virus-clean-guide-in-tamil-atozpc-in

Virus Clean Guide

ADVERTISEMENT

virus-clean-guide-in-tamil-atozpc-in
வைரஸ் கிளீன் செய்வது எப்படி?

நாம் அனைவரும் விண்டோஸ் கணினி தான் அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். அந்த விண்டோஸ் கணினியில் வைரஸ் மிகவும் சுலபமாக வந்துவிடும். இந்த வைரஸ் வராமல் தடுக்க பல மென்பொருள்கள் (Antivirus ) உதவியாக இருக்கிறது. ஆனால் அந்த மென்பொருள்கள் ஒரு சில நூறு செலவு செய்தால் மட்டுமே கிடைக்கும். அந்த மென்பொருள்களை வாங்க முடியாதவர்கள் ஒரு சில இலவச மென்பொருள்களை பயன்படுத்தி வைரஸ் இடமிருந்து தற்காலிகமாக பாதுகாத்துக் கொள்ளலாம். உங்களுக்கு முழுமையான வைரஸ் பாதுகாப்பு வேண்டுமென்றால் செலவு செய்தால் மட்டுமே அந்த மென்பொருள்கள் கிடைக்கும்.

வைரஸ் வந்துவிட்டால் என்ன நடக்கும்?

ஒருமுறை உங்கள் கணினிக்கு வைரஸ் வந்துவிட்டால் அது உங்கள் கணினியின் பல மாறுதல்களை ஏற்படுத்தும். உதாரணமாக கணினி திடீரென அணைவது, உங்களுடைய தரவுகள் காணாமல் போவது, உங்களுடைய தரவுகள் திருடப்படுவது, உங்கள் கணினி மெதுவாக இயங்குவது மற்றும் உங்கள் கணினியில் சூடு வருவது. இதுபோன்று உங்கள் கணினியில் ஏற்பட்டிருந்தால் கண்டிப்பாக உங்கள் கணினியில் வைரஸ் இருக்கும்.

படிக்க : கணினில் ஆண்ட்ராய்டு அப்ப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்வது எப்படி

வைரஸ் வகைகள்

கணினிக்கு வரக்கூடிய வைரஸ்களின் வகைகளைப் பற்றி நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த வைரஸின் வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1) ஸ்பைவேர் (Spyware)
2) மால்வேர் (Malware)
3) ஏட் வேர்ட் (Adware)
4) ரேன் சம் வேர் (Ransomeware)

1) Spyware

ஸ்பைவேர் வைரஸ் என்பது ஒரு உளவு பார்க்கும் வைரஸ் ஆகும். இந்த வைரஸ் உங்கள் கணினிக்கு வந்துவிட்டாள் நீங்கள் செய்யக்கூடிய அனைத்து விதமான அசைவுகளையும் அது மற்றொரு கணினிக்கு அனுப்பிவிடும். இந்த வைரஸின் முக்கிய காரணம் உங்களுடைய வெப்கேம் வீடியோ கவனிப்பது, உங்கள் பேங்க் தரவுகளை திருடுவது, உங்கள் கடவுச்சொல் மற்றும் பல தரவுகளை திருடுவது. இந்த திருடப்பட்ட அனைத்து தரவுகளையும் இந்த ஸ்பைவேர் மற்றொரு கணினிக்கு அனுப்பிவிடும். அந்தக் கணினியை பயன்படுத்துவோர் உங்கள் அனுமதி இல்லாமல் உங்களுடைய தரவுகள் அனைத்தையும் பார்க்க முடியும்.

ADVERTISEMENT

2) Malware

மால்வேர் என்பது ஒருவகையான வைரஸ் ஆகும். இது நமது தரவுகள் அனைத்தையும் பயன்படுத்த முடியாத வண்ணம் அழித்துவிடும் அல்லது மாற்றி விடும். இந்த மால்வேர் வந்து விட்டால் நமது கணினிக்கு பலவிதமான தொந்தரவுகள் ஏற்படும். உதாரணமாக கணினி திடீரென அணைந்து விடுவது, பல வகை பைல்கள் மாறி விடுவது, தரவுகள் அழிந்து விடுவது அல்லது மறைந்து விடுவது. இந்த மால்வேர் வைரஸ் கணினியின் முக்கிய இடங்களை தாக்கி கணினியின் செயல்பாட்டை முழுமையாக நிறுத்திவிடும். தேவையில்லாத திரைகள் வருவது மற்றும் செல்வது போன்று ஏற்படும்.

