கணினியின் வகைகள்
பலருக்கும் கணினி வாங்க வேண்டும் அல்லது கணினி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவார்கள். அவர்களுக்கு இந்த ஒரு பதிவு சரியாக இருக்கும்.
முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கணினி
பலர் கணினியை கண்டுபிடித்தது கலிலியோ கணினி என எண்ணுவார்கள். ஏனெனில் அவரது பெயரில் கணினி வந்துள்ளது. ஆனால் அது தவறு.
கணினியை முதலில் சார்லஸ் பாப்பேஜ் கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடித்த பொழுது கணினி ஒரு பெரிய வீடு அளவுக்கு இருக்கும். அதில் மிகவும் பழமையான மற்றும் முதல் தலைமுறை சாதனங்களும் உபயோக படுத்தப்பட்டது. அவற்றில் ஒருசில திடீரென வெடித்தும் கூட போகும்.
இந்த முதல்நிலை கணினியில் வெறும் 8 பிட் அளவு நினைவுகள் மட்டுமே இருக்கும். மற்ற அனைத்து வேலைகளையும் இது இயந்திரத்தின் மூலமாக செய்யும். இந்த கணினியில் காந்த சக்தியின் மூலமாக நினைவகத்தை சேமித்து வைத்துக் கொள்ளலாம். அதுவும் பெரிய அளவில் எல்லாம் இல்லை. மிகவும் சிறிய அளவு நினைவகத்தை மட்டுமே கொண்டது. இந்த முதல் தலைமுறை கணினியில் வெற்றிடக் குழாய் ( vacuum tube ) பயன்படுத்தப்பட்டது.
இந்த வெற்றிடக் குழாய் பல தலைமுறைகளாக பல மாற்றங்களைக் கொண்டுள்ளது. இந்த வெற்றிடக் குழாய் தான் இப்போது உள்ள டிரான்சிஸ்டர் (Transistor) மற்றும் ஐசி (integrated circuit) ஆகும். இதன் மூலமாக சில கணக்குகளை கணிக்க முடியும். இந்த முதல் தலைமுறைக் கணினி மிக அதிக வெப்பத்தையும் பெரிய இடத்தையும் பிடித்துக்கொண்டது. அதுமட்டுமில்லாமல் அதிக அளவு மின்சாரத்தை பயன்படுத்தியது. இப்படித்தான் இந்த கணினி முதல் தலைமுறையில் செயல்பட்டது.
டெஸ்க்டாப் கணினி ( Desktop Computer )
இந்த டெஸ்க்டாப் கணினியானது பலராலும் அறிந்த ஒன்றே. இந்த கணினி வேலை செய்யும் இடங்கள் அல்லது வீடுகளில் பயன்பாட்டாளர்களுக்கு உதவும். இந்த கணினியில் மானிட்டர், கீ போர்டு மவுஸ், சிபியு மற்றும் சில சாதனங்கள் காணப்படும். இந்த அனைத்து சாதனங்களும் சேர்ந்து டெஸ்க்டாப் கணினி என அழைக்கப்படுகிறது.
இந்தக் கணினியை வேறு எந்த ஒரு இடங்களுக்கும் எளிமையாக எடுத்துச் செல்ல முடியாது. இதன் திறன் அல்லது வேகம் இதில் உள்ள சிறிய சிறிய சாதனங்களை பொறுத்தது. இவற்றை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். உதாரணமாக கீ போர்டு மவுஸ் போன்றவை.
ஆல் இன் ஒன் கணினி ( All in One PC )
டெஸ்க்டாப் கணினி ஒரு மேசையை முழுவதுமாக அடைத்துக்கொள்ளும். அதனால் வேறு எங்கும் எடுத்துச் செல்ல முடியாத ஒரு கணினி யாகவும் மற்றும் டெஸ்க்டாப்பில் உள்ள அனைத்து சாதனங்களும் இணைக்கப்பட்டு மானிட்டர் பின்புறம் இருக்கும் இந்த கணினியின் பெயர் ஆல் இன் ஒன் கணினி. இந்த கணினி மிகச் சிறிய இடத்தை பிடித்துக் கொள்ளும் இதற்கு நமது மானிட்டர் வைக்கும் இடம் மட்டுமே போதும். அந்த மானிட்டரில் அனைத்து விதமான சாதனங்களும் உட்புறமாக இருக்கும். இதன் விலையும் டெஸ்க்டாப் கணினி விலைக்கு சிறிது அதிகமாக கிடைக்கும்.
விளையாடுவதற்கான டெஸ்க்டாப் கணினி ( Gaming PC )
விளையாடுவதற்காக கணினிகளும் அதிகமாக இப்போது விற்கப்பட்டு வருகிறது. அதிலும் கணினிகள் விலை ரூபாய் 50,000 மேல் இருக்கிறது. இதை அதிகமாக வாங்க காரணம், கணினியில் விளையாட வேண்டுமென நினைக்கிற இளைஞர்கள் அதிகமாக வாங்குகின்றனர்.இந்த விளையாட்டு கணினி விளையாடுவதற்கு மட்டுமல்லாமல் மிகப்பெரிய மென்பொருளை (software ) இயக்கவும் பயன்படுகிறது. இந்த கணினிகள் மூலமாக அதிக திறன் கிடைக்கும் அதன் மூலமாக அதிக வேலையும் செய்ய முடியும்.
படிக்க : முழு கணினியை உருவாக்குவது எப்படி? கணினியை உருவாக்க தேவையான பொருட்கள்?
சர்வர் கணினி ( Server Computer )
சர்வர் கணினி என்பது வேலை செய்யும் இடத்தில் அனைத்து தரவுகளையும் சேமித்து வைக்கவும் அந்த தரவுகளை பாதுகாக்கவும் மற்றும் அந்தத் தகவல்கள் மற்ற பயனாளர்களுக்கு பகிரவும் உதவுகிறது. இந்த சர்வர் கணினியை கொண்டு மென்பொருள்கள், தரவுகள் மற்றும் மின்னஞ்சல்கள் போன்றவற்றை பயன்படுத்த முடியும். மிகப்பெரிய அளவிலுள்ள வேலை செய்யும் இடங்களுக்கு மிகப்பெரிய அளவில் உள்ள சர்வர் கணினிகள் காணப்படும். இதில் தரவுகள் இரண்டு அல்லது நான்கு நகல்களாக சேமிக்கப்படும். இதற்குப் பெயர் ரைடு (RIDE) என்பார்கள்.
மடிக்கணினி ( Laptop )
நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும் மடிக்கணினி என்பது நம் மேசையின் மீது அல்லது மடியில் மீது வைத்து எளிமையாக இயக்கக்கூடிய ஒரு சிறிய அளவு கணினி ஆகும். இந்த மடிக்கணினியில் டெஸ்க்டாப்பில் உள்ள அனைத்து பொருட்களும் காணப்படும். ஆனால் இதன் மிகச் சிறிய சாதனங்களை மாற்றுவது கடினம். ஆனாலும் இதன் வேகம் மற்றும் திறன் போதுமானதாக இருக்கும்.
இந்த மடிக்கணினிகளை மாணவர்களுக்கும் மற்றும் பல வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு உதவியாக இருக்கும். இந்த மடிக்கணினிகளின் விலை ஏறக்குறைய டெஸ்க்டாப் கணினியின் விலைக்கு சமமாக இருக்கும்.
படிக்க :பழைய மடிக்கணினி வாங்குவது எப்படி? வாங்குவதற்கு முன் பார்க்க வேண்டியவை?
வர்த்தக மடிக்கணினி ( Business PC )
மடிக்கணினியில் சில மாற்றங்களை செய்து அல்லது வர்த்தகரீதியான தொழிலாளர்களுக்கு தேவையில்லாத சாதனங்களை நீக்கி எடையை குறைத்து அவற்றை வர்த்தக மடிக்கணினி என விற்கின்றார்கள். இந்த வர்த்தக மடிக்கணினிகளில் சிடி போடும் வசதி இருக்காது, டிஸ்பிலே அளவு சிறிதாக இருக்கும், இதில் எடையை குறைக்க எஸ் எஸ் டி தரவு சேமிப்பு சாதனம் பொருத்தப்பட்டிருக்கும். இதன் மூலமாக இதன் எடை குறைவாக இருக்கும் எனவே இதனை வர்த்தக மடிக்கணினி என்று கூறுகின்றனர்.
இந்த வர்த்தக மடிக் கணினியும் ஏறக்குறைய சாதாரண மடிக்கணினியின் விலைக்கும் கிடைக்கும். இதனை தொழில் செய்யும் பயனர்கள் அதிகம் வாங்குகின்றார்கள்.
