிரீன் மிரர் ( Cast / Screen mirroring ) இதுபோன்ற ஆப்ஷன் இருந்தால் அதை தேர்வுசெய்யவும்.
இந்த ஆப்ஷன் அங்கே இல்லை என்றால் உங்கள் போனின் செட்டிங்ஸ் உள்ளே சென்று இந்த ஆப்ஷனை தேடவும்.
உங்களுடைய போனில் அதை ஓபன் செய்த பிறகு வைபை மற்றும் ப்ளூடூத் ஆன் செய்ய சொல்லும். அதற்கு நீங்கள் சரி என கொடுக்க வேண்டும்.
பிறகு உங்கள் பக்கத்தில் உள்ள கணினியை அது தேடும். அப்போது உங்களுடைய கணினி பெயர் உங்கள் போனில் தெரியும்.
அந்த கணினியை தேர்வு செய்து ரெக்வெஸ்ட் செல்லும் வரை காத்திருக்கவும்.
இப்பொழுது கணினி அல்லது மொபைல் போனில் ஓகே சரி இதுபோன்று வரும் நோட்டிபிகேஷன் தேர்வுசெய்யவும்.

உங்களுடைய மொபைல் போனின் திரை உங்களுடைய கணினியில் தெரியும்.
இப்பொழுது நீங்கள் உங்கள் மொபைல் போனை பெரிய திரையில் பார்க்க முடியும்.

படிக்க : கணினி சேமிப்பாக வகைகள் மற்றும் அதன் விளக்கம்

C ) உங்கள் கணினியில் ஆன்டிராய்டு ஓஎஸ் நிறுவி பயன்படுத்தும் முறை

உங்கள் கணினியில் அண்ட்ராய்டு ஓஎஸ் நிறுவி பயன்படுத்தும்போது ஆண்ட்ராய்டின் வேகம் இன்னும் அதிகமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் கணினியில் அனைத்துவிதமான டிரைவர்களும் சரியாக தேர்ந்தெடுக்கப்படும்.

இதற்கு நீங்கள் உங்களுடைய பழைய கணினியை கூட பயன்படுத்த முடியும். சரி இதை எப்படி கணினியில் நிறுவுவது என்று பார்க்கலாம்.

ADVERTISEMENT

முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு ஓஎஸ் டவுன்லோட் செய்து கொள்ளவும். இவை அனைத்துமே ஆண்ட்ராய்ட் மூலம் இயங்கக்கூடிய ஓஎஸ். இது கணினியில் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

  1. ரிமிக்ஸ் ஒஸ் ( Remix OS )
  2. போனிக்ஸ் ஓஎஸ் ( Phonix OS )
  3. ஆண்ட்ராய்டு ஓஎஸ் ( Android OS )

இதில் நான் பயன்படுத்தியது ரிமிக்ஸ் ஒஸ். இந்த ரீமிக்ஸ் ஓஎஸ் ஆண்ட்ராய்டு நிறுவனம் வெளியிட்டது. எனவே இது பயன்படுத்துவதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

படிக்க : கணினியில் இயங்குதளம் இன்ஸ்டால் செய்வது எப்படி?

முதலில் இந்த ஓஎஸ் டவுன்லோட் செய்து கொள்ளவும்.
பிறகு அதை பென்டிரைவில் போன் செய்யவும். இதை பூட் செய்ய Power ISO, UUI அல்லது உங்களுக்கு விருப்பமான மென்பொருளை பயன்படுத்தி கொள்ளவும்.
இதில் நான் பயன்படுத்தியது UUI.
முதலில் உங்களுடைய ஓ எஸ் ஐ தேர்வு செய்து கொள்ளவும்.
பிறகு உங்களுடைய பென் டிரைவை தேர்வு செய்து கொள்ளவும்.
பிறகு ஸ்டார்ட் பொத்தானை க்ளிக் செய்யவும்.
சிறிது நேரத்துக்கு பிறகு உங்களுடைய பென்டிரைவில் ஓஎஸ் நிறுவப்பட்டது என்ற தகவல் வரும்.
இப்பொழுது நீங்கள் எந்த கணினியில் ஓஎஸ் போட வேண்டுமோ அந்தக் கணினியில் பென்டிரைவை சொருக வேண்டும்.
அந்த கணினியை ஆன் செய்து பூட் மெனுவில் செல்லும் பொத்தானை அழுத்த வேண்டும்.
அந்தப் போர்தான் F1,F2,F8,F9,F10,F12 அல்லது Delete இதில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும்.
பூட் மெனு மூலம் பென்ட்ரைவை தேர்வு செய்து ஓஎஸ் போட வேண்டும்.
பிறகு உங்கள் கணினி சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும்.
இப்பொழுது உங்கள் கணினி ரீபூட் செய்த பிறகு உங்களுடைய ஆண்ட்ராய்ட் உங்கள் கணினியில் வெற்றிகரமாக நிறுவப்படும்.

இப்போது நீங்கள் உங்கள் கணினியை ஆண்ட்ராய்டு டேப்லெட் போல பயன்படுத்த முடியும்.
அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு தேவையான மென்பொருள்களை நிறுவி பயன்படுத்த முடியும்.
உங்கள் கணினி வேகம் குறைந்த தாக இருந்தாலும் ஆண்டிராய்டு ஓஎஸ் நிறுவும் போது வேகம் மிகவும் நன்றாக இருக்கும்.

படிக்க : ரேம் பற்றி முழு விளக்கத்தை பார்க்கலாம். வகைகள்? எது சிறந்தது? இன்னும் பல…

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிரவும், மேலும் இது போன்ற பயனுள்ள கணினி பற்றிய அனைத்து விதமான தகவல்களை தெரிந்துகொள்ள நமது வலைதளத்தை அடிக்கடி பார்வையிடுக.
நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *