ரேம் பற்றி பார்க்கலாம்
இந்தப்பதிவில் நாம் ரேம் எத்தனை வகைப்படும் மற்றும் அதன் தலைமுறைகளைப் பற்றி பார்க்கலாம்.
ரேம் என்பது கணினி இயங்குவதற்கு ஒரு முக்கிய சாதனமாகும் .இது இல்லை எனில் கணினி இயங்காது. இந்த ராம் 4 தலைமுறைகளில் கிடைக்கிறது. அவற்றின் வேறுபாடுகள் மற்றும் அது பயன்படுத்தும் மின்சார அளவை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ரேமின் வகைகள்
- எஸ் டி ரேம் ( SDRAM )
- டிடிஆர் அல்லது டி டி ஆர் 1 ( DDR / DDR1 )
- டி டி ஆர் 2 ( DDR2 )
- டி டிஆ ர் 3 ( DDR3 )
- டி டி ஆர் 4 ( DDR4 )
மேலே கொடுக்கப்பட்டுள்ள ரேம் இந்த வகைகளில் கிடைக்கிறது. இவற்றில் முதல் மூன்று வகைகள் ( SDRAM – DDR2 ) மிகவும் பழமையானது. மூன்று மற்றும் நான்காம் டிடிஆர் ரோம் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ரேம் களின் வேறுபாடுகளை பற்றி பார்க்கலாம்.
படிக்க : அழிந்த தரவுகளை மீட்பது எப்படி? கணினியில்,மொபைல் போனில், மற்ற சேமிப்பகங்களில்.
எஸ்டிரேம்
இந்த ராம் மிகவும் பழமையான தொழில்நுட்பமாகும். இதுதான் ராமின் முதல் வடிவமைப்பு ஆகும். இது அளவில் பெரியதாகவும் இதன் சிப் பெரியதாகவும் இருக்கும். இந்த ராம் மூலமாக 113 கிளாக் ஸ்பீட் கொடுக்க முடியும். இதன் கொள்ளளவு 256 எம் பி மற்றும் 512 எம்பி என இருக்கும். இதன் வேகம் 113 ஹிட்ஸ் என இருக்கும்.
டி டிஆர் 1 ரேம்
இந்த ராம் 266 முதல் 400 எம் டி எஸ் வரை கிடைக்கும். இதனை டி டிஆர் 266 என குறிப்பிடுவர். மற்றும் டி டிஆர் 400 எனவும் கிடைக்கும். இதன் வேகம் 266 முதல் 400 ஹெர்ட்ஸ் வரை கிடைக்கும். இது ஒரு ஆரம்பகால தலைமுறை ராம் என்பதால் அதன் வேகம் குறைவாகத்தான் இருக்கும். இதை இப்போது வாங்குவது முற்றிலும் தவறானது. ஏனெனில் இந்த காலத்துக்கு இது செட்டாகாது.
டி டிஆர் 2 ரேம்
இந்த டி டிஆர் 2 ரேம் ஒரு ஆரம்ப காலத்தில் வேகமாக இருந்த ஒரு ராம் ஆகும். இதையும் தற்போது மிகப் பழைய கணினிகளில் காணலாம். இதை இந்த காலத்துக்கு வாங்க வேண்டிய அவசியமில்லை. இதன் கொள்ளளவு 512 எம்பி முதல் 2 ஜிபி வரை கிடைக்கும். இந்த ராம் ஒரு நாலு பிட் செயலி ஆகும். இதன் மூலமாக 533 முதல் 800 வரை வேகம் கிடைக்கும். இதன் வகைகள் டி டிஆர் 2 533 மற்றும் டி டிஆர் 2 800 எனக்கு கிடைக்கும்.
டி டிஆர் 3 ரேம்
இந்த மூன்றாம் தலைமுறையில் ராம் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் இந்த தலைமுறைக்கு பிறகு தான் கணினி அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே மக்கள் அனைவரும் இதை வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே இது அதிகமாக காணப்படுகிறது. இந்த தலைமுறையில் மின்சாரத்தின் அளவு குறைந்துள்ளது மற்றும் வேகம் அதிகரித்துள்ளது. இது ஒரு 8 பிட் செயலி ஆகும். இந்த ராமின் கொள்ளளவு ஒரு ஜிபி முதல் 8 ஜிபி வரை கிடைக்கிறது. மற்றும் இதில் பல தொழில்நுட்பங்கள் புதுமையாக கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே இது அதிகமாக வழக்கத்துக்கு வந்துள்ளது.
டி டிஆர் 4 ரேம்
இந்த நான்காம் தலைமுறை எரேம் ஆனது அதிகமாக வரவில்லை என்றாலும் இந்த காலத்தில் மற்றும் இனிவரும் காலத்தில் கணினியை உருவாக்க விரும்புவார்கள் கண்டிப்பாக இதைத்தான் வாங்கியாக வேண்டும். ஏனெனில் ஒன்பதாம் தலைமுறை சிபியு நான்காம் தலைமுறை ரேம்ல் தான் இயங்கும். இந்த நான்காம் தலைமுறை ரேம் மிக அதிக வேகத்துடனும் மிகக்குறைந்த மின்சாரத்தையும் பயன்படுத்துகிறது. இதன் கொள்ளளவு 2ஜிபி முதல் 32 ஜிபி வரை இருக்கும். எனவே 256 ஜிபி ராம் கூட போட முடியும். இதன் வேகம் 1066 முதல் 1600 வரை இருக்கும். அதுமட்டுமில்லாமல் இதன் வேகம் மெகாஹிட் செல் இருக்கும்.
படிக்க : முழு கணினியை உருவாக்குவது எப்படி? கணினியை உருவாக்க தேவையான பொருட்கள்?
இந்த ராம் உங்களது சிபியு மற்றும் மதர் போர்டை பொறுத்து அமைகிறது. எனவே புதிய தொழில்நுட்பங்களை வாங்கி உங்கள் வேகத்தை அதிகப்படுத்துங்கள். நீங்கள் வாங்கும் பொழுது இந்த தொழில்நுட்பங்கள் சந்தையில் கிடைக்கும். எனவே இதை வாங்கி பயன் பெறுங்கள்.
ரேம் மற்றும் ரோம் வேறுபாடுகள்
இவை இரண்டும் கணினியில் பயன்படுத்த கூடிய கருவிகள் தான். இருப்பினும் இவைகளில் பல வேறுபாடுகள் உள்ளது. அவற்றைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்.
ரேம் (RAM)
இதை கணினியின் மெமரியை என அழைக்கப்படுகிறது. இது இருந்தால் மட்டுமே உங்கள் கணினி செயல்படும். இந்த ரேம் பல வகைகளில் கிடைக்கிறது. அவற்றின் வகைகள் மேலே குறிப்பிட்டுள்ளது. இந்த ரேம் சிபியு நடப்பு நேரத்தில் ( Real time ) இயங்க உதவுகிறது. இந்த மெமரி உங்கள் கணினியில் தரவுகளை எழுத, அழிக்க மற்றும் படிக்க உதவுகிறது. இந்த ஒரு பணி உங்கள் கணினியில் பல முறை நடைபெற்றுக்கொண்டே இருக்கும். இந்த மெமரியில் தற்காலிகமாக தரவுகளை சேமித்து வைக்கப்படும். ஒருமுறை கணினி அணைந்து விட்டால் இதன் மெமரி அழிந்துவிடும்.
இந்த ரேம் இரண்டு வகையாக பிரிக்கலாம்.
1) ஸ்டேடிக் ரேம் ( Static RAM ) அல்லது SRAM
2) டைனமிக் ரேம் ( Dynamic RAM ) அல்லது DRAM
ரோம் ( ROM )
இந்த ரோம் ஒரு மெமரி சேமிப்பகம் ஆகும். இது கணினியின் தரவுகளை சேமிக்க பயன்படுகிறது. இந்த ரோம் இல் கணினி அடைந்து விட்டாலும் அதில் உள்ள மெமரி அப்படியே இருக்கும். இதன் மூலமாக நமது தரவுகளை சேமிக்க முடியும். இதில் மெமரி அழியாமல் இருக்கும்.
இந்த ரோம் நான்கு வகைப்படும். அவை
1) ப்ரோக்ராம் ரோம் ( programmable ROM )
2) அளிக்கக்கூடிய ப்ரோக்ராம் ரோம் ( erasable programmable ROM )
3) மின்சாரத்தின் மூலம் அளிக்கக்கூடிய ப்ரோக்ராம் ரோம் ( electrically erasable programmable ROM )
4) மாஸ்க் ரோம் ( mask ROM )
படிக்க : கணினி சேமிப்பாக வகைகள் மற்றும் அதன் விளக்கம்
ரேம் மற்றும் வி-ரேம் வேறுபாடுகள்
ரேம் ( RAM )
இதை கணினி இயங்க உதவுகிறது. கணினி மற்றும் பிராசஸர் உடன் இது தொடர்புடையது மூலமாக கணினியை இயக்க உதவுகிறது. நமது பிராசஸர் சீராக செயல்பட வேண்டும் என்றால் இந்த பகுதி பயன்படுகிறது. இதைப் பயன்படுத்தி கூட்டல் கழித்தல் மற்றும் இன்னும் பல வேலைகளை எளிமையாக செய்ய முடியும்.
வி ரேம் ( v-RAM )
வி ரேம் என்பது வீடியோ ரேம் ஆகும். இந்த வி ரேம் கணினியின் திரையில் பார்க்கக் கூடிய அனைத்து செயல்களையும் உருவாக்க இது பயன்படுகிறது. இது பொதுவாக கிராபிக்ஸ் கார்டு மெமரியில் பயன்படும். கிராபிக்ஸ் கார்டு உதவியுடன் கணினியில் காட்சிகளை நாம் தெளிவாக பார்க்க முடியும். அதுமட்டுமில்லாமல் விளையாட்டுகளில் ஒரு சில பாகங்கள் சீராக இயங்க இது பயன்படுகிறது.
படிக்க : சிபியு ஜிபியூ ஏபியூ வேறுபாடுகள் மற்றும் அதன் வகைகள். உங்களுக்கு தேவையான ப்ரோசிஸோர் வாங்குவது எப்படி?
அதிக ரேம் போட்டால் அதிக வேகம் கிடைக்குமா?
அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒரு சந்தேகம்தான் இது. அதிகரம் போட்டால் அதிக வேகம் கிடைக்குமா என்று. இது ஒரு சில நேரங்களில் தவறாக அமைகிறது. நீங்கள் அதிக ரேம் போட்டாலும் உங்களுடைய கணினி அதிக வேகம் கிடைக்காது. உங்களுடைய கணினி வேகம் உங்களுடைய ப்ராசசர் பொருத்து அமைகிறது. அந்த பிராசஸர் அதிகபட்சம் எவ்வளவு ரேம் வரை செயல்படுமோ அது வரை மட்டுமே அதன் வேகம் கிடைக்கும். அதற்குமேல் ரேம் இன்ஸ்டால் செய்தால் அதன் வேகம் அதிகரித்தது.