3) Ad-ware

ஏட்வேர் என்பது விளம்பரத்தை காட்டக்கூடிய ஒரு விதமான வைரஸ் ஆகும். இந்த வைரஸ் நமது தரவுகள் எதையும் திருடாது. இருப்பினும் இந்த வைரஸ் மூலமாக நமக்கு தேவையில்லாத விளம்பரங்கள் அனைத்தும் வரும். நாம் ஒரு விளம்பரத்தை தொடாவிட்டால் அந்த விளம்பரத்தை இது தொட்டு தேவையில்லாத சில செயல்களை செய்யும். இந்த வைரஸ் மூலமாக ஒன்றுக்கு மேற்பட்ட திரைகள் திறந்து விளம்பரங்கள் வரும். உதாரணமாக நீங்கள் குரோம் பிரவுசர் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது தேவையில்லாத புதிய புதிய திரைகள் திறந்து அதில் தேவையில்லாத விளம்பரங்கள் காட்டப்படும். இதை நீங்கள் நீக்காவிட்டால் உங்களுக்கு இதுபோன்ற விளம்பரங்கள் காட்டப்படும்.

4) Ransomware

ரன்சோம்வார் என்பது ஒருவிதமான வேகமாக பரவி வரும் திருடும் வைரஸ் ஆகும். ஆனால் இது நம் தரவுகள் எதையும் திருடாது. இருப்பினும் நமது தரவுகள் அனைத்தையும் வேறுவிதமான வடிவேல் மாற்றிவிடும். இந்த செயலுக்கு என்கிரிப்ஷன் என்று பெயர். இந்த என்கிரிப்ஷன் செய்யப்பட்ட தரவுகள் எதையும் நாம் திறந்து பார்க்க முடியாது. இவை அனைத்தையும் டீகிரிப்சன் செய்தால் மட்டுமே நாம் பார்க்க முடியும். இந்த டிகிரிப்சன் செய்ய ஒரு சாவி தேவைப்படும். அந்த சாவி உங்களுக்கு வேண்டும் என்றால் நீங்கள் பல்லாயிரம் ரூபாய் செலவு செய்தால் மட்டுமே கிடைக்கும். நீங்கள் செலவு செய்தாலும் அந்த சாவி கிடைக்கும் என்று உறுதி இல்லை. எனவே இது வராமல் தடுப்பதே நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.

படிக்க : முழு கணினியை உருவாக்குவது எப்படி? கணினியை உருவாக்க தேவையான பொருட்கள்?

வைரஸ் எப்படி வருகிறது

வைரஸ் அழிக்கும் முன்னால் அந்த வைரஸ் எப்படி உங்கள் கணினிக்கு வருகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். இந்த வைரஸ் ஆனது பல வழிகளில் உங்கள் கணினிக்கு வந்தடையும். அவை அனைத்தும் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1) இன்டர்நெட்

நீங்கள் உங்கள் கணினியை இன்டர்நெட் உடன் இணைக்கும் பொழுது வைரஸ் உங்கள் கணினிக்கு வரும். தேவையில்லாத வெப்சைட் உள்ளே செல்லும் பொழுது அந்த வைரஸ் உங்கள் கணினியில் புகுந்து கணினியை மாற்றிவிடும்.

2) மென்பொருள்

நம் அனைவராலும் அனைத்து விதமான மென்பொருள்களையும் வாங்க இயலாது. நமக்கு தேவையான ஒரு சில மென்பொருள்கள் காசு கொடுத்தால் மட்டுமே கிடைக்கும். அப்படி காசு கொடுக்க இயலாதோர் ஒரு சில தவறான வழி பக்கத்திலிருந்து திருடப்பட்ட மென்பொருள்களை தரவிறக்கம் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்வார்கள். இப்படி இன்ஸ்டால் செய்யும்பொழுது அது ஒரு சில வைரஸ் உள்ளடக்கம் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும். இப்படி இருக்கும் பொழுது அந்த வைரஸ் உங்கள் கணினிக்குள் உங்கள் அனுமதியுடன் புகுந்துவிடும்.