படிக்க : சிறந்த மடிக்கணினி வாங்குவது எப்படி? வாங்குவதற்கு முன் பார்க்க வேண்டியவை?
விளையாடுவதற்கான மடிக்கணினி ( Gaming Laptop )
டெஸ்க்டாப்பில் மட்டும் விளையாடக்கூடிய பெரிய அளவு விளையாட்டுகளை மடிக்கணினியின் மூலமாகவும் விளையாட முடியும். அதற்கு நீங்கள் விளையாடுவதற்கான மடிக்கணினியை வாங்க வேண்டும். இந்த விளையாட்டுக்கான மடிக்கணினி விலை சாதாரண மடிக்கணினியின் விலையை விட மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமாக இருக்கும். இந்த மடிக்கணினி ஆனது மிக அதிக எடையும் மிக அதிக திறனும் மிக அதிக வேகத்துடனும் இருக்கும்.
இந்த மடிக்கணினியில் அனைத்து விதமான டெஸ்க்டாப் விளையாட்டுகளையும் விளையாட முடியும். இதன் ஆரம்ப விலை ஏறக்குறைய ஒரு லட்சம்.
தொலைபேசியில் கணினி ( Smartphone )
நம் அனைவர் கைகளிலும் மொபைல்கள் உள்ளது. அந்த மொபைலை ஒரு கணினி ஆகும் மாற்ற முடியும். அதற்கு நீங்கள் சில மென்பொருட்களை நிறுவ வேண்டும் அல்லது கணினியின் ஓஎஸ் ( Operation system ) நிறுவ வேண்டும். மொபைலில் ஒரு சில அப்ளிகேஷன் மூலமாக கணினியின் மென்பொருட்களை இயக்க முடியும்.
இதன் மூலமாக கணினியை மொபைல் ஆகாவும் மாற்ற முடியும். இந்த ரகசியம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் இதனை சில நிறுவனங்கள் ரகசியமாக வைத்துள்ளது. அவர்களின் தேவைக்கு மட்டும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொண்டு அவர்களின் வேலையை எளிமையாகவும் வேகமாகவும் செய்து முடிக்கின்றனர்.
படிக்க : கணினில் ஆண்ட்ராய்டு அப்ப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்வது எப்படி?
இயந்திரத்தில் கணினி
ஒரு சில இயந்திரத்தை இயக்க கணினி தேவைப்படுகிறது. கணினியின் மூலமாக ஒரு சில இயந்திரத்தை இயக்கமும் அதன் மூலமாக தரவுகளை தெரிந்து கொள்ளவும் கணினி பயன்படுகிறது. ஆனால் அதுபோன்ற கணினிகள் இயந்திரத்தின் தேவைக்கு ஏற்ப மென்பொருள்கள் மற்றும் வன்பொருள்கள் மாற்றப்பட்டிருக்கும். இந்த இயந்திர கணினியைக் கொண்டு இயந்திர வேலைகளை மட்டுமே செய்ய முடியும்.
இருப்பினும் இதில் சில மென்பொருள்களை நிறுவ முடியும். அந்த மென்பொருட்கள் கணினிக்கு தேவையான வன்பொருள் தேவைகளை கவனிக்கும். உதாரணமாக பிளக்ஸ் பிரிண்ட் செய்யும் இயந்திரம் இதில் கணினி பொருத்தப்பட்டிருக்கும் கணினியின் மூலமாக பிரிண்ட் செய்யப்படும். மிஷின்களை இயக்கும் கணினியில் ஒரு சில அதிக திறனுடன் இருக்கும். இந்த இயந்திர கணினி விலை இயந்திரத்தின் தேவையைப் பொருத்து அமைகிறது.
முக்கிய சந்தேகங்களுக்கு பதில்
உங்களுக்கு பொதுவாக ஏற்படும் ஒரு சில சந்தேகங்களுக்கு பதில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கருத்துப் பெட்டியில் கேட்கவும்.
குறைந்த விலையில் கணினி எது வாங்கலாம்?
குறைந்தபட்சம் கணினிக்கு நீங்கள் 30000 ரூபாய் வரை செலவிட வேண்டும். இல்லையெனில் அது புதிய கால மென்பொருள்களை ஏற்காது.
எந்த கணினி சிறந்தது?
உங்களுக்கு வாரண்டி மற்றும் வேகம் போதுமானதாக இருந்தால் அந்தக் கணினி வாங்கிக் கொள்ளலாம். நீங்கள் வாங்கும் கணினி ஒரு பெயர் சொல்லக்கூடிய பிராண்ட் ஆக இருக்க வேண்டும்.
எந்த ப்ராசசர் வாங்கலாம்?
குறைந்தபட்சம் நீங்கள் இன்டெல் ப்ராசசர்ல் ஐ3 வாங்கலாம். ஏஎம்டி ப்ராசசர் எனில் ரைசன் 3 ப்ராசசர் வாங்கலாம்.
படிக்க : இன்டெல் மற்றும் ஏ எம் டி பிராசசர் ? வேறுபாடுகள்? மலிவானது? எது சிறந்தது? எதை வாங்கலாம்?
கேமிங் கணினி விலை எவ்வளவு?
நீங்கள் ஒரு விளையாட்டு விளையாடப் போகிறீர்கள் அல்லது ஒரு மென்பொருளை நிறுவ போகிறீர்கள் என்றால் அதற்கு நீங்கள் குறைந்தபட்சம் 40,000 முதல் 50,000 வரை செலவழிக்கலாம்.
கணினியின் அதிகபட்ச விலை எவ்வளவு?
கணினியின் அதிகபட்ச அளவு என்பது நீங்கள் கணினிக்கான செலவிடக் கூடிய அனைத்து விதமான பொருள்களின் வேகம், விலை, வசதி மற்றும் இன்னும் பல காரணங்களை பொறுத்து அமையும். மிகப்பெரிய பிரம்மாண்டமான கணினி விலை பல லட்சம் மதிப்பு இருக்கும்.
ரேம் எவ்வளவு வேண்டும்?
குறைந்தது ரேம் மெமரி அளவு 4gp இருக்குமாறு வாங்குவது சிறந்தது. அதற்குமேல் வேண்டுமானாலும் நீங்கள் அப்கிரேட் செய்து கொள்ளலாம். இந்த வசதி அனைத்து விதமான கணினிகளிலும் இருக்கும்.
படிக்க : ரேம் மற்றும் அதன் வகைகள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
வன்தட்டு ( CD Drive ) முக்கியமா?
இந்த காலத்திலும் ஒரு சிலர் வன்தட்டுகளை உபயோகப்படுத்தி வருகிறார்கள். எனவே இது உங்களுக்கு தேவை என்றால் வாங்கிக்கொள்ளலாம் அல்லது அப்கிரேட் செய்து கொள்ளலாம்.
கணினியின் ஆயில் எவ்வளவு?
ஒரு கணினியின் நீங்கள் நல்ல வன்பொருள் மற்றும் மென்பொருள் கொண்டு பயன்படுத்தி வந்தால் அந்தக் கணினி பத்து வருடங்களுக்கு மேல் உழைக்கும். சாதாரணமாக வாங்கக்கூடிய மடிக்கணினி அல்லது பிராண்டட் கணினிகள் மூன்று முதல் 5 ஆண்டுகள் வரை உழைக்கும்.
கணினியின் வேகத்தை அதிகப்படுத்த என்ன செய்ய வேண்டும்?
ஒரு கணினியின் வேகத்தை அதிகப்படுத்த விரும்பினால் அதில் உள்ள அனைத்து விதமான தேவையற்ற பைல்களையும் நீக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தாத மற்றும் உபயோகப்படுத்தாத மென்பொருள்களை நீக்க வேண்டும். உங்கள் பிராசஸர் மற்றும் கணினியில் இருந்து வெளியேறும் காற்று போக்குவரத்து சீராக இருக்கவேண்டும்.
கணினியின் உள்ளே குப்பை மற்றும் அழுக்கு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கணினியை அடிக்கடி உபயோகப்படுத்த வேண்டும். மின்சாரத்தை சிறிதாக கொடுக்க வேண்டும். இது போன்று ஒருசில செயல்களை சீராக செய்து வந்தால் கணினி வேகமாக இயங்கும்.
இந்த பதிவு உங்களுக்கு ஒருசில தகவல்களை கொடுத்து இருக்கும் என நம்புகிறேன். இந்த பதிவு பிடித்து இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிரவும். மீண்டும் ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கலாம். நன்றி.