உதாரணமாக ஒரு பிராசஸர் அதிக வேகம் 100% என்று வைத்துக் கொள்வோம். இந்த பிராசஸர் 4 ஜிபி மெமரி வரை மட்டுமே ஒத்து இசைக்கும். அதாவது 4ஜிபி ரேம் போட்டால் உங்களுக்கு 100 சதவீத வேகம் கிடைக்கும். இப்போது நீங்கள் ஒரு ஜிபி மெமரி மட்டுமே போட்டு இருந்தால் உங்களுக்கு 25% வேகம் மட்டுமே கிடைக்கும். நீங்கள் 4ஜிபி ரேம் போட்டிருந்தால் உங்களுக்கு 100 சதவீத வேகம் கிடைக்கும். இப்போது நீங்கள் 8 ஜிபி ரேம் போட்டால் உங்களுக்கு 200% வேகம் கிடைக்காது. ஏனெனில் உங்கள் கணினி ஏற்கனவே 100 சதவிகித வேகத்தை தொட்டுவிட்டது. இப்போது நீங்கள் வெறும் ரேம் மட்டும் அதிக படுத்தினால் உங்களுக்கு வேகம் கிடைக்காது. நீங்கள் வேறு புதிய சிறந்த பிராசஸர் இன்ஸ்டால் செய்தால் மட்டுமே உங்களுக்கு தேவையான வேகம் கிடைக்கும்.
படிக்க : கணினில் ஆண்ட்ராய்டு அப்ப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்வது எப்படி
அதிகபட்சம் ரேம் எவ்வளவு போட முடியும்
இந்த ரேம் அளவு உங்கள் கணினியின் ப்ராசஸர் மட்டும் பொருத்து அமையாது. உங்களின் மதர்போர்டு மற்றும் இயங்குதளம் பொருத்தும் அமையும்.
ஆனால் நாம் குறைந்தபட்சம் மெமரி என்னவென்று பார்க்கலாம்.
உங்களுடைய கணினி விண்டோஸ் 7 இயங்கு தளத்தில் இயங்கிக் கொண்டு இருந்தால் 32 பிட் இயங்குதளத்தின் அதிகபட்ச ரேம் 4 ஜிபி ஆகும். இதுவே 64 பிட் இயங்கு தளத்தில் இயங்கிக் கொண்டிருந்தால் 192 ஜிபி வரை ரேம் போட முடியும்.
உங்கள் கணினி விண்டோஸ் 10 இயங்கு தளத்தில் இயங்கிக் கொண்டிருந்தால் 32 பிட் எனில் 4ஜிபி ( ஜிகா பைட் ) ரேம் போட முடியும். இதுவே 64 பிட் ( பைனரி + டிஜிட் = பிட் ) இயங்கு தளத்தில் இயங்கிக் கொண்டிருந்தால் 6 டிபி ( டெரா பைட் ) வரை ரேம் போட முடியும்.
உங்களுக்கு எவ்வளவு ரேம் தேவைப்படும்
நீங்கள் ஒரு சாதாரண கணினியை இயக்கப் போகிறீர்கள் என்றால் உங்களுக்கு குறைந்தபட்சம் 2 ஜிபி ரேம் தேவைப்படும்.
உங்கள் கணினியில் ஒரு சில சின்ன மென்பொருள்கள் இயக்கப் போகிறீர்கள் என்றால் உங்களுக்கு குறைந்தபட்சம் 4 ஜிபி ரேம் தேவைப்படும்.
கணினியில் குறைந்த அளவு விளையாட்டுகளை விளையாட விரும்பினால் குறைந்தபட்சம் 8 ஜிபி ரேம் தேவைப்படும்.
ஒரு பெரிய மென்பொருள் நிறுவ போகிறீர்கள் என்றால் குறைந்தபட்சம் 8 ஜிபி மெமரி தேவைப்படும். அல்லது அந்த மென்பொருளின் தேவைக்கு ஏற்ப மெமரி அதிகமாக இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
படிக்க : வைரஸ் கிளீன் செய்வது எப்படி? இலவச மென்பொருள் மூலம் வைரஸ்-ஐ அழிப்பது எப்படி?
ரேம் விலை விவரங்கள்
இந்த மெமரியின் விலை நீங்கள் என்ன சாதனம் உபயோகப் படுத்துகிறார்கள் என்பதை பொருத்து அமையும். அது மட்டுமல்லாமல் உங்கள் கணினியின் தேவைக்கு ஏற்ப விலை மாறுபடும். உதாரணமாக உங்கள் கணினியில் டிடிஆர் மெமரி சப்போர்ட் இருந்தால் விலை கம்மியாக இருக்கும். டிடிஆர் 4 மெமரி இருந்தால் அதன் விலை அதிகமாக இருக்கும்.
இந்தியாவில் இந்த மெமரி விலை குறைந்தபட்சம் 500 முதல் தொடங்கி சில ஆயிரம் வரை கிடைக்கிறது. ஆனால் புதிதாக வந்த 1.5 டிபி மெமரின் விலை 1.23 லட்சம் ஆகும். இந்த மெமரி சர்வர் மற்றும் மிகப்பெரிய ரிசர்ச் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
ரேம் பற்றிய ஒரு சில அறியாத உண்மைகள்
ரேம் வெப்பமடையுமா?
ஆம், அனைத்து விதமான எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்களும் வெப்பம் அடையும். இதை வெப்பத்தை குறைக்க ஒரு சில முறைகள் பயன்பட்டு வருகிறது. கணினியில் உள்ள ஃபேன் ( Fan ) உள்ளே உருவாகும் அனைத்து வெப்பத்தையும் வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலமாக ரேம் மெமரியில் உள்ள வெப்பமும் வெளியேற்றப்படுகிறது.
ரேம் கணினிக்கு கட்டாயம் தேவையா?
ஆம், இந்த மெமரி கணினிக்கு மிகவும் அவசியமாகும். அது மட்டுமில்லாமல் ஒரு சில வேலைகளை செய்யும் அனைத்து உபகரணங்களும் இந்த மெமரி தேவைப்படும். அவை அளவில் சிறியதாக இருந்தாலும் அதுவும் ரேம் மெமரி தான். இந்த மெமரி இல்லை எனில் பெரும்பாலான உபகரணங்கள் இயங்காது. ஏனெனில் அனைத்து விதமான செயல்பாடுகளும் கூட்டல் கழித்தல் பெருக்கல் மற்றும் கணிப்புகள் மூலம் நடைபெற்று வருகிறது. எனவே இந்த மெமரி கட்டாயம் தேவைப்படும்.
படிக்க : சிறந்த மடிக்கணினி வாங்குவது எப்படி? வாங்குவதற்கு முன் பார்க்க வேண்டியவை?
32 ஜிபி ரேம் யாருக்கு தேவைப்படும்?
16 ஜிபி ரேம் ஒரு சிறந்த வேலைகளுக்குப் போதுமானதாகும் . அல்லது விளையாட்டுக்களை விளையாடுபவர்களுக்கும் போதுமானதாகும். இருப்பினும் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் பொழுது இந்த மெமரி அதிகமாக தேவைப்படும். அதிக வேலை ஒரே நேரத்தில் செய்யும் நபர்களுக்கு அதிக ரேம் தேவைப்படும்.
ரேம் சிறந்த நிறுவனம் எது ?
முன்னணி நிறுவனங்கள் உருவாக்கக் கூடிய அனைத்து ரேம் மெமரிகளும் சிறந்ததாகும். இந்த ரேம் உடன் ஹீட் ஸிங்க் ( Heat sink ) வரும் பொருள்களை வாங்கினால் அதன் வேகம் முழுமையாக அடைய முடியும்.
உங்கள் கணினிக்கு எந்த ரேம் தேவைப்படும்
நீங்கள் உங்கள் கணினியில் சிபியு ஜி ( CPU Z ) மென்பொருளை நிறுவி அதில் உள்ள மெமரி எனும் தேர்வை கொடுத்து உங்கள் கணினியின் ரேம் வகையைத் தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு இதன் வேகம் மற்றும் ஒரு சில தகவல்களும் கிடைக்கும்.
இந்த பதிவின் மூலமாக உங்களுக்கு ராம் பற்றிய சந்தேகங்கள் தீர்ந்திருக்கும் எனினும் சந்தேகம் இருந்தால் கீழே கருத்துப் பெட்டியில் தெரிவிக்கவும். இந்தப் பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுக்கு பகிரவும்.