ADVERTISEMENT

3) சாதனங்கள்

உங்களுடைய நண்பர் அல்லது வேறு ஒருவரின் கணினியில் உங்களுடைய பென் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க் அல்லது மெமரி கார்டு போன்றவற்றை இணைக்கும்போது அந்தக் கணினியில் வைரஸ் இருந்தால் அது உங்கள் சாதனைக்கு வந்து உங்கள் கணினிக்கும் புகுந்துவிடும். இதுபோன்ற வைரஸ் அதிகமாக பரவுகிறது. இதன்மூலமாக அனைத்துவிதமான வைரஸ்களும் எளிமையாக புகுந்துவிடும்.

படிக்க : கணினி சேமிப்பாக வகைகள் மற்றும் அதன் விளக்கம்

வைரஸ் எப்படி தடுப்பது அல்லது அழிப்பது

வைரஸ் அழிக்க அல்லது தடுக்க ஒருசில மென்பொருள்கள் கிடைக்கிறது. அவை இலவசமாகவும் மற்றும் பணம் செலுத்தியும் பெற்றுக்கொள்ளமுடியும். இலவசமாக கிடைக்கும் மென்பொருள் மூலம் ஒரு சில வைரஸ் மட்டுமே அளிக்க முடியும் மற்றும் வைரஸ் வராமல் தடுக்க இயலாது. ஆனால் நீங்கள் பணம் கொடுத்து ஒரு மென்பொருள் வாங்கியிருந்தால் அந்த மென்பொருள் அனைத்துவிதமான வைரஸ்களையும் அழித்துவிடும் மற்றும் அது போன்ற வைரஸ்கள் வராமல் தடுத்துவிடும். உங்களுக்கு இந்த இரண்டு விதமான மென்பொருள்களில் எது தேவைப்படுகிறது என்று நீங்களே தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இலவச மென்பொருள்

வைரஸ் அழிக்கக்கூடிய இலவச மென்பொருள்கள் மற்றும் அது எந்தவிதமான வைரஸ் க்கு சரியானதாக இருக்கும் என்று கீழே பார்க்கலாம்.

1) R Kill Software

இந்த மென்பொருள் மூலமாக உங்கள் கணினியில் மென்பொருள் இன்ஸ்டால் செய்யும் முன்னால் அந்த மென்பொருளில் வைரஸ் இருந்தால் அதை தடுத்து விடும். உதாரணமாக உங்கள் நண்பர்களிடம் இருந்தே அல்லது தரவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருள்களை இன்ஸ்டால் செய்யும்பொழுது அதிலுள்ள வைரஸ் அழித்துவிடலாம். ஒருவேளை அந்த மென்பொருளில் வைரஸ் இருந்தால் இந்த மென்பொருள் அதைக் காட்டிக் கொடுத்துவிடும்.

2) Malware bytes Software

இந்த மால்வேர் பைட் மென்பொருள் மூலமாக ஒரு சில வைரஸ்களை அழிக்க முடியும். இருந்தாலும் இந்த மென்பொருள் இலவசமாகவும் மற்றும் பணம் செலுத்தியும் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இந்த இலவச மால்வேர் பைட் மென்பொருள் மூலமாக ஒரு சில வரம்புகள் உடன் செயல்படுத்த முடியும்.

3) ADW Cleaner

இந்த adw கிளீனர் என்பது விளம்பர வைரஸ்களை நீக்கும் ஒருவிதமான மென்பொருள் ஆகும். இது இலவசமாகவே கிடைக்கிறது. இதை நீங்கள் உங்கள் கணினிக்கு தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் உள்ள விளம்பர வைரஸ்களை அழிக்க முடியும்.

ADVERTISEMENT

படிக்க : கணினி மதர்போர்டு வாங்குவது எப்படி? தேவையான மதர்போர்டு தேர்வு செய்வது எப்படி?

வைரஸ் அழிக்கும் மற்றும் தடுக்கும் மென்பொருள்

உங்கள் கணினிக்கு வைரஸ் வராமல் இருக்க வேண்டும் அல்லது கணினியில் உள்ள வைரஸை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்றால் நீங்கள் ஒரு பணம் செலுத்தப்பட்ட வைரஸ் கிளீன் செய்யும் மென்பொருள் வாங்கி உபயோகப்படுத்த வேண்டும். இந்த மென்பொருள்கள் பல வகையில் உள்ளது. அவற்றில் உங்களுக்கு எது தேவைப்படுமோ அதை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

வைரஸ் கிளீன் செய்யும் மென்பொருளின் வகைகள்

  1. இன்டர்நெட் செக்யூரிட்டி ( Internet Security )
  2. டோடல் செக்யூரிட்டி ( Total Security )
  3. ரன்சோம்வார் செக்யூரிட்டி ( Ran-somewhere Security )
  4. சர்வர் செக்யூரிட்டி ( Server Security )
  5. விளம்பர செக்யூரிட்டி ( Ad where Security )
  6. வைரஸ் செக்யூரிட்டி ( Security )
  7. ப்ரோ செக்யூரிட்டி ( Pro / Prime Security )

மேலே கொடுக்கப்பட்டுள்ள வகைகளில் வைரஸ் அளிக்கும் அல்லது வைரஸ் தடுக்கும் ஆன்டி வைரஸ் மென்பொருள்கள் உள்ளது. உங்களுக்கு எது தேவைப்படுமோ அதை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

படிக்க : கணினித் துவங்கவில்லையா? இதை செய்து பாருங்க

உங்களுக்கு எது தேவைப்படும்

நீங்கள் இன்டர்நெட் ( Internet ) கனெக்ட் செய்யாமல் ஒரு கணினி உபயோகப்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு சாதாரணமான ஆன்டிவைரஸ் போதும்.

இன்டர்நெட் ( Internet ) மற்றும் பென்டிரைவ் ( Pen drive ) உங்கள் கணினியில் உபயோகப்படுத்துகிறார்கள் என்றால் உங்களுக்கு கட்டாயம் இன்டர்நெட் செக்யூரிட்டி அல்லது டோடல் செக்யூரிட்டி தேவைப்படும்.

பென் டிரைவை ( Pen Drive ) பயன்படுத்தாமல் இன்டர்நெட் மட்டும் பயன்படுத்தினால் உங்களுக்கு இன்டர்நெட் செக்யூரிட்டி தேவைப்படும்.

யுஎஸ்பி (USB) மட்டும் பயன்படுத்தினால் சாதாரண செக்யூரிட்டி போதுமானதாகும்.

ADVERTISEMENT

உங்கள் கணினி ஒரு சர்வர் கணினி என்றால் உங்களுக்கு சர்வர் ஆண்டிவைரஸ் தேவைப்படும்.
உங்களுடைய கணினியில் அனைத்து விதமான செயல் பாடுகளையும் பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்களுக்கு டோடல் செக்யூரிட்டி அல்லது பிரைம் செக்யூரிட்டி தேவைப்படும்.
உங்களுக்கு வேறு சில ஆப்ஷன் தேவைப்பட்டால் ( உதாரணமாக விர்ச்சுவல் கீ போர்டு, விபிஎன் ) நீங்கள் ப்ரோ செக்யூரிட்டி வாங்கிக் கொள்ளலாம்.

ஆன்ட்டி வைரஸ் விலை என்ன?

இந்த ஆன்ட்டி வைரஸின் விலை ரூபாய் 500 முதல் தொடங்கி 2 ஆயிரம் வரை இருக்கும். குறைந்த விலையில் ஒரு வருட பயன்பாடு மட்டும் இருக்கும். அதிக விலையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களுக்கு பயன்பாடு இருக்கும்.

குறிப்பு : நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆன்டிவைரஸ் வாங்கினால் அதன் விலை குறையும்.

இந்த ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் பல நிறுவனங்கள் மூலமாக உருவாக்கப்பட்டு வருகிறது. உங்களுக்கு அதில் எந்த நிறுவனத்தின் மென்பொருள் பிடித்து உள்ளதோ அதை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். உங்களுக்கு எந்த ஒரு வகை தேவைப்படுகிறதோ அதை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

ஆன்டிவைரஸ் கட்டாயம் தேவைதானா?

நீங்கள் உங்கள் கணினியுடன் இன்டர்நெட் பென்டிரைவ் அல்லது தரவு பரிமாற்றம் இவை எதையும் செய்யவில்லை என்றால் உங்கள் கணினிக்கு செக்யூரிட்டி தேவைப்படாது.
ஆனால் நீங்கள் உங்கள் கணினியில் இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தினால் கூட அதற்கு ஏற்றவாறு மென்பொருள் நிறுவ வேண்டும்.

படிக்க : அழிந்த தரவுகளை மீட்பது எப்படி? கணினியில்,மொபைல் போனில், மற்ற சேமிப்பகங்களில்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிரவும், மேலும் இது போன்ற பயனுள்ள கணினி பற்றிய அனைத்து விதமான தகவல்களை தெரிந்துகொள்ள நமது வலைதளத்தை அடிக்கடி பார்வையிடுக.
நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *